Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 56

Thread: நமக்குள்ளே இருப்பதென்ன... ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?

                  
   
   
  1. #13
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    நிஷா அக்கா ரெம்பவே எனக்க மேல கோபமா
    இருக்கிறாங்க போல நினைக்கிறேன் .........

    நண்பனே கோப பட்டால் அன்னியர்கள் விடவா செய்வார்கள் ,,,,,,,,

    என்ன கோபமோ அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும் ........

    happy x"mas வாழ்த்துக்கள் .....

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    தோல்
    உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு
    மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை
    நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது..


    ஈரல




    நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது
    மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்
    விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

    ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது


    புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

    நமது முகத்தில் 60 தசைகள் உள்ளன நாம் சிரிக்கும் போது 5 முதல் 55 தசைகள் வேலை செய்கின்றன

    நமது வயற்றினுள் (colon) 400 வகையான பாக்டிரியாக்கள் வாழ்கின்றன..

    நமது உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் நம் கால்களிலும் கைகளிலும் உள்ளது.

    மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

    நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

    நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

    ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

    நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அலர்ஜி

    நாம் எல்லோருமே அலர்ஜி பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்

    அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்ற நோயினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும்.

    அலர்ஜி ஓவ்வொருவருக்கும் பல வித வேறுபாடான காரணங்களால் ஏற்படும்.

    சிலருக்கு மீன், மாமிசம் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
    வேறு சிலருக்கு முட்டை, பால் போன்ற உணவுப் பொருட்களும்
    கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளும், காபி, தேனீர் போன்றவைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

    பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும், ஊசி போட்டுக் கொள்வதாலும் ஒவ்வாமை ஏற்படும்.

    இது இதனால் என்பதெல்லம் அலர்ஜிக்கு கிடையாது. .. அதிலும் தோலில் ஏற்படும் அலர்ஜி மிகவும் சிரமத்தைக்கொடுக்கும்.

    ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கும் குறிப்பாக,

    எந்தப் பொருள் ஒவ்வாமை அறிகுறிகளை அல்லது ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல
    !

    பொதுவாக தும்மல் நோய், விஷக்கடி போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கொண்ட ஒவ்வாமை தன்மையுடையோருக்கும்,
    அதிலும் குறிப்பாக ஒவ்வாமையினால் ஆஸ்துமா இழுப்பு வரக் கூடியவர்களுக்கும்,அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்களைக் கண்டறிய,தோலின் மேலோட்டமாகச் செய்யப்படும் பரிசோதனையே ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்பதாகும்.இதுதான் அனைவராலும் அலர்ஜி டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த முக்கியமான பரிசோதனையைச் செய்வதற்காக, நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பல வகையான சந்தேகிக்கப்படும் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான கரைசல்களை (Diagnostic Allergens) ஒவ்வாமை நிபுணர்கள் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள், காளான்கள், தூசிகள், மர வகைகள், பார்த்தீனியம் போன்ற தாவரங்கள், இலைகள், பூச்சிகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள், ரோமங்கள், சிறகுகள் மற்றும் சைவ, அசைவ உணவுப் பொருட்கள், பழ வகைகள் போன்றவையாகும். இதிலும் மிக முக்கியமானது, வீட்டுத்தூசி உண்ணி (House Dust Mite) அல்லது பூச்சியின் கழிவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கரைசல்களை தோலின் மேல் துளிதுளியாக விட்டு சோதனை செய்து ஓவ்வாமை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதற்குரிய சிகிச்சைகளை தொடர வேண்டும்.


    தொடர்ந்த தும்மல் ,கண்களில் நீர் வடிதல் சுவாசிப்பதில் பிரச்சனை , உடலில் தடிப்பு ஏற்படுதல் போன்றவித்தியாசமான மாறுதல்கள் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் சென்று அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் . உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள் உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நோய் இது. சுவாசத்துடன் சம்பந்தப்பட்டது.. உங்கள் குழந்தைகள் மைதானங்களில் விளையாடி விட்டு வரும் போது தொடர்ந்து தும்மினாலோ உடம்பில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவதாய் சொன்னாலோ அல்லது உடமபில் சிறு சிறு தடிப்புக்கள் ஏற்பட்டாலோ உடனடி சிகிச்சை தேவை
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஒவ்வாமை பற்றி பலரும் அறிய தகவல் தந்த Hega வுக்கு நன்றி. ஒவ்வாமையின் கொடுமையை உணர்ந்தவள் என்றமுறையில் இப்பதிவு எனக்கும் பயனுள்ளதே.

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    பசிக் கொண்டவரின் காதுக்கு தாளிப்பின் சத்தம் சங்கீதமாகக் கேட்கலாம்.(நன்றி: கவிப்பேரரசு).ஆனால் எங்கள் தெருவில் எந்தவொரு வீட்டில் தாளித்தாலும் எனக்கு இருமல் வரும்.ஒவ்வாமை...
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    ஒவ்வாமை இன்று நாட்டில் பலபேருக்கு இருக்கிறது. அருமையான திரி ஆரம்பித்து அதை விளக்கியமைக்கு பாராட்டுக்கள் Hega

    சிறப்பு பரிசாக 20 இ.பணம் ஊக்கப்பரிசாக தருகிறேன்



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    நானும் ஒவ்வாமையால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவர் கொடுத்த ஆலோசனை அலர்ஜி டெஸ்ட் எடுப்பது தான். உங்கள் திரியை பார்த்த பின் தான் தெரிகிறது, ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கரைசல்களை தோலின் மேல் துளிதுளியாக விட்டு சோதனை செய்வார்கள் என்று , ஆனால் மருத்துவர் சிறு சிறு ஊசியை தோலில் செலுத்தி பரிசோதிப்பார்கள் என்று சொன்னார். அதனால் பின் விளைவுகள் ஏதும் உள்ளதா? நான் இந்த மாதக்கடைசியில் பரிசோதனைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    பயம் வேண்டாம் சக்தீம்

    அந்தசிறப்புக்கரைசல்களை உங்கள் தோலின் மேல் துளியாக விட்டு சிறு ஊசி கொண்டு குத்திபார்ப்பார்கள். வலிக்காது எறுப்பு கடிப்பது போல் இருக்கும் .உங்களுக்கு ஒவ்வாமைஇருந்தால் அந்த எது, அல்லது எப்பொருள் ஒவ்வாமையோ அந்த கரைசல் பட்ட இடம் மட்டும் சின்னதாக வீங்கி விடும். அதற்கேற்ப மருத்துவ நடவடிக்கை இருக்கும்.

    மருத்துவ ஆலோசனைய முறையாக பின் பற்றுங்கள்.
    பழங்கன் ,கனிகள், காய்கள், தானியங்கள், இயற்கை,மிருகங்கள் ,பறவைகள், மகரந்தம் பருப்பு வகைகள் என எதனல ஒவ்வாமை உண்டாகுகிறதோ அதிஅ தவிர்க்கலாம

    கைளிலோ முதுகிலோ தன இந்த டெஸ்ட் செய்வார்கள். சிறிது நேரத்தில் அந்த அடையாளம் கூட போய் விடும்.


    கலக்கம பயமோ வேண்டாம் பின் விளைவுகளும் கிடையாது.

    அலர்ஜி பற்றி மேலுமாக உங்களுக்கு தகவல் தேவையெனில் கேளுங்கள் இயன்ற வரை பதில் தருகிறேன்.


    இங்கே ஜேர்மன் மொழியில் மருத்துவம் சம்பந்தமான மொழிபெயர்ப்புக்கு செல்வதால் ஓரளவு அறிந்திருக்கிறேன்.


    ஒவ்வாமையின் பாதிபுக்கள் தொடரும்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அலர்ஜியினால் ஏற்படக்கூடிய நோய்கள்


    அலர்ஜியின் அறிகுறி ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு சிலருக்கு தும்மல்,மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம் ,அரிப்பு, மூச்சடைப்பு,மூச்சுத்திண்றல் வாந்தி, குமட்டல். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

    இப்படிப்பட்ட அலர்ஜியினால் சுவாசப்பாதை , உணவுப்பாதை பாதிக்கப்பட்டால் மிகவும் சிரமப்பட வேண்டும்

    உடல் அங்கங்கு சிவந்து தடித்தல், ஒத்துக்கொள்ளாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், எக்சிமா என்னும் தோல் நோய்,தொடர் வலிகளால் ஏர்படும் மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காதடைப்பு போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும்பல் வேறு நோய்களாகும்.

    இவ்வாறான அறிகுறிகள் இருந்தாலும் வைத்தியரிடம் சென்று அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    மேற்கொள்ளப்பட்ட தோல் அலர்ஜி டெஸ்டுகளின் மூலம் கண்டறியப்பட்டஉடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள முறையாகப் பட்டியலிட்டுத் தவிர்க்க முடிந்தவற்றத்தவிர்த்து முடியாத பலவகை மகரந்தத்துகள்கள், காளான், முடடைகள், வீட்டுத் தூசி, சாலைத் தூசி, கரப்பான், பாச்சான், வீட்டுத்தூசி பூச்சி போன்றவற்றிற்கு முறையாக அலர்ஜித் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும்.

    இவ்வகையான தடுப்பூசி சிகிச்சை முறை, அலர்ஜியினால் வரும் அனைத்துவகைத் தும்மல் நோய்களைமுழுமையாகக் குணப்படுத்வடன் மற்ற அலர்ஜிகளால் வரும் ஒவ்வாமை ஆஸ்துமா, ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைக்கும் அர்டிகேரியாநோய்களும் வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகின்றது.

    உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டால் எந்தப்பொருட்கள் மற்றும் காரணிகள் அவர்களுக்கு அலர்ஜியைத் தோற்றுவிக்கிறது எனக்கண்டு அவைகளைத் தவிர்க்க முயலுங்கள்
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நிறைய படித்திருப்பார்கள் . ஆனால் வியாதிகளைக்குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நம் உடலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களின் அறிகுறிகளை கண்டும் காணாது இருந்து விட்டு நோய்களின் பின் விளைவுகள் அதிகரிக்கும் போது அவஸ்தைப்படுவதுடன் பணத்தையும் செலவழித்து கஷ்டப்படுவார்கள்.

    எந்த நோயையுமே நாம் முன்னாலேயே இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் ஓரளவுக்கு நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

    அலர்ஜி தானே என நாம் அலட்சியமாக இருக்கும் வியாதி எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் எனும்
    நோக்கிலேயே இதை வெளியிட்டேன். இதற்கு மேல் பகுதியில் அலர்ஜியின் அறிகுறிகளையும் தொகுத்துள்ளேன் படித்துப்பாருங்கள் . கவனமாய் இருங்கள். எதையும் வர முன் காப்போம்



    இந்த அலர்ஜியை ஆரம்பத்திலேயே கவனிக்காது போனால் அது தரும் எதிர் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்.


    பாதிக்க்பட்ட ஒரு சகோதரியின் கண்ணீர் கதையை இங்கே பகிர்ந்து கொள்வேன். பொறுத்திருங்கள்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அலர்ஜியினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் கதை இது

    அவரின் முந்தைய தோற்றம் இது






    அல்ர்ஜியினால் பாதிக்கப்பட்டபின்..

    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •