Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 85

Thread: அப்பப்போ தோணுவது.....

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0

    அப்பப்போ தோணுவது.....

    என்னவுண்டு சொல்லிவிடு**
    நின்மனதில் என்னவுண்டு
    நித்தம் நித்தமென் மனதில்
    நீயிருக்க......
    உன் மனதில் நானிருக்க
    நின மனதை தந்து விடும் `
    எணணமுண்டோ சொல்லி விடு.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    மாறுதலால், மீறுதல்கள் நடந்ததில்லை என்றாகுமோ..
    தேறுதலகள் தொடர்வதனால் மாறுதல்கள் நடந்திட்டாலும்
    சில மீறுதல்கள் மாறிடாத நினைவலையாய் மாறுவதேன்....

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ஒன்றே தேடின் நன்றே வாழ்வை
    வென்றோ மென்று இன்றே சொல்வோம்
    அன்றோ இன்றோ என்று மொன்றாய்
    நின்றோ மென்றால் குன்றாய் நிலைப்போம்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நினைத்தபடி நடப்பதென்றால்
    இறைவன் ஒருவன் தேவையில்லை
    நினைப்பதெல்லாம் நடக்குமென்று
    நினைவதையே தவிர்த்து விட்டால்.
    நிலைத்து நிற்பாய் இவ்வுலகில்
    நீடித்த நாட்களுக்கு......

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    உங்கள் கவிவரிகள் மேலும் வளர்ந்து மன்றத்தில் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
    இணையத்தில் ஒரு தோழன்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    எம்மினத்தின் சுதந்திரமும் நாளை எனும் எதிர்பார்ப்பும்
    எதிர்கால எம் வாழ்வும் இல்லாமல் போனதேனோ?
    நடுத்தெருவில் நின்று கொண்டு நாதியற்று தவிக்கும் மாந்தர்
    வாழ்வதனை வளமாக்க வழியேதும் பிறந்திடாதோ?

    விதியிலே நின்று கொண்டு வீறாப்பாய் பேசுவதால்
    விடுபட்டுப்போன எம் இனத்தின் எதிர்காலம்
    உயிர் பெறறு எழுந்திடுமோ, பேர் பெற்று வாந்திடுமோ?
    நாம் சேருமிடம் எதுவென்று யாரிடம் போய் வேண்டிடுவோம்?

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    மகிழ்ச்சியான மனதுடனே
    நெகிழ்ச்சியாக நீ பேசி
    என் கவலை போக்கிய நாட்கள்
    இன்றும் பசுமையாக என் மனதில்
    உன் நினைவுகளை தானாய்
    தாலாட்டி செல்வதை
    நீ அறிவாயா.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    இயல்பானதாய் இருப்பதெல்லாம்
    அலைபாய்வதாய் தெரிவதில்லை
    நிலையில்லாத மனிதராலே- எங்கும்
    நிலைத்து வாழ முடிவதில்லை
    Last edited by Hega; 08-12-2010 at 09:36 PM.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    மாறியதும் நீதான் ,எனை
    மாற்றியதும் உன் அன்புதான்
    தேற்றியதும், தினம் தேடியதும்
    உன் அணைப்பைத்தான் இன்றும்
    தேடுகின்றேன் காணாமல் போன
    மாயம் தானென்ன வென்று சொல்லிவிடு
    தேடாமல் நான் இருப்பேன் என் உயிரே

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    உந்தன் உறவானதனால் எந்தன்
    சித்தம் கலங்கியதே சிந்தனைகள்
    நீயானதால் வேதனைகள் அண்டியதே
    நித்தம் உனை நினைப்பதினால்
    நெஞ்சம் கலங்கி பித்தானதே
    இத்தனைக்கும் என் அன்புனக்கு
    இற்றைவரை புரியல்லையே

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கடவுள் போட்டு வைத்ததையெல்லாம்
    கடமையாக செய்தோமானால் கவலை
    கண்ணீர் நிலைத்திடாதகன்றிடுமே, இனி
    வருவதெல்லாம் இனிமையாக மாறிடுமே

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    மேலே பறந்திடலாம், மேன்மை பல அடைந்திடலாம்
    மேதையாகி மேன்மக்களால் மென்மேலும் புகழ்பெறலாம்
    சோதனைகள் அனைத்தையுமே சாதனைகளாக்கிடலாம்
    சாத்னைகள் பெருகி விட்டால் வானமதை தொட்டிடலாம்.

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •