Results 1 to 5 of 5

Thread: எதிர்பார்ப்பு

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு


    காளை உன்னை நெஞ்சில் வைத்து
    கற்பனைகள் பல கட்டினேன்
    உன் ஆதரவும் அன்பும் கண்டு
    அறிவிழந்து உனை நாடினேன்

    எதிர்காலம் உன்னால் சிறக்குமென
    இறுமாப்பாய் நான் காத்திருந்தேன்
    காத்திருந்த எனக்கு நீயோ
    முடிவை தந்தாய்
    கல்லை போனற இதயத்தினால்

    காத்திருந்த காத்திருப்பும்
    கற்பனையின் சந்தோஷங்களையும்
    கல் வீட்டு நிலையாக்காமல்
    மணல் வீடாய இடித்ததேனோ

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எதிர்பார்ப்புகள்தான்
    ஏமாற்றத்தின் அஸ்திவாரமாமே!
    எல்லாரும் சொல்கிறார்கள்!
    இங்கே எதிர்பார்ப்பின் அஸ்திவாரத்தில்
    கவிதை இல்லம் எழுப்பிய உங்களுக்கு
    என் பாராட்டுகள் நிஷா அவர்களே.

  3. #3
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    ரெம்ப அருமையான கவிதைகள் ,,,,,
    ரெம்ப அருமையான வரிகள் ,,,,
    ரெம்ப அருமையான எதிர்பார்ப்புக்கள் ,,,,,
    ரெம்ப அருமையான எதிர்காலங்கள் ,,,,,

    உங்களுக்காக .......

    எதிர்பார்த்தவைகள் கிடைக்க ,, தவம் செய்ய வேண்டும்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    எதிர்பார்ப்புகள்தான்
    ஏமாற்றத்தின் அஸ்திவாரமாமே!
    எல்லாரும் சொல்கிறார்கள்!
    ஒகோ.... அப்போ உங்க கருத்து மாறுபட்ட கருத்தா..!! எதிர்பார்ப்புடன் எதையும் நோக்கி பார்த்து, கிடைக்காத நேரம் அது பாதிப்பு ஏற்படுத்தி விடுகிறது.. இதானே நிதர்சன உண்மை..

    ------------------------

    அடுத்து நிஷாவின் கவிதைக்கு வருவோம்...

    கவிதையை செதுக்கிய வடிவம் அற்புதம்..

    பிரளயம் ஏற்படுத்தும் வலியை
    பிள்ளைகள்கூட புரிந்து கொள்ளும்
    படிப்பினையாய் தந்துவிட்டிர்..

    பாராட்டுக்கள்..

    இனி கவிதை வரிகளை கொஞ்சம் ஆழ்ந்து இப்படியும் யோசிக்கலாமான்னு பார்ப்போமே...

    உன் ஆதரவும் அன்பும் கண்டு
    அறிவிழந்து உனை நாடினேன்
    அன்பும் ஆதரவும் கண்டு அறிவிழந்து நாடினேன்னு இதிலயே சொல்லிட்டிங்க.. அப்போ முதலிலயே உணர்ச்சிகளின் குவியலுக்கு அடிமையாகி விட்டிர்கள்.. எப்போதும் உணர்ச்சிகளின் உடனடி வெளிப்பாட்டால்தான் நாம் அறிவினால் யோசிக்க மறந்து வீழ்ந்து போகிறோம்..

    எதிர்காலம் உன்னால் சிறக்குமென
    இறுமாப்பாய் நான் காத்திருந்தேன்
    இதான் வலியின் முதல் படிக்கு வித்திட்ட எதிர்பார்ப்பு.. எப்போதும் நாம் இந்தியர்கள் இன்னும் குறிப்பிட்ட வயது தாண்டும் வரையிலும் மற்றவர்களின் தயவை, ஆதரவை நோக்கி இருப்பதால்தான் பலரும் விஞ்ஞானியாய் ஆகாமலே வீழ்ந்து போகிறார்கள்.. அதிலும் பெண்கள் காலம் முழுவதும் மற்றவர்களின் நிழலை சார்ந்தே வாழமுடியும் என்ற கோட்பாட்டை ஆழமாய் விதைத்து விட்டதன் தாக்கம்தான் இது..

    காத்திருந்த எனக்கு நீயோ
    முடிவை தந்தாய்
    கல்லை போனற இதயத்தினால்
    அப்படியானால் உண்மையான அன்பும் ஆதரவும் அவர் முன்பே காட்டவில்லை என்றுதானே அர்த்தம்..

    காத்திருந்த காத்திருப்பும்
    கற்பனையின் சந்தோஷங்களையும்
    கல் வீட்டு நிலையாக்காமல்
    மணல் வீடாய இடித்ததேனோ
    உண்மை என்று நாம் நம்பியவர் செவிமடுக்காமல் போகும்போது நாம் மட்டும் அதன் விளைவுகளை நினைத்து துக்கப்பட வேண்டுமா..? நாமும் மாறிடுவோம்...
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  5. #5
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    கனவுகள்... கற்பனைகள் எதிர்பார்ப்புகள்.... ஏமாற்றங்கள்.... கவிதைகள்....

    அவ்வளவே!!!

    நல்லதொரு ஆற்றாமை கவிதை!
    பாராட்டுக்கள் திரு நிஷா.
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •