Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: என்ன ஆச்சு எனக்கு? ஏன் அந்த புத்தகங்களை படிக்க முடியல

                  
   
   
 1. #1
  இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
  Join Date
  25 May 2006
  Location
  அமீரகம் (அபுதாபி)
  Age
  36
  Posts
  546
  Post Thanks / Like
  iCash Credits
  5,402
  Downloads
  148
  Uploads
  1

  என்ன ஆச்சு எனக்கு? ஏன் அந்த புத்தகங்களை படிக்க முடியல

  புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் எனக்கு எப்போதிருந்து ஏற்பட்ட்து என்றால், அது சொல்வது மிக்க கடினம். உண்மைதான்.. எனக்கும் வாசிகசாலைக்குமான உறவு மிக அபரிதமானது. அது 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிலைத்து நிற்கின்றது. அப்பா அப்போதெல்லாம் எங்களூர் வாசிகசாலையில் இருந்து கொண்டு வரும் இரவல் நூற்களின் அட்டைப்படங்கள் தொடக்கம் உள்ளடக்கங்கள் வரை இன்றும் நிழலாடும்..

  இருந்தும் இப்போது, எனது படுக்கையிலும் மேசையிலும் கிடக்கும் அப்புத்தகங்களை வெறித்துப் பார்க்கின்றேன்.. எனக்கு என்னவாயிற்று?? எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு புத்தகத்தினை வாங்கினால் முடித்துவிட்டு கீழே வைக்கும் எனக்கு என்னவாயிற்று? ஏன் இந்த புத்தகங்களை வாங்கி இரு வாரமாகியும் விரிக்க கூட மனமின்றி இருக்கின்றது.
  இப்போதெல்லாம், காலையில் அலுவலகத்திற்கு போகும் போது,
  கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அப்புத்தகங்களினை படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானம், அவ்வோய்வு நேரங்களில் உருமாறி அரட்டையாகவோ உறக்கமாகவோ மாறிப்போகும் அவலம்…… ஆனால், அவற்றினை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளே எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கின்றது..

  சிறுவயதில், காமிக்ஸ் புத்தகங்களின் மீது ஒரு அபார காதல். அதன் கதை நாயகர்கள் பற்றிய பிரமாண்டமான பிம்பங்கள் இன்னும் உண்டு.. முகமூடி வீர்ர் மாயாவி, கார்த், லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி, ப்ளாஸ்கார்டன், என பலர். அவர்கள் பற்றிய பல பல சேதிகள் எங்கள் காமிக்ஸ் நண்பர்களிடையே எப்போதும் சுவாரசியமாக பகிரப்படும். ஆனால், இது அனைத்தும் மிக ரகசியமாக இருக்கும். வீட்டுக்கு தெரிந்தால், அப்பா புத்தகத்தையும் என்னையும் சேர்த்து கிழித்துவிடுவார். அவ்வாறு கிழிக்கப்பட்ட தடவைகளும் ஏராளம் உண்டுதான். ஆனாலும் அவற்றினை படிப்பதை விடவில்லை. அது ஒருவகையான போதை போல ஆகிவிட்டது.

  வயது கொஞ்சம் ஏற, அப்பாவால் வாசிகசாலைக்கு செல்லும் பழக்கம் வந்துவிட்டது. அது அம்புலிமாமா, காமிக்ஸ் இலிருந்து, இன்னொரு புத்தக உலகினை திறந்துவிட்டது. சாண்டில்யன், கல்கி , புதுமைப்பித்தன், சுஜாதா என பலர் அறிமுகமானார்கள். சாண்டில்யனின் கடல்புறா, மூங்கில் கோட்டை நூற்களோடே வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாக என்னுள் உண்டு. சுஜாதாவின் கணேஸ், வசந்த் பற்றிய பிரஸ்தாபங்கள்.கணேஸாக என்னை உருவகித்துக்கொண்டு வசந்தாக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை எல்லாம் செய்த நேரங்களும் உண்டு..

  இப்பிடி எல்லாம் இருந்த எனக்கு ஏன் இந்த புத்தகங்களை மட்டும் படிக்க முடியவில்லை. ஒரு வகையான அசூசை படர அந்நூற்களில் ஒன்றினை புரட்டலாம் என்ற எண்ணம் அலுப்போடு விட்டுவிட்டு வர, இன்று படித்தே விடுவது என்ற தீர்மானத்தோடு, மேசை மீது இருந்த அந்நூற்களில் ஒன்றினை எடுத்து தலைப்பினை நோக்குகின்றேன்.

  “Management Accounting – MBA 1st year” என்றிருந்தது.

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  61,545
  Downloads
  18
  Uploads
  2
  கதைப் புத்தகத்தை படிப்பதில் இருக்கும் ஆர்வம் பாடப்புத்தகத்தில் இல்லை என்று சொல்கிறீர்கள்.

  முயற்சி செய்தால் அதுவும் சுவாரசியமாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்து. இன்றும் எனக்கு எம்பிஏ புத்தகங்களைப் பார்த்தால் அதை எடுத்து புரட்டி தெரிந்த விஷயமானாலும் மறுபடியும் அதை ஒருமுறை படிப்பேன்.

  உங்களுக்கு மேனேஜ்மெண்ட் அக்கெளண்டிங் மீது ஏன் அவ்வளவு வெறுப்பு. அருமையான சப்ஜெக்டாச்சே. நாங்கள் கோமா என்று சொல்வோம், காரணம் அது காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கெளண்டிங் என்று இருக்கும். முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  15,770
  Downloads
  62
  Uploads
  3
  தூக்கம் வரவழைக்கும் அற்புத மருந்துகளைக் கண்டா இவ்விதம் கூறுகிறீர்கள்..?

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  61,545
  Downloads
  18
  Uploads
  2
  Quote Originally Posted by பாரதி View Post
  தூக்கம் வரவழைக்கும் அற்புத மருந்துகளைக் கண்டா இவ்விதம் கூறுகிறீர்கள்..?
  உங்களுக்கும் தூக்கம் வந்துவிடுகிறதா, அடப்பாவமே!!!!!

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  03 Feb 2007
  Location
  அப்பிடீன்னா?
  Posts
  4,596
  Post Thanks / Like
  iCash Credits
  55,052
  Downloads
  84
  Uploads
  0
  ஜோவ்.
  அப்படிப்பட்ட புத்தகம் படிக்க எப்படியா நேரம் வரும்?

  படிக்க நினைத்தாலே கொட்டாவியும் நித்திரையுந்தான் வரும். படிக்கத்தானே போகிறோம். கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு ஆரம்பிக்கலாம் என்று தொடங்கிய அரட்டை முடியும்போது நேரம் முழுவதையும் விழுங்கியிருப்பதையும் காணலாம்.

  இதுவும் ஒரு பெரிய விடயம் என்று எழுத வந்திட்டார்!
  இப்படி எழுதினால், நாங்கள் எத்தனை என்று எழுதுவது?

 6. #6
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  133,031
  Downloads
  161
  Uploads
  13
  நாங்க பார்க்காத புத்தகமா...
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  23,288
  Downloads
  183
  Uploads
  12
  அப்படிப்பட்ட புத்தகம் ஒன்று என் வாழ்நாளில் குறுக்கிட்டது. படித்துதான் ஆக வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினவர் யாருமில்லை. ஆனால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல் என்றார்கள்.

  கண் விரித்து, கையிலெடுத்து ஒரு பார்வை பார்த்தேன். எழுத்துக்கள் வார்த்தைகளாய் கோர்க்கப்பட்டு வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

  புரியாத வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட்டு வைத்தேன். அதை மட்டுமே மனப்பாடம் செய்து விட்டு அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.

  கேள்விகள் அப்படித்தான் புரியாத வார்த்தைகளை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும். அதைப் புரிய வச்சுட்டா கேட்டவன் திருப்தி ஆகிடறான்.

  வரையறைகள் மட்டுமே என எல்லைகளை வரையறுத்துக் கொண்டேன்.

  புத்தகத்தை படிச்சு முடிக்கலை. கேள்வி கேட்டவன் எதிர்பார்ப்புகளைப் படித்தேன். ஒரு வரையறை, விளக்கம், உதாரணம் இவ்வளவுதான் எதிர்பார்ப்பு என உணர்ந்ததும்

  புத்தகம் முடிஞ்சு போச்சு!
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  30,678
  Downloads
  29
  Uploads
  0
  அரை மணி நேரம் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, ஒரு மணி நேரம் சுஜாதா,ஒரு மணி நேரம் இண்டெகரேசன் தீரம்ஸ்,இரண்டு மணிநேரம் பாலகுமாரன்,அரை மணி நேர கிரகம் புடிச்ச கிராமர்,அழுகை வரும் போது ஓசோ என்று படித்த காலங்கள் எல்லாம் போயே போச்சு...இப்ப யாரும் எதும் கேக்க முடியாது முழு நேரமும் கததான் கததான் கத தான்.புத்தகங்கள் தான் கிடைக்க மாட்டீங்குது.

  கோயமுத்தூர் லெண்டிங் லைப்ரரி ஒன்றில் வேலை பார்க்கும் பெண்களிடம் நல்லநட்பு.சொல்லி வைத்திருக்கிறேன். வேற வேலைக்கு மாறப்போறீங்கன்னா அக்காவ இந்த வேலைக்கு சிபாரிசு செய்யுங்கன்னு..

  நல்ல பதிவு அகத்தியன். எம்பி எம்பி படிச்சுப்பாருங்க.ஏறுதான்னு பாக்கலாம்.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  இந்த பிரச்சனைக்குத்தான் நாங்கள்லாம் படிக்கிறதே இல்ல.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  30,678
  Downloads
  29
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  இந்த பிரச்சனைக்குத்தான் நாங்கள்லாம் படிக்கிறதே இல்ல.
  படித்ததனால் அறிவு பெற்றோர்
  ஆயிரம் உண்டு...
  பாடம் படிக்காத மேதைகளும்
  பாரினில் உண்டு....
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  03 Feb 2007
  Location
  அப்பிடீன்னா?
  Posts
  4,596
  Post Thanks / Like
  iCash Credits
  55,052
  Downloads
  84
  Uploads
  0
  பாடம் மட்டும்
  படிப்பல்ல
  பயிற்சி கூட
  படிப்புத்தான். ( எப்பூ..டி? நாங்களும் கவிதை மாதிரி எழுதுவோமில்ல )

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  30,678
  Downloads
  29
  Uploads
  0
  Quote Originally Posted by விராடன் View Post
  பாடம் மட்டும்
  படிப்பல்ல
  பயிற்சி கூட
  படிப்புத்தான். ( எப்பூ..டி? நாங்களும் கவிதை மாதிரி எழுதுவோமில்ல )
  அப்பூடியா?ஒத்துகிறேன்...இது கவித தான் (வின்னர் வடிவேலு பாணியில் படிக்கவும்.படம் பாக்கலேன்னா பாத்துட்டு வந்து படிக்கவும்.)
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •