Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: மனந்திறந்து உங்களோடு - 2010

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்லாலோசனை வழங்கியமைக்கு நன்றி காமாக்ஷி.

    கவனிப்பாரற்றுக் கிடக்கும் சுவடிகளில் நம் பார்வையைப் படியவைக்க முயற்சி செய்கிறோம்.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    மன்றத்தில் படைக்கப்படும் கவிதைகள் மற்றும் கதைகளுக்கு அந்த அந்த மாதங்களில் இந்த மாதக்கதைப் போட்டி இந்த மாதக்கவிதை போட்டி என்று வைத்து ஓட்டெடுப்பு நடத்தி வெற்றிபெறுபவர்களுக்கு இணைய காசுகள் அன்பளிப்பாக வழங்கலாமே!

    காமாட்சி அவர்கள் சொன்னது மாதிரி இதை இப்படியாக செயல்படுத்தலாம் என்பது என் கருத்து
    இது குறித்து முன்பே விவாதிக்கப்பட்டிருக்கிறது, நிர்வாக மன்றத்தில் மீண்டும் ஆலோசித்து தக்க முறை செயல் படுத்தப்படும்...
    அன்புடன் ஆதி



  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நானும் தோள் கொடுக்கிறேன் உங்களோடு..

    Quote Originally Posted by அறிஞர் View Post

    ஆண்கள், பெண்கள் என வருகிறோம். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்பது மன்றத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு தேவையற்ற தனிமடல்கள் அனுப்புவதை மன்றம் விரும்பவில்லை. ஒருவரின் பதிவுகளுக்கு அநாகரிகமாகப் பதில் சொல்வதையும் , முகம் சுழிக்க வைக்கும் படைப்புகளையும் மன்றம் விரும்பவில்லை.

    உங்களுக்கு தேவையெனில் எனக்கு தனிமடல் இடுங்கள் என்று வரும் பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும் அல்லது இந்த பதிவுகளை கண்டு பதிலிடகூடாது நன்கு அறிந்தவர்களை தவிர அல்லது பொது பார்வைக்கு அவர்கள் கூற விளையும் கருத்துகள் வைக்க பட வேண்டும் .

    இது முகம் சுளிக்கவைக்கும் பதிவுகள் என்று தோன்றினால் நிர்வாகத்தினால் அகற்றப்படும் என்று கூறி அந்த பதிவினை பொதுவில் வைக்காமல் அந்த பதிவருக்கு விளக்கம் கேட்டு செய்தி அனுப்பலாம் அந்த விளக்கம் ஏற்று கொள்ளபட்டால் அந்த பதிவினை பொதுவில் வைக்கலாம். தனிமடல் தொந்தரவு என்பது அந்த குறிப்பிட்ட முகவர் அதனை அனுப்பியவருக்கு நிர்வாகத்தினர் மூலமாக முதலில் மறைமுகமாக ,பின்னர் மறுமுறை அதுபோல் நிகழ்ந்தால் பொதுபடையாக எச்சரிக்கை செய்தி இடலாம் இதன் மூலம் மற்றவர்கள் அவரை பற்றி அறிந்து கொள்வர் ..இது போன்ற விசமிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்

    Quote Originally Posted by KAMAKSHE
    சிறிய விண்ணப்பம் அறிஞர் அவர்களுக்கு.

    கதைப் போட்டி அல்லது கவிதை/நகைச்சுவை போட்டி குறித்து:

    ஏன் போட்டிகளுக்காக தனியாக , புதிதாக யாரும் மன்றத்தில் படித்திராத திரிகளை அனுப்பச் சொல்கிறீர்?

    அவை தினம் தினம் மன்ற உறுப்பினர்கள் படைக்கும் திரிகளாகவே இருக்கலாமே. ஏன் இருக்கக் கூடாது?

    ஏனெனில் உறுப்பினர் படைக்கும் ஒவ்வொரு திரியையும் யாராவது படிக்கமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? பாத்து புடிச்சிருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லாருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லா இல்லன்னு சொல்வாங்களா? இப்படி பல மாதிரி, தாறு மாறா எங்க மனசு நெனச்சு கிடந்து தவிக்கும் அய்யா! கண்டிப்பா.

    எப்படி சொல்றேன்னா.. பழைய தேதிகளுக்குச் சென்று பல படைப்புகளை படித்து பார்த்தேன். முக்கியமா மிக அருமையான கதைகள், கவிதைகள் கவனிப்பாரற்று ஏதோ 2 பேர் மட்டும் விமர்சித்து பின் யாருமே சீண்டாமல் கிடக்கின்றன. சரியா நான் சொல்வது?

    பழையன கழிதல்..புதியன புகுதல் ன்னு இருக்கு நிலமை.

    அதாவது விளையாட்டு, கேளிக்கைகள் செய்திகள் மட்டுமே நாள், மாத, வருட, பழசு, புதுசுன்னு கணக்கில்லாம எல்லாரும் பார்த்து,படித்து எழுதுகிறார்கள்.

    உயிரைக் கொடுத்து, ரத்தம் சிந்தி, தூக்கம் இன்றி எழுதப்படும் கதை, கவிதைகள் அனைத்தும் நிறைய பேர் ( i mean majority) படிக்காமல் புழுதி பட்டு கிடக்கிறதே...

    போட்டி என்று அறிவித்து.. டிசம்பர் மாத கவிதை, கதைகளையே ஏன் போட்டிக்கு விடக்கூடாது?

    அல்லது போன வருடத்தில் உள்ள ஜுலை மாத படைப்புகளைக் கூட போட்டிக்கு விடலாமே?

    சரி இதில் தெரிந்தவர், நண்பர்களுக்கு ஓட்டு நிறைய கிடைக்கும் என்ற அச்சம் இருக்கும். இருந்தால் என்ன? எத்தனை ஓட்டு அப்படி வந்துவிடப்போகிறது?

    அப்படியே இருந்தாலும் ஊக்குவிப்பது ஒன்று தானே மன்றத்தின் நோக்கம்? நீங்கள் இதை கலந்து ஆலோசித்துப் பாருங்கள். போட்டி என சொல்லும் நேரம் பார்த்து இந்த கிரியேடிவ் மனது இருக்கிறதே அது மக்காரு பண்ணுது சாமி..

    தவறா ஏதாவது பேசி இருந்தா கண்டிப்பா மனிச்சிடுங்க.

    நான் பல நாளா யோசித்து தான் இந்த விஷயத்தைச் சொல்றேன். மன்றத்தின் ஒவ்வொரு எழுத்தும். படிக்கப் பட வேண்டும்.

    ‘நிழற்படம்’ மூலம் தெரிகிறது இதழ் தொகுப்பாளர் மட்டும் நன்கு அனைத்தையும் படிக்கிறார் என்று.. மற்றவர் எப்போ படிக்கறது?.

    தவறு இருந்தால் மன்னியுங்கள்.
    நண்பர் கூறியதும் சரியான கருத்தாக படுகிறது பழங்க்கதைகள் படிக்கையில் அதனை படித்தவர்கள் இட்ட பின்னோட்டங்கள் குறைவாகவே உள்ளன .ஒரு பின்னூட்டம்தான் ஒரு படைப்பாளியின் திறமையை வெளிக்கொணரும் என்பதில் ஐயமேதும் இல்லை .இவ்வாறு நிகழாமல் இருக்க போட்டியின் போது மட்டும் புதிய படைப்புகள் அளிக்க பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு விழா காலங்களிலும் ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டியினை நடத்தலாம் .இவ்வாறு செய்வதன் மூலம் புதிய படைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் .மேலும் மன்றத்தின் பொறுப்பு கூடும் . .இன்றைய தினம் மன்ற நண்பர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் தாண்டினாலும் பின்னோட்டம் இடுபவர்கள், படைப்புகள் கொடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது .இதற்க்கேனும் இவ்வாறு செய்வதன் மூலம் ஏதேனும் ஒரு மாற்றத்தை எதிபார்க்கலாம் ..தற்போது மன்ற உறுபினர்களின் எண்ணிக்கை என்ன நிர்வாகி அவர்களே?

    என்றும் மன்றத்தின் நாலாவது தூணாக என்றென்றும் ....
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 19-01-2011 at 11:51 AM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by KAMAKSHE View Post
    ஏனெனில் உறுப்பினர் படைக்கும் ஒவ்வொரு திரியையும் யாராவது படிக்கமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? பாத்து புடிச்சிருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லாருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லா இல்லன்னு சொல்வாங்களா? இப்படி பல மாதிரி, தாறு மாறா எங்க மனசு நெனச்சு கிடந்து தவிக்கும் அய்யா! கண்டிப்பா.
    தரமான படைப்புகளை வழங்குபவர்களின் எண்ணிக்கையையும், பின்னூட்டமிடுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க..

    1) படைப்புகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை [ ஏற்கனவே மன்றத்தில் உள்ள வழிமுறைதான். இதில் பதிவின் தரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். வெறுமனே எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது, பதிவின் கருத்து, எழுத்து நடை, பிழை தவிர்ப்பு ,... ஆகியனவற்றிற்கேற்ப புள்ளிகள் வழங்கலாம். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில் இணைய காசுகளும், பட்டங்களும் வழங்கலாம். இந்த பொறுப்பை பொறுப்பாளர்கள் / தொகுப்பாளர்கள் ஏற்க வேண்டும். இதன் மூலம் பதிவுகளின் தரம் உயரக்கூடும்(?)].

    2) பின்னூட்டம் என்பது வெறுமனே ‘நன்றி , பாராட்டுகள் போன்ற சம்பிரதாய வார்த்தைகளாக இல்லாமல் படைப்புகளை நன்கு அலசும் விதத்தில் இருந்தால் சிலசமயம் படைப்பைக் காட்டிலும் பின்னூட்டம் சிறப்பாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு படைப்பு கவிதையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான பாராட்டையோ, விமர்சனத்தையோ எதிர்கவிதையாகவே பின்னூட்டமிடலாம். அத்தகைய பின்னூட்டங்களை திரியைப் பதித்தவர்கள் சிபாரிசு செய்யலாம், பொறுப்பாளர்களும், தொகுப்பாளர்களும் அதனை இனங்கண்டு பின்னூட்டமிட்டவர்களுக்கு புள்ளிகள் வழங்கலாம்.

    3) பின்னூட்டங்களில் எதிர்கருத்துகள் அதிகம் வரவேற்கப்படவேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறமையும் அத்ற்கு பதில் அளிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் எதிர்ப்பு கண்மூடித்தனமானதாக இருக்கக் கூடாது. நியாயமானக் கருத்தாகவிருந்தால் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் எதிர்கருத்துகள் பதிக்கப்படவேண்டும். அதே சமயத்தில் மனம் புண்படும்படியானக் கருத்துகளோ, தனிமனித விமர்சனமோ, பொத்தாம்பொதுவான கருத்துகளோ பதித்தால் புள்ளிகளை குறைக்கலாம். பண்பட்டவர் பட்டத்தை திரும்பப் பெறலாம். பின்னூட்டங்களில் எதிர்கருத்துகளில் நயத்தகு நாகரிகம் இருந்தால் அதிகப் புள்ளிகள் வழங்கலாம்.

    4) தனி மடல் அனுப்புவது முற்றிலும் தவறானதல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. பதிவைப் பற்றிய ஒரு கருத்தை வெளிப்படையாக கேட்காமல் தனிப்பட்ட முறையில் கேட்பது நாகரிகமான பழக்கமே. ஆனால் அதை விரும்பாதவர்களுக்கு அனுப்புதல் தவறு.

    இதனால் படைப்புகளின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா?

    நமக்கு தேவை எண்ணிக்கையல்ல. தரம்! தரம் நன்றாக அமைந்தால் சிறந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!

    இது குறுகிய காலத் திட்டம் அல்ல. ஒரு நீண்டகால திட்டம்.

    இந்தக் கருத்துப் பற்றி தோழர்கள் விமர்சிக்கலாம்!
    Last edited by கௌதமன்; 19-01-2011 at 05:12 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    தரமான படைப்புகளை வழங்குபவர்களின் எண்ணிக்கையையும், பின்னூட்டமிடுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க..



    இது குறுகிய காலத் திட்டம் அல்ல. ஒரு நீண்டகால திட்டம்.

    இந்தக் கருத்துப் பற்றி தோழர்கள் விமர்சிக்கலாம்!
    கௌதமன் வழிகாட்டுதல்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறது. பண்பாளர்கள், தூன்கள் , நிர்வாகிகள் இதனைப்பற்றி யோசிக்கலாம். .
    உன்னையே நீயறிவாய்

  6. #18
    புதியவர்
    Join Date
    23 Oct 2010
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    மன்றத்தின் விதிமுறைகளை நான் ஏற்கிறேன்....

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    புதிய பொலிவுக்கும் புதிய அறிவுரைகளுக்கும் பாராட்டுக்கள்...!

  8. #20
    Awaiting பண்பட்டவர் kay's Avatar
    Join Date
    02 Oct 2005
    Location
    Chennai
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    12,878
    Downloads
    13
    Uploads
    0

    Smile

    புதிய பொலிவுடன் தமிழ் மன்றம் இயங்குவது பற்றி மகிழ்ச்சி! மன்ற விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்!
    வாழ்க வளமுடன்! என்றும் அன்புடன்!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •