Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 108

Thread: தக்ஸின் பார்வையில் கொல்லிமலை பயணம். இறுதி பாகம்

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஆஹா.. பல மேட்டர் வெளியே வருதே..
    சீக்கிரம் மெயின் மேட்டருக்கு வாங்க பாஸ்...!!

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    கூடவே பயணிப்பய்துபோல் இருக்கு தக்ஸ்!
    தொடரட்டும் பயணம்..
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #39
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இந்த பதிவுல சசியும், ஆதனும்தான் பலிகடாவா....போட்டுத் தாக்கு தம்பி.

    அந்த கல்வெட்டு மேட்டர் சூப்பர். இதெல்லாம் தாமரையாலத்தான் முடியும்.

    இன்னும் சொல்லு...படிக்க படிக்க....கையெல்லாம் பரபரங்குது...தக்ஸ் இப்ப மாட்டுனா............
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    தக்ஸ் அண்ணா அப்பறம் அந்த அர்ச்சகர் விசயத்தையும் சொல்லீடுங்க..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  5. #41
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    நீ நடத்து ராசா...!!

  6. #42
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பொளந்து கட்டு மச்சி
    அன்புடன் ஆதி



  7. #43
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அரிய பயணம்..
    நல்ல தொடர்..
    தொடர்ந்து எழுத என் எதிர்ப்பார்ப்புக்கள்..
    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..
    நானும் சென்ற அனுபவம்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    பாகம் 4

    வேன் ஐந்து கொண்டை ஊசி வளைவுகளை முடித்து விட்டு, ஆறாவதை நோக்கி போய் கொண்டு இருந்தது. சூரியனுக்கு வரவில்லை என்றாலும் எனக்கு வர மாதிரி தான் இருந்தது. அந்த மாதிரி நேரங்களில் எனக்கு பேச வராது, பேச வராது என்றால் தி.. தி... தி... திக்குவாயெல்லாம் இல்லை. பேச மூடு இருக்காது என்று சொல்ல வந்தேன். தலையை கீழே தொங்கப்போட்டுக் கொள்வேன். அமைதியாக இருக்கலாம், மனதை ஒருநிலைப்படுத்தலாம் என்று அமைதியாக இருந்தால், தாமரை அண்ணாவின் பேச்சுக்கள், அடிக்கடி காதில் விழும், அவை எனக்கு வாந்தி எடுக்கு அந்த உணர்வை இன்னும் அதிகப்படுத்தும்... இது அவர் மீது இருக்கும் தப்பு இல்லை, அந்த நேரத்தில் எனக்கு பாடகியின் ஜானகியின் குரலை கேட்டாலும் வாந்தி தான் வரும், காதில் கேட்பதற்கு வாயில் எடுப்பதற்கு சம்பந்தம் இல்லை என்றாலும் பழிப்போட ஒருத்தர் வேண்டுமில்லையா, அதனால் எனக்கு மாட்டிய தாமரை...

    வேன் இப்போது, பல வளைவுகளை தாண்டியது, அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர், பின்னாடி சசியும், ஆதவாவும், ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். கண்டிப்பாக வேன் கொல்லிமலை சென்று அடைவதற்குள், இருவரில் ஒருவர் வாயில் நுரை தப்பி சீட்டில் சாய்ந்து கிடப்பார்கள் என்று நினைத்தேன்.... அப்படி என்ன தான் பேச்சோ இருவருக்கும். திடீரென தாமரை அண்ணன் ஜன்னல் வெளியே தெரிந்த அருமையான மலைக் காட்சியை காண்பித்தார். உண்மையில் மிகவும் அழகான காட்சி அது, மலை ராணியின் தலையில் மேக கீரிடம். பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. இயற்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம், அந்த முழு இயற்கை காட்சியில் ஒரு சின்ன புள்ளியில் கூட காய்ந்த நிறம் தெரியவே இல்லை, எங்கு பார்த்தாலும், பசுமை, எங்கு பார்த்தாலும் மரம், எங்கு பார்த்தாலும் குளிர், எங்கு பார்த்தாலும் குரங்குகள், நல்லவேளை ஒரு இடத்தில் கூட நான் மனிதனை அங்கு பார்க்கவில்லை....

    பெரிய பள்ளத்தாக்கை வேனில் இருந்து எட்டிப் பார்த்தேன், கீழ் கோடியில் ஒரு மரம், கண்களை மூடி ஒரு நிமிடம் அந்த மரத்தில் ஊஞ்சல் அடுவதை போல நினைத்துக் கொண்டேன், அப்போது வாந்தி வரும் உணர்வு அதிகமானதால், உடனடியாக அங்கிருந்து வேனுக்குள் வந்து விட்டேன்.......... மனதை விட வேகமாக பயணம் செய்யும் வாகனம் எதுவாக இருக்க முடியும், நினைத்தால் நிலா என்ன, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு நொடிப் பொழுதில் சென்று திரும்பி விடமுடியும். அந்த மலைப்பாதையில் எதிர் திசையில் வரும் வாகனங்களை பார்க்க வேண்டுமே, பேய் வேகத்தில் வருகிறார்கள், எமதர்மனின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் போல அந்த ஓட்டுநர்கள், ஒவ்வொரு முறையும் அந்த வாகனங்களை கடக்கும் போது, உயிர் ஜன்னல் வழியாக போய்விட்டு திரும்பவும் வரும். அதுவும் மலையில் ஓட்டும் லாரி டிரைவர்களை பார்க்க வேண்டுமே, சீட்டின் நுனியில் அமர்ந்துக் கொண்டு வீடியோ கேம் விளையாடுவதை போல லாரியை ஓட்டிக் கொண்ட இருக்கிறார்கள்.......... வீடியோ கேமில் வாகனம் விபத்திற்குட்பட்டால், கேமை ரீ ஸ்டாட் செய்தால் புதிய வாகனம் வந்து விடும், ஆனால் நிஜத்தில் மோதினால், ரீ ஸ்டாட் இல்லை, ரீ ஜென்மம் தான்...... அதுவும் என்னை போன்ற ஆட்களுக்கு என்று மறுஜென்மம் இருக்கிறதா என்று தெரியவில்லை.....

    எங்கள் வேன் பல மேடுகளில் ஏறும் போது, இதய நோயாளி மாதிரி முக்கி பெருமூச்சி விட்டது, எப்போது வேண்டுமானால் ஹார்ட் அட்டாக் வரும் நிலைமையில் வேறு இருந்தது, அதாவது பழுதடைந்து பாதியில் நிற்கும் நிலையில். ஆனால் சும்மா சொல்லக்கூடாது எங்கள் ஓட்டுநர் சுரேஷ், நன்றாக ஓட்டினார். முக்கியமாக எதிரில் வரும் வண்டிகளை பார்த்தும், பின்னாடி வரும் வண்டிகளின் ஹாரன் சத்தத்திலும் பயமில்லாமல் ஓட்டினார். நான் அவருடைய சீட்டில் அமர்ந்து இருந்தால், எதிரே வேகமாக வரும் வாகனம் எங்கள் வண்டியை நோக்கி வர பத்து மீட்டர் முன்னாடியே டிரைவர் கதவை திறந்து நான் எஸ்கேப் ஆகி இருப்பேன்......... உறவுகளின் நல்ல நேரம் நான் டிரைவராக வரவில்லை.

    ஒவ்வொரு வளைவாக கடக்கும் போதும், மனது சந்தோஷப்படும், இன்னும் 60 தான் இருக்கிறது, இன்னும் 59 தான் இன்னும் 58 தான் என்று ஓவ்வொன்றாக எண்ணிக் கொண்டு வந்தேன். கடைசி பத்து கொண்டை ஊசிகளை கடக்கும் போது, மனம் சந்தோஷத்தில் துள்ளியது, இன்னும் பத்தே பத்து கொண்டை ஊசிகள் தான், சந்தோஷத்தில் யாருக்காவது ஜடைப்பின்னி விட வேண்டும் போல சந்தோஷமாக இருந்தது. ஆதியை தேடினேன், அந்த ஜடாமுடி கொஞ்சம் தூரத்தில் அமர்ந்து இருந்தான். அவன் தலையை பார்த்தேன், அவன் முடியில் கையை விட்டால், சிட்டுக்குருவி, பூராண் என்று எதாவது அந்த முடிக் கூட்டில் இருந்து வெளியே வர வாய்ப்புகள் இருப்பதால், அந்த ஐடியாவை கைவிட்டு விட்டேன். ஒரு வழியாக அறப்பளீஸ்வரர் கோவிலை வந்து அடைந்தோம், அதற்கு எதிரே தான் ஆகாச கங்கைக்கு செல்லும் வழி, நான் வார்த்தைகளில் சாதாரணமாக சொல்வதால், எதோ அந்த ஆகாச கங்கை, ரோட்டின் ஓரத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

    அனைவரும் தங்கள் சீட்டுகளில் இருந்து புதைப்போன இடுப்பு பகுதியை தோண்டி எடுத்து வெளியில் இறங்க முற்பட்டோம். எப்போதும் வேன் நின்றதும், முதல் சீட்டில் இருக்கும் நான், அல்லது சூரியன், அல்லது ரவி இவர்கள் தான் இறங்க வேண்டும், ஆனால் அவர்களை எல்லாம் முண்டி அடித்துக் கொண்டு மதி இறங்க முயல்வான். காரணம் அவனின் உயரம், மனிதனைப் போல வளருடா என்றால் முருங்கை மரம் போல வளர்ந்து இருக்கிறான். அவன் தன்னுடைய தலையை நிமிர்த்திய படியே வேனி்ல் வந்தால், தலை வேன் டாப்பையும் தாண்டி சாலையில் உள்ள மரங்களில் இடிக்கும். அவனி்ன் உடம்பை 6 ராக மடித்து சீட்டில் அமர்ந்து இருப்பதால், அவனுக்கு ஜாயின்டுகள் வலிக்கும், அதனால் அவன் வேனில் இருந்து முதலில் இறங்க முண்டி அடிப்பான். அவனுக்கு முன்னாடி நான் எழுவேன். காரணம் அவனுக்கு உயரம் பிரச்சனை என்றால் எனக்கு அகலம்...... நான் கொஞ்சம் பூசணாப்புல இருப்பேன்..........(மன்ற உறவுகள் என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது).......... சரி உண்மையை சொல்லி விடுகிறேன், எல்பிஜி கேஸ் சிலிண்டரை விட கொஞ்சம் குண்டாக இருப்பேன் (போதுமா....). என் அகலத்தை குறைத்து பாம்பு தன் பொந்தில் சுருக்கி படுத்துக் கொள்வதை போல நான் சீட்டில் பல மணி நேரம் பயணம் செய்தேன். வளைவுகளில் வேன் குலுங்கிய குலுக்களில் என்னுடைய கிட்னிக்கள் இடம் மாறி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது என்ற நினைப்புடன் வேகமாக நான் இறங்கினேன்.

    கோயில் எதிரே வேன் நின்றது. இறங்கியதும் மூச்சை இழுத்து விட்டேன், காற்று வாசனையாக இருந்தது. எந்த சனியனோ கோயில் என்று கூட பார்க்காமல் எதிரே தன் திரவக் கடனை செலுத்தி விட்டு சென்று இருக்கிறான்........, கடன்காரன். முகத்தை வேறு பக்கமாக திருப்பி கண்களை மூடி மூச்சை இழுத்து வாங்கினேன் உண்மையிலே மூலிகை காற்றுத்தான். இப்போ மூக்குக்கு இதமான காற்று, கண்களை திறந்தேன்........ கோவிலுக்கு வெளியே ஒரு பிச்சைக்காரன் மற்றோரு பிச்சைக்காரனுடன் சண்டைப்போட்டுக் கொண்டு இருந்தான். மலை, பள்ளத்தாக்கு, என்று எங்கே போனாலும் இவர்கள் எப்படி முதலில் வந்து விடுகிறார்களோ,,,,,,,,,, நிலாவுக்கு போனால் கூட சில்லரை வைத்துக் கொண்டு தான் போக வேண்டும் போல இருக்கு.

    என்ன சண்டை என்று லைட்டா ஒட்டுக் கேட்டேன், யாரோ காசைப் போட்டு இருவரையும் பிரித்து எடுத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார்கள். ஒருவன் ஏமாற்றி விட்டான், மற்றவன் அவனை கோபத்தில் திட்டிக் கொண்டு இருந்தான், ஏமாந்தவன் தன் கைகளை நீட்டி ஏமாற்றியவனை உன்னை அடிச்சே கொன்னுடுவேன் என்றான். அவன் கைகளில் விரலே இல்லை, ஏன் பாதி உள்ளங்கையே இல்லை, தொழுநோய் வியாதி கையை காவு வாங்கி விட்டது. இதி்ல் எங்கே அவனை இவன் கொல்வது, வியாதி வந்த பின்னும் திருந்தாதவர்கள். அதற்குள் என்னுடைய செல் எனக்கு தரப்பட்டது. வாங்கி காதில் வைத்தேன்

    "ஹலோ.." என்றேன்.

    "ஏனுக்கண்ணா என்னப் பண்றீங்க, வந்து சேந்தாச்சுங்களா" (கோவை சரளா பாஷையில் இதை படிக்கவும்). என்று கீச்சுக் குரலில் ஒருத்தி என்னிடம் பேசினாள்.

    "வந்தாச்சு வாந்தாச்சு"

    "ஏய் எரும, அத நல்லாத்தான் சொல்றது, எப்படி இருக்குங்க அந்த ஊரு" என்றது அந்த பெண் குரல், அவள் வேறு யாரும் இல்லை, நம்ம சமுத்திரா செல்வம் (எ) லீலுமா (எ) லீலா (எ) சாத்தானின் நேரடி படைப்பு தான். வேன் 60 வதை தாண்டிய எதோ கொண்டை ஊசி வளைவில் நான் அவளுக்கு போன் செய்தேன், பின்னர் உறவுகளிடம் பேச செல்லை கொடுத்தேன், பல பேரிடம் சென்று விட்டு இப்போ தான் இந்த போன் என்னிடம் கிடைத்தது. லீலாவை பற்றி சில விஷயங்களை கொஞ்சம் சொல்ல வேண்டும்.

    பாசத்தால் ஒருவனை கட்டிப் போட முடியும் என்பதற்கு இவள் ஒரு சிறந்த உதாரணம். சமுத்திரா செல்வத்தை அவள் இவள் என்று குறிப்பிடுகிறேன் என்று என்னை யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். அவளின் அண்ணன் என்ற உரிமை எனக்கு உண்டு, அந்த உரிமையை அவளே எனக்கு வலுக்கட்டாயமாக கொடுத்தால், (கடைசி காலத்தில் அவளின் சொத்தை நான் பிரித்துக் கேட்கும் போது ஏண்டா உரிமையை கொடுத்தோம்னு அவள் வருத்தப்படுவாள்). ஆரம்பகாலத்தில் புயல் போல மன்றத்திற்குள் நுழைந்தாள், அனைவரிடமும் வம்பு செய்தாள், மனங்கவர் பதிவாளர் விருது வாங்கினாள், எல்லாரின் எழுத்தையும் படித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்துவாள். என் கதைகளை ஆஹோ, ஓஹோ, சூப்பர், மனது கனத்து விட்டது, உயிர் பிரிந்து விட்டது, முடி கொட்டி விட்டது, முதுகு அரித்து விட்டது, நாய் குரைத்து விட்டது என்று எதையாவது பின்னுட்டத்தை ரைமிங்காக ஈடுவாள்........... ஆனால் கதைப் போட்டியின் போது மட்டும் சிவாஜி அண்ணாவின் கதைக்கு ஓட்டு போட்டு விடுவாள் .................பாதகத்தி.......... இவள் ஒரு டுமாகூர் சகோதிரி (ஹா ஹா கோச்சிக்காதே, சும்மா விளையாட்டுக்கு)

    உண்மையில் இவளின் அன்பில் நான் திக்குமுக்காடி போய் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவரை பேசிக் கொண்டே காண்டாக்டில் இருந்தால் தான் நட்பும், உறவும் நிலைத்து நிற்கும், எனக்கு தெரிந்த சில நண்பர்கள் அப்படி தான். ஆனால் இவளை பார்த்த பின் தான் அந்த நினைப்பை நான் மாற்றிக் கொண்டேன். இவளுடன் நான் தொடர்ந்து பல மாதங்கள் பேசாமல் இருந்து இருக்கிறேன். ஆனால் அத்தனை மாதம் கழித்து அவள் போன் செய்து

    "டேய் எருமைமாடே எப்படி இருக்கிறாய்" என்று அதே பாசத்துடன் கேட்பாள்.

    என்னிடம் அடம்பிடித்து என்னுடைய போட்டோவை வாங்கிக் கொண்டாள். நான் போன் செய்யவில்லை என்றால், அந்த போட்டோவை போட்டோஷாப் மென்பொருள் உதவியுடன், மாற்றி எவ்வளவுக்கு எவ்வளவு அசிங்கமாக, விகாரமாக ஆக்க முடியுமோ அப்படி செய்து எனக்கே திரும்ப அனுப்புவாள்..............நான் கேட்காமலே அவளுடைய போட்டோவை எனக்கு அனுப்பினால், சகோதிரி என்ற உணர்வில், உரிமையில்.

    நான் போட்டோவை பார்த்தேன், ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கு புடவை கட்டியது போல ஒரு உருவம். பார்ப்பவர்களுக்கு இவ உயரத்திற்கு புடவை எங்கு கிடைக்குது என்று கண்டிப்பாக சந்தேகம் வரும். அந்த ரகசியம் எனக்கு தெரியும், ஒரு முழுப்புடவையை வாங்கி மூன்று பாகமாக கிழித்துக் கட்டிக் கொள்வாள் ஹா ஹா ஹா, அவள் வீட்டுக்காரர், வெங்கி க்கு செலவு மிச்சம். பேச ஆரம்பித்தாள் பேச்சுப் போட்டியில் பேசுவது போல கோயம்புத்தூர் பாஷையில் வேகமாக பேசுவாள். ஆரம்பத்தில் எனக்கு இவள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை. ஓவ்வொரு வார்த்தை முடிந்தவுடன் ஒரு இங்கவை, சேர்த்து விடுவாள். ஆபிஸ்லிருக்கீங்களா, குளிச்சிங்களா, சாப்பிட்டீங்களா, உருப்படுவீங்களா, நாசமா போனீங்களா, கெணத்துல குதிக்கிறீங்களா எல்லாத்துக்கும் பின்னாடியும் இங்களா தான் அவ மொழியில்.

    நான் அவளை இப்படி சொல்லி கிண்டல் செய்தால், உடனே அவள் என் எழுத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவாள்.

    "உன் மாதிரி என்ன நான் வந்துக்குனு, போயிக்குனு, சாப்பிட்டுக்குனு நான் பேசறேன், எங்க பாஷை தான் சுத்த தமிழ்" என்பாள் பெருமையாக

    அப்போ " எங்களுடன் வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா, களை பரித்தாயா, ஏற்றம் இரைத்தாயா அல்லது கொஞ்சி விளையாடு எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா" அப்போ இது என் மொழி, சீன மொழியா ........ ஏய் ஹார்லிக்ஸ் பாட்டில் நீ முதலில் பேசுவதே இல்லை, பாடுகிறாய்......... அதுவும் உன் கீச்சுக்குரலில், நீ என்னை திட்டும் போது என் இடது காதின் செவிப்பரை கிழிந்து வலது காது வழியாக தொங்குகிறது.

    நாங்கள் இறங்கியவுடன் தல மணியாவை அழைத்து வர வேனை நாமக்கல் அனுப்பி வி்ட்டு, நாங்கள் ஆகாச கங்கையை நோக்கி எங்கள் யாத்திரையை தொடங்கினோம். முதலில் படிக்கட்டுகள் பெரிதாக ஒரு மீட்டர் இடைவேளி விட்டு விட்டு வந்ததால் எங்களுக்கு அலுப்பு தெரியவில்லை. போக போக படிக்கட்டுகள் சுருங்க ஆரம்பித்தது. இதை பார்த்தவுடன் சிலரின் முகம் சுருங்கியது, எனக்கு பயத்தில் உடலே சற்று சுருங்கித்தான் போனது, நான் மொத்தமாக பத்து படிக்கட்டுகள் தான் இறங்கி இருப்பேன், அதற்குள் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. தாமரை அண்ணா, மதி, ரவி எல்லாரும் என்னமோ அதிகாலை வீட்டில் திருடி விட்டு மதில் சுவரை தாண்டி குதித்து ஓடும் திருடர்களை போல அவசர அவசரமாக ஓடினார்கள். அதுவும் மதி உயரத்திற்கு, அவன் காலை விரித்து வைத்தால், நான்கு படிகள் கடந்து விடுகின்றன. நம்ம சூரியன் காற்றில் மிதக்கும் கோழி இறகு போல மிதந்துக் கொண்டு சென்றான், நான் காலை அகல விரித்தால், என் அகலத்திற்கு உடம்பு பல இடங்கில் அப்படியே தசைகள் பிடித்துக் கொள்கிறது. 30 படிகளை தாண்டியவுடனே கால் நடுங்க ஆரம்பித்தது. இத்தனைக்கும் என் கைகளில் பை கவர்கள் எதுவுமே இல்லை, எல்லாவற்றையும் காற்றில் மிதக்கும் சூரியனிடம் ஏமாற்றி கொடுத்து விட்டேன்.

    "டேய் தம்பி இத கொஞ்சம் புடியேன், நான் வேஷ்டி கட்டிக் கொள்கிறேன் என்பேன் pantஐ அணிந்து இருக்கும் நான். டேய் குரங்கே நீ pant தானே போட்டுக் கொண்டு இருக்கிறாய் என்று பதிலுக்கு கேட்காமல் பாவம் என்னிடம் இருந்து வாங்கிக் கொள்வான் சூரியன்.

    அடுத்து கொஞ்ச தூரம் போனவுடன்

    "டேய் தம்பி இத புடியேன் தண்ணி குடிச்சிட்டு வரேன்" மறுபடியும் வாங்கிக் கொள்வான். மறுபடியும் கொஞ்ச தூரம் சென்றவுடன். இவன் ரொம்ப நல்லவன் என்ற நம்பிக்கையில் சூரியனை நோக்கி

    "டேய் பாய்........ அண்ணன்கிட்ட இருந்து இந்த கவரை வாங்கிக்கோ" என்பேன்.

    "அண்ணா போங்கன்னா, எல்லாத்தையும் என்கிட்டையே கொடுக்கிறீங்க" என்று சிணுங்குவான்.

    "டேய் அண்ணன் இந்த உடம்பை தூக்கிட்டு நடக்கறதே பெரிய விஷயம் டா தம்பி, இதுல கவரை வேற வச்சுட்டு ..புடிடா" என்று சால்ஜாப் செய்து கொடுத்து விடுவேன். சூரியன் கண்டிப்பாக அடுத்த மன்றக்கூட்டத்திற்கு வரமாட்டான். அப்படி வந்தாலும் என் பக்கத்தில் வரமாட்டான் என்று நினைக்கிறேன்.

    சில படிகள் அதாவது, 10, 15 படிகள் கடந்ததும் சூரியன் என்னிடம் வந்தான்.

    "அண்ணா இந்த கவரை பிடிங்களேன், நான் தண்ணி குடுச்சுக்கிறேன்" என்பான் என் பாணியில். ஆஹா பையன் உசார் ஆகிட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

    அதே போல தண்ணியை குடித்துவிட்டு நான் அமர்ந்து இருக்கும் கேப்பில் என்னிடம் கவரை விட்டு விட்டு காற்றோடு காற்றாக கலந்து விடுடான். படி இறங்கி வந்ததில் எனக்கு வேகமாக மூச்சு வாங்கும். நான் வேகமாக மூச்சை இழுத்து விடுவதில் என்னுடைய உடம்பிற்குள் இருக்கும் உறுப்புகள் சிலது இடம் மாறிக் கூட இருக்கும். என் உடல் உறுப்புகள் பழைய இடத்திற்கு செட்டில் ஆகும் வரை சிறிது நேரம் அமர்ந்து விட்டு, மறுபடியும் பயணத்தை தொடர்வேன். யாரிடம் பையை கொடுப்பது அருகில் பார்த்தேன் இரட்டையர்கள் ஜார்ஜும், சேவியரும் இருந்தார்கள். எனக்கு இவர்களை பார்த்தவுடன் ஜெயலலிதா, சசிகலா தான் நினைவுக்கு வந்தார்கள். அவரை பிரிந்து இவர் ஒரு மீட்டர் இடைவெளிக்கு அப்பால செல்ல மாட்டார், அதே போல தான் அவரும். இதில் யார் ஜெயலலிதா, யார் சசிகலா என்பது உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். சேவியர் கையில் கவர் வைத்து இருந்தார், கவர் நிறைய தின்பண்டங்கள் எங்கள் அனைவருக்காகவும் எடுத்து வந்தார். வாங்குகிற மூச்சில் எங்கே சாப்பிடுவது, கண்ணுக்கு பசித்தாலும், வயிற் நிறைய காற்று நிரம்பியுள்ளதே, அதனால் எனக்கு அதில் நாட்டம் வரவில்லை. வேறு வழியில்லாமல் என் கவரை நானே தூக்கிக் கொண்டு சென்றேன் சிறிது தூரம் வரை.

    இப்போது படிகளின் அகலமும், உயரமும், நீளமும் குறைந்துக் கொண்டே வந்தது. ரோட்டைப் போல சமமாக இதுவரை வந்த படிகள் ஒரு இடத்தில் திடீரென செங்குத்தாக இறங்கியது. பார்க்கவே பயமாக இருந்தது, என்ன இது கிஸ்கிந்தா நீச்சல் குளத்தில் உள்ள சறுக்கு மரமா, சருக்கிக் கொண்டு போய் தண்ணீரில் விழ, கொஞ்சம் கால் இடரி விழுந்தாலும், நேராக மலையின் அடிவாரத்தில் போய் இறங்க வேண்டியது தான். அடிவாரத்தில் போய் விழ கண்டிப்பாக 3 மணி நேரம் ஆகும் அவ்வளவு ஆழம். படிக்கட்டின் ஓரத்தில் இருந்த இரும்பு கம்பிகளை பிடித்துக் கொண்டு காலில் சாக்ஸ் அணிந்துக் கொள்ள முயலும், 80 வயது கிழவனைப் போல குனிந்துக் கொண்டு இறங்கினேன். பலரும் அப்படி தான் இறங்கினார்கள், ரவி மட்டும் அண்ணாமலையில் வரும் ரஜினிகாந்த் மாதிரி ஸ்டைலாக பக்கவாட்டில் சாய்ந்துக் கொண்டு இறங்கினார். அப்படி இறங்கும் போது ஒரு படியில் கால் தடுக்கி விட்டது, நல்லவேளை சுதாரித்துக் கொண்டார், அப்படி அவர் சுதாரித்துக் கொள்ளாமல் இருந்து இருந்தால், நம்ம தலைவரு அப்படியே பெல்டி அடித்து லட்ச ரூபாய்கு உடம்பு முழுவதும் சில்லரைகள் வாங்கி இருப்பார், குதிக்கால் கழுத்து பகுதி வந்து, வாயில் இருக்கும் பற்கள் எல்லாம் அவருடை சட்டை சொபியில் சேகரிக்கப்பட்டு இருக்கும்.....ரவி குவியாகி இருப்பார்...... அவர் குடும்பத்தார் செய்த புண்ணியம்........... சார் ஜஸ்டு மிஸ்ஸு, விழுந்து இருந்தார்னா மிஸ்டு கால், மிஸ்டு கைதான். இளைஞர்கள் நாங்களே, பொறுமையாக நடந்து வரும்போது, சங்கூதர காலத்தில் உங்களுக்கு சங்கீதா தேவையா ????சொல்லுங்க ரவி சார். அடுத்த முறை படிக்கெட் எல்லாம் ஏறும் போது, இந்த ரஜினி ஸ்டைல் எல்லாம் வேண்டாம்.


    அனைவரும் வியூபாயிண்டுக்கு வந்தோம். பெரிய பள்ளம், சுற்றிலும் மலை, அவற்றை ஒப்பிடும் போது, என்னை ஒரு பாக்டீரியாவைப் போல உணர்ந்தேன். அனைவரும் காத்துக் கொண்டு இருந்த இடத்தில் தாமரை அண்ணாவையும், மதியையும் பார்த்தேன், பயணத்தை தொடங்கும் போது பார்த்து தான் அதன் பின் இங்கு தான் பார்த்தேன். எங்களுக்காக காத்து இருந்தனர். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம், மறுபடியும் மதியும், தாமரையும் அதிகாலை திருடர்களை போல மதில் சுவரை தாண்டி அருவியை நோக்கி ஓட ஆரம்பித்தனர், சிறிது நேரத்தில் இருவரும் கண்களில் இருந்து மறைந்தனர். அவர்களை துரத்த என்னிடம் தெம்பு இல்லை, அவர்களை மாட்டி விட போலீஸும் அங்கில்லை, கையில் வேறு கணம் இருந்ததால், வழியை கடக்க முடியுமா என்ற பயம் வேறு எனக்கு இருந்தது. யாரிடம் கவரை கொடுப்பது, என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.

    ஆதவாவும், சசியும் ஒவ்வொரு பூவையும், இலையையும், இரண்டு பூச்சிகள், புழுக்கள் சேர்வதையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, புதுமண தம்பதிகளை போல பொறுமையாக வந்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் கையில் செல்வாவின் நல்ல கேமிரா, அந்த கேமிராவிற்கு மட்டும் வாய் இருந்தால் சசியையும், ஆதவாவையும் பார்த்து இப்படி தான் சொல்லி இருக்கும்.

    "டேய் நீங்க இரண்டு பேரும் சோறு தான் சாப்பிடுறீங்களா இல்லை, டோமினோஸ் ஜம்போ பீஸா சாப்பிடுறீங்களா, நானும் பார்த்துக் கொண்டு இருக்கேன் சும்மா என் தலையில் உள்ள பட்டனை விரலை வைத்து அமுக்கிக் கொண்ட வரீங்க. இயற்கையை ரசிக்கிற குரங்குகள்.... நீங்கள் அந்த காட்சிகளை கண்களால் படம் பிடித்துக் கொண்டு மனதில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டியது தானே. அப்படியும் தவிர்க்க முடியாத அழுக காட்சியாக இருந்தாலும் படம் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் நீங்கள் படம் பிடிப்பது, பூவு, மரம் செடிக் கொடி, பூச்சி புழுக்கள் தங்கள் லவ்வருடன் அப்படி இப்படி இருப்பதை எல்லாமாடா படம் பிடிப்பது. அதுவும் என் கண்களை அவற்றின் அருகில் கொண்டு செல்லும் போது, அந்த பூச்சிகளும் புழுக்கலும் என் குடும்பத்தையே திட்டுகிறது. சோ தயவு செய்து என்னை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துங்கள், இப்படி xxx படங்களை பிடிக்க பயன்படுத்தாதீர்கள். அதைவிட முக்கியமான விஷயம் இனிமேல் தக்ஸை போட்டோ எடுக்க வேண்டும் என்றால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை கொஞ்சம் வைடு லென்ஸா வாங்கிப் போடுங்கள், அவன் என் கண்களுக்குள் அடங்கவே மாட்டாரா, வங்காலவிரிகுட மாதிரி பரந்து விரிந்து இருக்கிறான் " ........... இப்படிக்கு உயிருள்ள கேமிரா.

    பல போட்டோகளை எடுத்து தள்ளிய சந்தோஷத்துடன், வேற எந்த பூச்சியின் சந்தோஷத்தை கெடுக்கலாம் என்ற வெறியுடன் இருவரும் செடி கொடிகளுக்குள் பூந்து கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிய தேடிய படி வந்துக் கொண்டு இருந்தார்கள். படிக்கட் இறங்குவதால் சசிக்கு மூச்சு நன்றாக வாங்கியது, அவன் சுற்றுவட்டாரத்தில் இருந்த ஆக்ஸிஜனை அவன் வகதகையான மூக்கு vacuum cleaner ரைப் போல உறுஞ்சிக் கொணடு வந்தது. இதனால் ஆதவா போதிய சுவாசக்காற்று கிடைக்காமல் எப்போது வேண்டுமானால் கோமா நிலைக்கு தள்ளப்படுவான் என்று நான் யூகித்து இருந்தேன். அந்நேரம் ஆகாச கங்கையை பார்த்து விட்டு, சில கும்பல்கள் நடைப்பிணத்தை போல படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டு வந்தனர். எல்லாரையும் பார்ப்பதற்கு மைக்கேல் ஜாக்சன் திரில்லர் ஆல்பத்தில் சவக்குழியில் இருந்து எழுந்து வரும் பிணங்களை போல தெரிந்தனர். அனைவரும் குளித்து விட்டு வருகிறார்கள் என்று அவர்கள் வெளீர் முகத்தை பார்த்தாலே தெரிந்தது. நல்ல மூலிகை அருவித் தண்ணியில் குளித்து விட்டு வருவதால் முகம், fair and lovely போட்டு பவுடர் போட்ட மாதிரி வெள்ளையாக இருந்தது. அவர்களை பார்த்து

    "என்னங்க இன்னும் எவ்வளவு தூரம் போகணும்"

    "கொஞ்ச தூரம் தான், பக்கத்துல வந்துட்டீங்க, இன்னும் 500, 600 படிகள் தான்" என்று பிணம் தன் போக்கில் நடந்து போனது. எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது, இன்னும் 500, 600 படிகளா, அடக்கடவுளே...

    ஏன் இந்த அருவிகளை பள்ளத்தில் வைக்கிறாய், ரோட்டின் ஓரமாக வைத்து இருக்கலாமே, வேனில் இருந்து அப்படியே தலையை மட்டும் நீட்டி விட்டு குளித்து இருப்பேனே. அட்லீஸ்டு பள்ளத்தில் வைத்தாயே, ஒரு லிஃப்டாவது ஏற்பாடு செய்தாயா, அல்லது இறங்க எஸ்கலேடராவது ஏற்பாடு செய்து இருக்கலாமே. கடவுளே நீ ஒரு இரக்கமற்றவன். என்று திட்டிக் கொண்டு சூரியனை தேடினேன், என் கவரை கொடுக்க

    "தம்பி ......." என்று என் குரலைக் கேட்டதும் வேகமாக படிக்கட்டில் மிதந்துச் செல்ல ஆரம்பித்தான் கோழி இறகு சூரியன்.

    தொடரும்...
    Last edited by ரங்கராஜன்; 18-09-2010 at 10:05 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by samuthraselvam View Post
    ஒரு பூசணிக்காய் எல்லோரையும் இப்படி போட்டு வாருதே....


    ஒரு பூசணிக்காய் எல்லாத்தையும் போட்டு உடைக்குதே..ன்னு சொல்லனும்.

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சில்லறை சிதறும் எழுத்தோட்டம்.

    அட்டகாசப்படுத்துறீங்கப்பா.

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    லீலுமாவை இப்படியா வாருவது. இருக்கு உங்களுக்கு இருக்கு. அதற்கு என் வாழ்த்துக்கள்.

    நன்றாக இருக்கிறது உங்கள் பயணக்கட்டுரை, நானும் உங்கள் கூடவே வருவது போன்ற நினைப்பு வருகிறது. தொடருங்கள்.

  12. #48
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இதே வேகத்துல எழுதி முடிச்சுடு....

    உன் வர்ணனைகளே தனி... அதுவும் வராதவங்க வயிற்றெரிச்சல நல்லாவே கிளப்பிவிடும்...!!!

Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •