Results 1 to 2 of 2

Thread: சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0

    சுற்றங்கள் எனப்படும் நம்மை ஏந்தியவர்கள்

    நீண்டதொரு மெல்லிய படர் பனியின்
    அதிகாலை செஞ்சூரியக் கீற்றுகளின் வழியே
    மெல்ல விசை கூட்டும் பெருவியாதிக்கார முனகலாய்
    ஈரங்களற்ற வெற்றுக் காற்றாய் என் விசும்பல்கள்
    இன்றும் எவரைச் சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.
    அந்தப் புலம்பல்கள் உங்களைப் பற்றியானதாகவோ
    என் இசைவாகா உங்கள் புறச் செயல்களுடைத்ததாகவும்
    உங்கள் விழி நீர்க் கசியும் எனக்கெதிரான
    வன்மங்களை வசைபாடியோ அமையப் பெற்றிருக்கலாம்
    இன்னமும் நன்குணர்ந்திருக்கிறேன் அதை
    என் கரமிறுக்கும் உங்கள் கரப் பிணைப்புகளை
    காற்றினும் மெல்லிய உங்கள் மேனி வருடல்களை
    உச்சந்தலை மீதான மயிர்க் கோதல்களை
    என் புணர் விரோதங்களேற்று
    நிராயுதபாணியாய் என்னை அத்துவானக் காட்டில் கிடத்துவீர்கள்
    உங்கள் பெயர்கள் மட்டும் ஓதியலையப்படும் ஓர் வெளியில்
    என் பாடல்களை உரத்துப் பாடிக் கொண்டே
    மேலும் மேலும் என் விரோதம் கூட்ட முயல்வீர்கள்
    ஒரு தேர்ந்த வல்லூரின் இரைக் குறியை
    ஒரு சினச் சிங்கத்தின் சீற்றங்களை
    அதிர்விலும விரையும் புள்ளிமானின் எச்சரிக்கையுணர்வுகளை
    ஒருங்கிணைத்து எனக்காய் பிரயோகிப்பீர்கள்
    உங்கள் பெயர்கள் மட்டும் ஓதியலையப்படும் ஓர் வெளியில்
    என் பாடல்களை உரத்துப் பாடிக் கொண்டே
    என் உறுப்புகள் களைந்து அதன் குருதி ருசிப்பீர்கள்
    வடுக்களும் மறைந்து பூரணத்துவம் பெற்ற ஒரு நாளில்
    பாதை மறித்து என் நலன் கேட்பீர்கள்
    உங்கள் இடுப்போர கத்தியை தடவிக் கொண்டே.

    எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
    sunaithnadwi@gmail.com
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    அரவணைக்கும் இன்முகத்தில்
    ஒளிந்திருக்கும் வன்மனத்தை
    நண்பரின் கவிதை குறிப்பிடுகிறதாக நினைக்கிறேன்!

    சில வரிகள் என் ஞாபகத்திற்கு வருகிறது.

    இறைவனே!
    என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று
    பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்!


    நண்பரின் கவிதை நடை என்னைக் கவர்ந்தது, வென்றது.
    பாராட்டுகள்!

    கீற்றுத் தளத்தில் உங்கள் கவிதையைப் படித்து களிப்புற்றிருக்கிறேன். தமிழுலகம் கவனத்தில் கொள்ளவேண்டிய படைப்பாளி நீங்கள். மன்றத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி!
    Last edited by கௌதமன்; 25-12-2010 at 03:04 AM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •