Results 1 to 3 of 3

Thread: பழமொழிகளுக்கு சிறு விளக்கங்கள்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  16 Aug 2010
  Posts
  343
  Post Thanks / Like
  iCash Credits
  5,679
  Downloads
  24
  Uploads
  0

  பழமொழிகளுக்கு சிறு விளக்கங்கள்

  பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

  கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
  கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு?

  பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்? எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
  எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
  அப்பொருள் மெய்பொளுள் காண்பதறிவு
  என்று கூரி யுள்ளார்

  இந்த கருத்தை யெல்லாம் விளக்கும் விதமாக தான்
  <கேழ்வரகிலே> என்ற பழமொழியை படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்

  கடைதேங்காயை எடுத்து
  வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.

  ஈகை ஒரு மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்ம்ம்செய்வதும் நல்லது.அதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது.இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.


  அரசமரத்தை சுற்றி வருவதற்குள்
  அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.


  குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச்சுற்றி வந்தால் குழந்தைபேறு உண்டாகும் என்பது ஒரு நம்பிக்கை இந்த பழமொழி கூறுவது அவசரம் பற்றியே
  மரத்தை சுற்றிக் கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வேண்டும் மாதங்கள் சில போக வேண்டும் அல்லவா.
  யாவரும் வாழ்க வளமுடன்

 2. #2
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  16 Aug 2010
  Posts
  343
  Post Thanks / Like
  iCash Credits
  5,679
  Downloads
  24
  Uploads
  0
  இருட்டு வீட்டுக்குப் போனாலும்
  திருட்டு கை கேட்காது

  மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்.இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது.இதனால்""தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்"" என்று ஒரு பழமொழி வந்தது. திருட்டையே பழக்கப்பட்டவன் திருட்டை விடுவது கடினம்.யொய் பேசி பழக்கப்பட்டவன் பொய்யே பேசுவான். இந்த கருத்தை சொல்லும் பழமொழி இது. இருட்டு- வறுமையான வீடு என்பதை குறிக்கும்


  இப்படி மனித இயல்பு மாறாது என்ற கருத்தில் வழங்கப்படும் மற்றோரு பழமொழி.

  கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி தின்ன வாயும் சும்மா இருக்காது.

  சேலை பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட கிழியும்.
  கிராமத்தில் சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை
  போட்டுகொண்டே இருக்கும்.

  இந்த வாய் மெல்லுதலுக்கு வேறு ஒரு கருத்தும்
  உண்டு அது.


  சும்மா இருந்த வாய்க்கு
  கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி..

  சாதாரணமாகவே (வாய் சதா அசை) பிறர்
  பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு
  அவனை பற்றி செய்தி கிடைத்துவிட்டால்
  கேட்கவா வேண்டும்?
  யாவரும் வாழ்க வளமுடன்

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  16 Aug 2010
  Posts
  343
  Post Thanks / Like
  iCash Credits
  5,679
  Downloads
  24
  Uploads
  0
  ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்.

  ஆ-நெய்க்கு- பூ-நெய்க்கு - என்றால் ஆவினம் (பசு) பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வனப்பு ஏற்படும்.பூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேனை முதுமைக் காலத்தில் சப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்பதை உணர்த்தவே இந்த பழமொழி பிற்காலத்தில் உருமாரியது..

  யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்என உருமாறியது.
  வலிமை யானவனுக்கு ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.

  கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

  இந்த பழமொழி உருமாறியிருக்கிறது. கைபுண் அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதன்க் கேட்க வேண்டிய அவசியமில்லை
  என்பதே இதன் உட்கருத்து.

  கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!

  இந்த பழமொழி உருமாறியிருக்கிறது. கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும், செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.

  மற்றொறு கருத்து.
  கன்னம் என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்"
  கப்பல் கடலில் முழ்கி பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ
  மீண்டும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, கன்னக்கோல்
  வைத்து திருடி பிழைக்கக் கூடாது.
  "கன்னக்கோல்"-அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு திருடுவார்கள்.
  யாவரும் வாழ்க வளமுடன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •