Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 45 of 45

Thread: முதற்றாய்மொழி - நம் தமிழ்

                  
   
   
 1. #37
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  44
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  20,297
  Downloads
  2
  Uploads
  2
  நண்பருக்கு!

  தங்கள் கேள்வி உண்மையிலேயே சிந்தனையைது தூண்டியது. அதன் விளைவாக குரங்கு என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளதா என்றத் தேடலின்போது கிடைத்தப் பாடல் இது.கம்ப இராமாயணத்திலும் ’குரக்கினத்தரசு’ என்று வாலி வதைப் படல்த்தில் சொல்லப்பட்டிருந்ததாக சிறு நினைவு. (மன்னிக்கவும்! பள்ளிக் காலத்தில் படித்தது சரியாக நினைவில் இல்லை)

  புறநானூறின் 378ம் பாடல்

  தென் பரதவர் மிடல் சாய,
  வட வடுகர் வாள் ஓட்டிய
  தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
  கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
  நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
  புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
  பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
  அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
  எஞ்சா மரபின் வஞ்சி பாட,
  எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
  மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
  தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
  இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
  விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
  செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
  கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
  வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
  நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
  செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு,
  அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
  இருங்கிளைத் தலைமை எய்தி,
  அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

  சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்னும் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கின்படி இத்திரிக்கு தூண்டுகோலாக விளங்கும் நண்பர் ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி!
  Last edited by கௌதமன்; 29-12-2010 at 12:26 PM.
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

 2. #38
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  44
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  20,297
  Downloads
  2
  Uploads
  2
  நடுத்தரைக் கடல் நாடுகளில், குமரிக்கண்ட நகர அழிவையடுத்து, தமிழர்களின் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். எனினும் பூம்புகாரிலும் சிந்துவெளியிலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள், மெசபட்டோமியாவில் இதுவரைக் கிடைக்கவில்லை. மெசபட்டோமியப் பகுதிகளில் காணப்படும் வரிவடிவங்கள் முதன்முதலில் சுமேரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும். சுமேரியர்கள் கி.மு.5000 ஆண்டுகளில் சிந்துச்சமவெளியிலிருந்து புலம்பெயர்ந்து சென்றிருக்கலாம். சுமேரிய எழுத்துமுறை கி.மு.4000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை என ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். கி.மு.10000 ஆண்டுகளில் தமிழரின் முதல் குடியேற்றமும் நிகழ்ந்துள்ளதைக் கருத்திற்கொண்டு இடைப்பட்ட 5000 ஆண்டுகளில், மெசபட்டோமியாவின் மொழிகள் பற்றி ஆய்வுச் செய்யச் சரியானச் சான்றுகள் கிடைக்கவில்லை என அறிவியலார் கூறுகின்றனர்.

  சுமேரியர்கள் வரிவடிவ எழுத்துமுறையை மெசபட்டோமியவில் அறிமுகம் செய்தவர்களாவர். சிந்துவெளியில் அவர்கள் அறிந்திருந்த தமிழ் வரிவடிவங்களை, அதே முறையிலும் சில மாற்றங்களுடன், மெசபட்டோமியாவில் கையாண்டனர். ஆப்பு எழுத்துமுறையை கி.மு.4000 ஆண்டுகளில் சுமேரியர் நடைமுறைப்படுத்தினர் என்றாலும் தமிழ் வரிவடிவங்களும், அவர்களது குறிப்புகளில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கில்கமேஷ் என்ற பெயர்ச்சொல், சிந்துவெளின்யின் தமிழ் எழுத்துகளாலாயே சுமேரிய மொழியில் அறியப்பட்டுள்ளது. சிந்துவெளியின் தமிழ் வரிவடிவங்கள், சுமேரிய வரிவடிவங்களில் பெருமளவில் அறியப்பட்டுள்ளன. இவ்வரிவடிவங்களையே அக்காடிய மொழியில் பயன்படுத்தினர். அக்காடிய , செமெட்டிக், உகாரிய மொழியில் சுமேரியரின் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  போனீசியர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்து ஒரு புதிய முறையைக் கண்டனர். இது பிராமி எனப்பட்ட தமிழின் புதிய வரி வடிவத்தையொத்ததே என்பது இரா.மதிவாணன் போன்ற ஆய்வாளர்கள் முடிவாகும். போனீசியர்களின் புதிய எழுத்துமுறை எபிரேய மொழி முதலில் ஏற்றுக்கொண்டது. விவிலியத்தின் பெரும்பகுதிகள் இம்முறைகளில் எழுதப்பட்டவைகளே. இதே முறையை கிரேக்கர்களும் ஏற்றுக்கொண்டனர் என்று எரடோட்டஸ் கூறுகிறார். போனீசியர்கள் தாங்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் எல்லாம் இம்முறையை அறிமுகம் செயதனரென்றும் மேலும் கூறுகிறார். காட்மஸ் என்ற போனீசியரே இம்முறையைக் கிரேக்க நாட்டில் அறிமுகம் செய்தாரென்பதும் எரடோட்டஸின் குறிப்புகளிலிருந்து தெரிய வருவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அத்தகைய போனீசியர்கள் தமிழ் இனத்தவரா?
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

 3. #39
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  6,871
  Downloads
  12
  Uploads
  0
  இந்த திரியில் உள்ள அனைத்து விரிவுரைகளையும் படித்துவிட்டேன். நண்பர் கெளதமனின் இந்த ஆராய்ச்சிக்கு எனது நன்றிகள். லெமூரியாவை பற்றிய எனது நெடுநாளைய பல கேள்விகளுக்கு இந்த திரியில் விடைகிடைக்கும் என்று நம்புகிறேன்.

  நண்பர் ராஜ் அவர்களுக்கும் எனது நன்றிகள்

  தொடருங்கள் கெளதமா!  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

 4. #40
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  74,631
  Downloads
  16
  Uploads
  0
  சங்க இலக்கியத்திலிருந்து சான்று காட்டியமைக்கு நன்றி.தங்களுடைய
  தமிழார்வமும்,ஆய்வுத் திறனும் மெச்சத்தக்கது.கம்பர் வாழ்ந்த காலம்
  பன்னிரண்டாம் நூற்றாண்டு. இராமாயணத்தில்,"குரங்கு" என்ற சொல் பல இடங்களில்
  வந்துள்ளது என்பதை நான் அறிவேன்.ஆகையால்தான் தொல்காப்பியத்
  திலிருந்தும்,சங்க நூல்களில் இருந்தும் சான்று கேட்டேன்.
  தமிழ் மொழியில் வினையின் அடியாகவும், ஒலியின் அடியாகவும் பிறக்
  காத சொற்கள் பல உள்ளன.உதாரணமாக தலை,கால்,செவி,வாய். நான்,
  நீ, நீர்,ஒளி,இருள் போன்றவை. "மாடு","கரடி","குரங்கு" போன்ற சொற்
  களும் இத்தகையனவே என்பது என் கருத்து.
  நாயின் குரைப்பு ஒலிக்கும் அதன் பெயருக்கும் என்ன தொடர்பு உள்ளது?
  பூனையின் கத்தலுக்கும் அதன் பெயருக்கும் என்ன தொடர்பு உள்ளது?

  மொழியியல் வல்லுனர்கள்தான் இதற்குத் தக்க பதில் கூறமுடியும்.

 5. #41
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  44
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  20,297
  Downloads
  2
  Uploads
  2
  Quote Originally Posted by M.Jagadeesan View Post
  மொழியியல் வல்லுனர்கள்தான் இதற்குத் தக்க பதில் கூறமுடியும்.
  தங்களின் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் முதற்கண் நன்றி!

  நீங்கள் குறிப்பிட்ட சொற்களுக்கு பாவாணரின் நூற்களில் பதில் உள்ளனவா எனத் தெரியவில்லை? தேடிப்பார்ப்போம் உங்களோடு நானும்!
  நன்றி!
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

 6. #42
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  44
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  20,297
  Downloads
  2
  Uploads
  2
  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறியப்பட்ட சிந்துவெளி நாகரிகமும், ஈராக் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளும்

  ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை உணர்த்தின. மொகஞ்சதாரோ நகரின் ஊர் அமைப்பு, பாபிலோன் நாட்டின் ஊர் (பெயரைக் கவனியுங்கள் நகரத்தின் பெயர்- ஊர்)

  நகரை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கட்ச் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல சிந்துவெளிப்பொருட்கள், ஊர்

  நகரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஊர் நகரை ஆய்வு செய்தோர், அவை சுமேரியர் என்ற இனத்தாரின் முயற்சியில், கி.மு.3500 ஆண்டுகலில்

  உருவாக்கப்பட்ட நகரமே எனக்கண்டறிந்தனர். அம்மக்கள் பயன்படுத்திய வரி வடிவங்களும் கண்டெடுக்கப்பட்டு, அவை படிக்கப்பட்டன. அவை முழுமையான பொருளில்

  இதுவரை படிக்கப்படவில்லையென்றாலும்கூட படிக்கப்பட்ட வரிவடிவங்கள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட வரிவடிவங்களை ஒற்றியேக் காணப்பட்டன.

  இதனடிப்படையிலேயே சுமேரியர் - சிந்துவெளி மக்கள் ஆகியோர், ஓரின மக்களேவென்று, முதன்முதலில் ஈராஸ் பாதிரியார் அறிவித்தார்.  தமிழகத்திருந்தவர்கள் தமிழகத்திலிருந்து சிந்துவெளிக்கு எப்போது சென்றனர்? தமிழரென அறியப்படும் சுமேரியர் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததற்கான காரணியங்கள்

  என்ன? வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மேலை நாட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் எவ்வாறு இடம் பெற்றன?தமிழர்களின் வரலாற்றைத் தோண்டியெடுக்க

  வேண்டுமானால், குமரிக்கண்டக் கொள்கைகளையும், தமிழரின் வெளிநாட்டுப்பரவல் என்ற இருக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டால்தான் முடியும்.  குமரிக் கண்டம் எப்போது நிலை பெற்றிருந்தது?

  எக்காலத்தில் வெள்ளம் அக்கண்டத்தை அழித்தது?

  தப்பிப் பிழைத்த தமிழர்கள் எங்கேச் சென்றனர்?

  எந்த நாடுகளில் குடியேறினர்?  என்ற நான்கு கேள்விகளுக்கும், தெளிவான விடை கிடைத்து விட்டால், தமிழ் மொழியே உலகின் முதன்மொழியென்பதும், தமிழரே உலகின் முதன் மாந்தரென்பதும்

  தெள்ளத்தெளிவாக நிறுவப்பட்டு விடும். கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
  Last edited by கௌதமன்; 02-01-2011 at 03:37 PM.
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

 7. #43
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  44
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  20,297
  Downloads
  2
  Uploads
  2
  தமிழிலக்கியங்களில் குமரிக்கண்டம்

  குமரிக்கண்டம் பற்றித் தமிழில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை வரலார்று செய்திகளாக்க் கருத இயலாது. தொன்மச் செய்திகளாகவும்,

  குமரிக்கண்டத்தைப் பற்றிய குறியீடுகளகவுமே அங்கிங்கு இலக்கியங்களில் காணப்படுகிறது. குமரிக்கண்டம் அழிவுபட்டபோது தப்பிப்பிழைத்த

  மாந்தரினம் எழுதியக் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இவ்வழிவு பற்றிய செவிவழி செய்திகளை பிற்கலத்தில் இலகியத்தில்

  தமிழர்கள் பதிவுச் செய்திருக்கக்கூடும். வெறும் கற்பனையாக இச்செய்திகளைக் கருத முடியாது. ஏனென்றால் அங்ஙனம் எழுதுவதற்கு எந்தவித

  உள்நோக்கமும் பண்டையத் தமிழ்ப்புலவர்கள் கொண்டிருக்க முடியாது.


  சிலப்பதிகாரம் குமரிக்கண்டம் அழிவுப்பற்றிய செய்திகளைக் கூறினாலும் குமரிக்கண்டம் பற்றிய பிறச்செய்திகள் யாவும் முரண்பாடுகள்

  கொண்டவையாக உள்ளன. குமரிக்கண்டத்தின் எல்லைகளும், பரப்பளவும் பற்றிய செய்திகள் தெளிவாக இல்லை.


  பஃறுளியாறும் குமரியாறும் குமரிக்கண்டத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் பாய்ந்தோடின என்றும், இவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட

  தொலைவு 700 காதங்கள் ( சுமாராக 7000 மைல் ) என்றும் சொல்லப்பட்டுள்ளதால் இன்றைய விந்திய மலைத் தொடங்கி, தென்முனை

  வரையிலான பகுதியில் குமரிக்கண்டம் நிலைப்பெற்றிருந்தது எனவும் கருத இடம் உண்டு. 7, 70, 700 போன்ற எண்கள் ‘பன்மடங்கு’ என்ற

  கருத்திலேயே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன். எனவே 700 காதத் தொலைவு என்பதை நீண்ட தொலைவு எனக்கருதுவதே

  பொருத்தமாயிருக்கும். [ சிறுவர்களுக்கும் சொல்லும் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி என்றும் ஈரேழு உலகம் என்றும்

  கற்பனையில் கூட ஏழு என்ற எண்ணைக் குறிப்பிடுகிறோம். ஆகவே ஏழு என்பதை ’பல’ என்பதன் தொன்மக் குறீயீடாகத்தான் எண்ண

  வேண்டியிருக்கிறது ]

  குமரிக்கண்டமானது,

  1) ஏழ்தெங்க நாடு

  2) ஏழ்மதுரை நாடு

  3) எழ்முன்பாலை நாடு

  4) ஏழ்பின்பாலை நாடு

  5) ஏழ்குன்ற நாடு

  6) ஏழ்குணகரை நாடு

  7) ஏழ்குறும்பனை நாடு

  என்றவாறு பிரிக்கப்பட்டிருந்தனவாக செய்திகள் கூறுகின்றன். இக்குறிப்புகளிலிருந்து குமரிக்கண்டம் என்பது ஒரு பேரரசாகவும்மேற்குறிப்பிட்ட

  நாடுகள் சிற்றரசுகள் போலவும் வகுத்து ஒரு மன்னனின் கீழ் ஆட்சி நடை பெற்றிருக்க வேண்டும்.


  பஃறுளி ஆறு :

  பஃறுளி ஆறு என்பது பல் துளி ஆறு என்பதால் பல சிற்றாறுகளைக் கொண்ட பேராறு எனக்கொள்ளலாம். பஃறுளி வளமான நிலங்களை தனது

  பாய்ச்சலால் பெற்றிருக்க வேண்டும் என்பதை ‘ நீர்மலிவானென மலிந்த’ என்ற சொற்களால் அறியப்படலாம்.  மலைகள்:

  பன்மலையடுக்கம் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அறியப்படுகிறது. இதிலிருந்து குமரிக்கண்டதிதிருந்த மலை நீண்ட தொடராக அமைந்திருந்தது

  எனக்கருதலாம். மிக உயர்ந்த மலை என்ற பொருளில் மேரு என்று சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது சுமேரு என்றும் சொல்லப்பட்டிருக்கலாம்.

  ’சு ’ என்ற எழுத்து தமிழில் ஏழு என்ற எண்ணை குறிப்பதால், ஏழு மலைகள் என்ற பொருளிலிலும் சொல்லப்பட்டிருக்கலாம். பொதுவாகக்

  குமரிக்கண்டத்தின் விளக்கங்கள் யாவும் ஏழு என்ற எண்ணை அடிப்ப்டையாகக் கொண்டே சொல்லப்பட்டிருக்கின்றன.


  [ வேங்கட மலையை ஏழுமலை என்று குறிக்கப்படுவது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. அங்கு ஏழு மலைகள் தான் உள்ளனவா அல்லது பல

  மலைகளின் அடுக்கு என்பதன் குறியீடாக ஏழுமலை என்று குறிப்பிடப்படுகிறதா என்பதை நண்பர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாகயிருக்கும் ]


  சிலப்பதிகாரப்பாடல் - நெடியோன் குன்றமும் தொடியோன்

  மணிமேகலைப்பாடல் - பொன்றிகழ் நெடுவரை யுச்சித் தோன்றி [ நெடுவரை என்பது உயர்ந்து நிற்கும் மலையைக் குறிக்கும் ]


  மேரு மலை பற்றிய இலக்கிய செய்திகள்

  சிலப்பதிகாரப்பாடல் : இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்

  மணிமேகலைப்பாடல் : 1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்

  2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண


  போன்றப் பாடல்கள் மேரு என்பது உயரமான மலைகள் என்ற பொதுப் பெயராலாயே அழைக்கப்பட்டுள்ளன. என்வெ குமரிக்கண்டத்தில் உள்ள

  பன்மலையடுக்கம் என்ற மலையும் மேரு என்றோ சுமேரு என்றோ அழைக்கப்பட்டிருக்கலாம். பிற்காலத்தில் குமரிக்கண்டம் அழிவுப்பட்ட பிறகு

  மேரு மலை என்பது தொன்மக் கதைகளில் ஒரு குறியீடாகவும் குறிக்கப்பட்டிருக்கலாம். [ இந்து புராணங்களில் வரும் மேரு மலை பற்றி

  குறிப்புகளை இத்தருணத்தில் சிந்தனையில் கொள்க].
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

 8. #44
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  55,959
  Downloads
  22
  Uploads
  0
  Quote Originally Posted by கௌதமன் View Post

  குமரிக் கண்டம் எப்போது நிலை பெற்றிருந்தது?
  எக்காலத்தில் வெள்ளம் அக்கண்டத்தை அழித்தது?
  தப்பிப் பிழைத்த தமிழர்கள் எங்கேச் சென்றனர்?
  எந்த நாடுகளில் குடியேறினர்?  என்ற நான்கு கேள்விகளுக்கும், தெளிவான விடை கிடைத்து விட்டால், தமிழ் மொழியே உலகின் முதன்மொழியென்பதும், தமிழரே உலகின் முதன் மாந்தரென்பதும்
  தெள்ளத்தெளிவாக நிறுவப்பட்டு விடும். கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


  அவசியமான அருமையான ஆய்வுகள் கௌதமன் அவர்களே...

  இக்கேள்விகளோடு மட்டுமல்ல இன்னும் சில பல கேள்விகளுக்கும் விடை அறிய நானும் ஆர்வமாக இருக்கிறேன். தமிழ் மொழி மற்றும் பண்டைய பூகோள அமைப்பினை குறித்தும் அறிய ஆவலோடு இருக்கிறேன்.

  கடற்கோளினால் குமரிகண்டம் பிளவு பட்டிருக்கலாம் என்பதும். அதே கடற்கோளினால் பூமிப்பந்தின் கண்டங்கள் நகர்ந்து சென்றதாகவும் அப்படி சென்ற கண்டங்களில் வாழ்ந்த ஜீவராசிகள் மனிதர்கள் உட்பட இன்று மொழியால் வேறுபட்டு சென்றிருப்பதாகவும் அறிந்திருக்கிறேன்.

  ஏபிரேய கீப்ரு மொழிகளோடே ஆதி மொழியாய் தமிழ் மொழி யும் இருந்திருக்கவே வேண்டும்.. தமிழரா முதல் மாந்தர் என அறிய இன்னும் தேடல் தீவீரப்படுத்தப்பட வேண்டுமோ...

  உங்கள் முயற்சி அரியது.. தேடல்களை ஊக்குவிக்க வல்லது
  அதற்கு என் பாராட்டுக்கள் .. தொடருங்கள்
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 9. #45
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
  Join Date
  29 Dec 2009
  Location
  தமிழகம்
  Age
  44
  Posts
  1,293
  Post Thanks / Like
  iCash Credits
  20,297
  Downloads
  2
  Uploads
  2
  குமரியாறு

  பஃறுளியாற்றைப் போல் குமரியாறும் குமரிக்கண்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகிறது. குமரியாறு பாய்ந்த நிலமே குமரிக்கண்டம் எனப்பட்டது.

  தெற்குப்பகுதிகளை குமரியாறு வளப்படுத்தியது. குமரி என்பதற்கு வளமை என்றே பொருள் கொள்ளலாம்.


  குமரி என்ற அரசியே முதன்முதலில் அக்கண்டத்தை ஆண்டதால் குமரிக்கண்டம் என்ற பெயர் தோன்றியதாகவும் ஒரு கருத்து உண்டு.

  குமரிக்கண்டத்தில் குமரியாறு ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். மணிமேகலைப் பாடலான, ‘ குமரி பாதங் கொள்கையில் வணங்கி’

  என்பதிலிருந்து அறியலாம்.


  ஏழ்மதுரை நாடு


  மதுரை என்ற நகரமே,குமரிக்கண்டத்தின் தலைநகராயிருந்ததென்று இலக்கிய வாயிலாக அறியலாம். குமரிக்கண்ட நகரமான மதுரையின்

  பெயர்க்காரணம் பற்றி இரு விதமானக் கருத்துகள் உள்ளன. ஒன்று ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாகவும் மற்றொன்று எளிமையான

  கருத்தையும் கொண்டுள்ளது.


  மதுரை என்ற பெயருக்கு பெயர்க்காரணம் அறிய முற்பட்டால், பாண்டியர்கள் நிலவை வழிபட்டு வந்ததாகவும், நிலவுக்கு மதி என்ற பெயரும்

  இருந்ததால் தங்கள் தலைநகரை மதிறை அதாவது மதி உறையும் ஊர் எனப்பெயரிட்டதாகவும், மதிரை என்ற சொல்லே மதுரை

  எனத்திரிந்ததாகவும் கூறுவர். தமிழர்கள் தங்கள் காவல் தெய்வமாக நிலவை வைத்துக்கொண்ட செய்தி, தமிழர்களின் குடியேற்ற நாடுகளிலும்

  அறியப்பட்டன.


  நிலவை ஈர் என்ற சொல்லாலும் தமிழர்கள் அழைத்தனர். ஒரு மாதத்தின் கால அளவை இரு பகுதிகளாகத் திங்கள் ஈர்வதால், நிலவுக்கு ஈர் என்ற

  பெயரும் இருந்தது எனலாம். எபிரேய மொழியில் ஈர் என்ற சொல் திங்களையும், மாதத்தையும் குறித்த ஒரு சொல்லாகும். ( தமிழிலும் திங்கள்

  என்ற சொல் இதே பொருளில் சொல்லப்படுவதைக் காண்க ). ஈர் என்ற நிலவை இறைவனாகக் கருதியதால் , ஈர்கோ என அழைத்தனர். இதுவே

  எரிக்கோ (Yeriko) என எபிரேய மொழியில் திரிந்திருக்கக் கூடும். எரிக்கோ என்பது திங்களை வழிப்பட்ட ஊரைக் குறிப்பதாகும்.

  இவ்வாறாக மதிகுலத்தைச் சார்ந்த பாண்டியர்கள், மதியை போற்றும் வகையில் தங்கள் தலைநகருக்கு மதுரை என்று பெயர் சூட்டியதாக் ஒரு

  கருத்தும் உண்டு.


  குமரியாற்றங்கரையிலிருந்து மதுரை, வயல்களால் சூழப்பெற்ற நன்செய் நிலங்களைக் கொண்டிருந்ததாகவும், மருத நிலத்தின் ஊர், மருதை

  எனப்பட்டதாகவும் ஒரு கருத்தும் உண்டு. மதுரை என்பது மருதையின் பிற்காலச் சொல்லே என்பாரும் உளர். ( இன்று நாட்டுப்புறத்தில்

  மதுரையை மருதை என்று கூறுவதைக் காணலாம்).  மதுரை, குமரிக்கண்டத்தின் தலைநகராகவும், ஏழ்மதுரை நாடென்ற மாநிலத்தின் தலைநகராகவும் இருந்திருக்கலாம். குமரிக்கண்டம்

  அழிவுற்றப்பிறகு, தமிழர்கள் தமது முன்னோரின் தலைநகரத்தின் பெயரையே, தற்காலத் தமிழகத்தில் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு

  வைத்தனர் என்று நம்பப்படுகிறது.
  Last edited by கௌதமன்; 05-01-2011 at 02:44 PM.
  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
  " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
  எனது வலைப்பூ

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •