Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: இயலறிதல்..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Post இயலறிதல்..!!

    இயலறிதல்..!!






    தூக்கத்தின் விழிப்பில்
    தூறலிடும் மேகத்தின்
    தூரிகை மைச் சிதறலாய்
    தூபமிடும் தவிப்புகள்..!

    அக்னிப் பிழம்பின்
    ஆனந்த மழையினில்
    அடங்கி ஏறும்
    ஆட்கொள்ளும் ந(பு)கைப்புகள்..!

    துயில் தொலைத்த
    தூரமளக்கும் ஈரவிழி
    உணர்த்தும் ஊழ்
    உள்வலி என்றும்..!

    காணா புதிரும்
    காணும் ஆவலும்
    கண்ட கனவில்
    கானலாய் போகும்..!

    ஆழ்மூளை அழுத்தும்
    ஆழ்தூக்க குறை
    அம்மா பெயருக்கு
    அடுத்த பொருள் உணர்த்தும்..!

    Last edited by பூமகள்; 17-10-2010 at 03:30 AM. Reason: எழுத்துப் பிழை சரிசெய்தல்
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    தூக்கத்தின் விழிப்பில்
    தூரலிடும் மேகத்தின்
    தூறிகை மைச் சிதறலாய்
    தூபமிடும் தவிப்புகள்..!


    [/CENTER]

    குறை தூக்கக் குறையோ?
    தூறலும் தூரிகையும்
    ரகர றகரங்களை
    இடம் மாற்றிக்கொண்டனவே!

    இயலறிய இயன்றதோ?
    இங்கே பொருளறியாமல் நான்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by கீதம் View Post
    குறை தூக்கக் குறையோ?
    தூறலும் தூரிகையும்
    ரகர றகரங்களை
    இடம் மாற்றிக்கொண்டனவே!
    மிகச் சரி..
    பின்னிரவுக் கவி வடித்த விளைவு அக்கா..
    மாற்றிவிட்டேன்.

    இயலறிய இயன்றதோ?
    இங்கே பொருளறியாமல் நான்!
    எனக்கும் இயலறிய கொஞ்சம் இம்சை தான்.. இயலுமா பாருங்கள்.. இல்லையேல் அர்த்தப்படுத்த ஏதேனும் ஒரு கவி வருவார்..
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை.
    ஏதோ சொல்ல வருகிறேன்.. எனக்கும் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெளிவாகவில்லை.. இன்னும் மன்ற கவிகள் வந்து படித்து சொல்வார்கள் என்று காத்திருக்கிறேன்.. பாருங்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    கவிதை புயல் "கீதம்" மே பொருளறியாமல் போறாங்களா.. !!! பதிந்த அந்த இரண்டு வரிக்குள்ளும் எதாவது அர்த்தம் புதைச்சி வச்சிருப்பாங்க..

    நாம சின்ன குழந்தைதானே.. எனக்கு என்ன தோணுதுனா... குழந்தையின் உறக்கம் எழுந்த தவிப்பும், அம்மாவின் அரவணைப்பையும் கலந்து கவியாய் தந்துள்ளிர்கள் எனவே நான் அர்த்தப்படுத்தியுள்ளேன்..

    இன்னும் கவிகள் வருவாங்க... அவங்க விளக்கம் பார்ப்போம்..

    பாராட்டுக்கள்
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நானும் காத்திருக்கிறேன்....கவிதையுணர.....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    @சூறாவளி,

    அப்பாடா.. அர்த்தப்படுத்த ஒருவர் சிக்கிட்டார்ன்னு ஒரே குஷி... ஹி ஹி.. அர்த்தம் அற்புதம்.. சரியாக நாடியை யார் பிடிக்கிறார் என்பதே கேள்வி... புதிய அர்த்தங்கள் வரவேற்கப்படுகின்றன...

    @சிவா.ஜி,

    என்னண்ணா.. உங்களுக்கும் புரியலையா??
    யாராவது வாங்கப்பா... எனக்கே புரியாம போயிடும் போல இருக்கு...
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    சரியாக நாடியை யார் பிடிக்கிறார் என்பதே கேள்வி... [/COLOR]

    யாராவது வாங்கப்பா... எனக்கே புரியாம போயிடும் போல இருக்கு... [/COLOR]
    பூவு.. கண்டிப்பா விளக்கம் கொடுக்கணும்..
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    கவிதையின் பொருள் ஒவ்வொரு வரியிலும் இருக்கிறதென்றாலும்,

    //தூக்கத்தின் விழிப்பில்
    தூறலிடும் மேகத்தின்
    தூரிகை மைச் சிதறலாய்
    தூபமிடும் தவிப்புகள்..!
    //

    பசியினாலோ, நெடுநேரம் படுக்கையிலே இருப்பதால் உண்டாகும் உடல் வலியினாலோ, இன்ன பிற முகாந்திரத்தாலோ எழுந்தழும் குழந்தையை சொல்கிறார்..

    தூபமிடும் தவிப்புக்கள் - தாய் மனசு..

    மற்ற வரிகளை பிந்தொடருங்கள் பொருள் பிடிப்படும்..

    இப்ப கடைசி வரி பார்ப்போம்..

    //ஆழ்மூளை அழுத்தும்
    ஆழ்தூக்க குறை
    அம்மா பெயருக்கு
    அடுத்த பொருள் உணர்த்தும்..!
    //

    ஒவ்வொரு தாயும் கடந்து வரும் நிலை இது..

    குழந்தைக்கு ஒரு மூனு வயசு ஆகுற வரைக்கும் தாயால் ஒரு அமைதியான தூக்கம் உற முடியாது, ஒரு வயசு வரை தூக்கமே வந்தாலும் தாய் சரியாக தூங்க மாட்டாள் கவனமெல்லாம் பிள்ளை மீதே இருக்கும், ஒரு வயசுக்கப்புறம் தாய்ப்பால் மறக்கும் வரை பிள்ளை தாயை தூங்கவே விடாது, இதுக்கு நடுவுல பிள்ளைக்கு மேலுக்கு முடியலைனாலோ ? மற்ற பிற பிரச்சனையினாலோ தூக்கம் தொலையும்..

    சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் உண்டாகிற மன அழுத்தம் இருக்கே அது தானே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முகதூவாரம்..

    அம்மாவின் பெருமை எல்லார்க்கும் தெரியும், ஆனால் ஒரு அம்மாவாக இருந்து பார்த்தால் தான் அந்த வார்த்தையின் உண்மையான பொருள் புரியும்.. வாழ்த்துக்கள் பூமகள்..
    அன்புடன் ஆதி



  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆதன் அருமை..

    நீங்கள் பெருங்கவி என்பதை மறுபடி பறைசாற்றினீர்கள்.. வியந்தேன்..

    அட்சர சுத்த பொருள் விளக்கம்.. கரடு முரடாக எழுதிவிட்டேனென வருந்தியிருந்தேன்.. யாருக்குமே புரியாமல் போய்விடுமோவென்று.. புரிந்து கொண்டீர்கள் என்பது பெருமகிழ்ச்சி..

    இதை படித்த பின், நாளைக்கு வீட்டுல யாருக்காவது குழந்தை பிறந்திருந்தா கண்டிப்பா இதை முதல்ல புரிந்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்..

    மிக்க நன்றிகள் ஆதன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சேயின் முடி தொடும் தென்றல் கூடத்
    தாயின் உணர்வில் சூறாவளியாகும்...

    சேயின் மனதுக்கும் தாயின் மனதுக்கும் இடையே
    அறிவியலும் அறியவியலாத்
    தடங்கலில்லாத் தொடர்பாடல்...

    தூக்கம் கலையும் விழிகள் ஊழ்வினை எனக் குற்றம் சொல்லி
    தூக்கம் கலைத்த விழிகள் பார்த்ததும் பிறவிப்பயன் என, உடன் மாற்றிச் சொல்லும்.

    தாயின் உடலுக்கும் பாசத்துக்குமிடையே கயிறிழுத்தல் ஆரம்பமாவது என்னவோ வாஸ்தவம்தான்...
    ஆனால், பாசத்துக்குப் பலப்பரீட்சை செய்யாமல் உடல் ஒத்துப்போவதும் உண்மைதான்...

    தொப்புள் கொடி அறுவது அவசியம்...
    தொடர்புக்கொடி அமைவது அதிசயம்...

    பாராட்டுக்கள் பல...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    கவிஞனின் உணர்வுகள் கவிதையில் அதிகமாய் தெறிக்கின்றன...
    நான் வழிபோக்கனாயிருந்திருந்தால் கருவுற்ற பெண்ணின் இடத்திலிருந்து வாசித்திருப்பேன்....
    கவிஞனை அறிந்ததாலோ என்னவோ பெற்ற தாயின் இடத்திலிருந்து வாசிக்கிறேன்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •