Results 1 to 4 of 4

Thread: வறுமை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    20 Sep 2010
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    9,954
    Downloads
    0
    Uploads
    0

    வறுமை

    உலக அதிசயத்தில்
    இடம் பெறாமல் போன
    இன்னொரு அதிசயம்…
    வறுமை, அகற்ற முடியாத
    அடிமை – உலகை விட்டு
    விரட்ட முடியாத கொடுமை…

    பல நாடுகளில்
    தேசிய கீதமாய் ஒலிக்கின்றன
    பசி என்ற சொல்…

    பட்டினிச் சாவு
    அவ்வபோது சில என
    பத்திரிக்கைகள்
    காட்டுகின்றன படம் போட்டு – ஆனால்
    உணவு இல்லாமல் இறந்தோர்
    உண்மை பட்டியல்
    வெளியிடப்படாமலே மறைந்திருக்கின்றன
    வெட்கப்பட்டு…
    வறுமையை வெல்ல முடியாமல்
    வாய் விட்டுச் சொல்ல முடியாமல்…
    உணவு இல்லாமல்
    உலகிற்குத் தெரியாமல்…
    வெளிச்சம் காணாமலே
    இருட்டறைக்குள்ளே
    சமாதிகளாகின்றன
    பல உயிர்கள் சப்தம் இல்லாமல்…

    விஞ்ஞானம்
    உலகை வேகமாய் க் கொண்டு செல்ல
    வறுமை
    உயிர்களை மெதுவாய்[]??அதை விட வேகமாய்க்] கொண்டு போகிறதே…
    என்று தீரும் இந்த சாபம்…

    வறுமை பற்றிய விவாதம்
    உயர்ந்த இடங்களில்
    குளிர்ந்த அறைகளில்
    பெரிய விருந்துடன்
    பசிக்காத வயிற்றுடன்…

    நன்றி ....!

    By
    vasanth kumar.g

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நண்பரே!! மிக வேகமாக கவிகள் இங்கு காண முடிகிறது..
    ஆனால் அதை வாசிக்க முடியில..
    பிடித்து விட்டு விமர்சனம் தருகிறேன்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    பிரர் நிலையில்
    நின்று பராதவரை
    தன்னலமும்
    சுயநலமும்
    மாறாத நிலையில்
    பொதுநலம்
    என்ற எண்ணம்
    தோன்றாத
    நிலையில்
    தின்று கொழிக்கும்
    பணப் பன்னிகள்
    அழிக்கப்படாத
    வரையில்
    தொடரும் இந்நிலை


    உங்கள் உணர்வு மற்றும் கவிதை நன்று நண்பரே
    வாழ்த்துக்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ரொம்ப நல்லா இருக்குங்க
    உணர்ந்து எழுதியிருக்கீங்க.
    கடைசி பத்தி சூப்பர்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •