அன்பு மன்ற உறவுகளே....

அனைவருக்கு நிர்வாக குழுவின் வணக்கங்கள்.

பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இணையத்தில் இணைக்கு உறவுப்பாலமாக மன்றம் செயல்படுகிறது. ஒர் எண்ணம் கொண்ட நல்ல நண்பர்களை இதன் மூலம் பெறுகிறோம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

தமிழர் என்கிற ஒரு நோக்கத்தோடு இணைந்துள்ளோம். நாடு, மதம், அரசியல், சாதிக்கு அப்பாற்பட்டது மன்றம். ஒருவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும் என்பதே எம் விருப்பம்.

ஆண்கள், பெண்கள் என வருகிறோம். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்பது மன்றத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு தேவையற்ற தனிமடல்கள் அனுப்புவதை மன்றம் விரும்பவில்லை. ஒருவரின் பதிவுகளுக்கு அநாகரிகமாகப் பதில் சொல்வதையும் , முகம் சுழிக்க வைக்கும் படைப்புகளையும் மன்றம் விரும்பவில்லை.

சில விஷமிகள் நல்லவர் போன்ற தோற்றத்துடன் தோன்றி... சிலரை சங்கடத்தில் ஆழ்த்துவது வருத்தத்தை தருகிறது. நிர்வாக குழு விஷமிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.

தவறாக பதிபவர்கள், தனிமடல் அனுப்புபவர்களை எங்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

2011ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
நிர்வாக குழு