Results 1 to 3 of 3

Thread: இண்டெர்னெட் இனைப்பு விலகுவது ஏன்??

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0

    இண்டெர்னெட் இனைப்பு விலகுவது ஏன்??

    அன்பு நண்பர்களே,
    நான் பணிசெய்யும் இடத்தில் உள்ள கேம்பில்,எனது கணிணிக்கு இண்டெர்னெட் இனைப்பை எனது அறையில் இருந்து கொஞ்ச தூரம்
    {50 மீட்டர்} தள்ளியிருக்கும் ஒரு நண்பரது அறையில் இருந்து இனைத்துள்ளேன்.

    அவர் பிராட்பேண்ட் கனெக்க்ஷன் பெற்று, என்னைப்போல் இன்னும் 6 நண்பர்களையும் சேர்த்து, ஒரு ரூட்டரில் இண்டெர்னெட் கனெக்க்ஷனை இனைத்து அதன் வழியாக அனைவருக்கும் கொடுக்கின்றார்.

    இதனால் ஆகும் செலவை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.

    சில சமயம் எனது கணிணிக்கு வரும் கனெக்க்ஷன் தொடர்பு இல்லாமல் போகின்றது.
    கணிணியின் வலது மூலையில் தோன்றும் லோக்கல் ஏரியா கெனெக்க்ஷனில் ஒரு பூட்டு போன் தோன்றுகிறது.
    அதை கிளிக்கினால் உங்கள் கனெக்ஷன் செயல்பாட்டில் இல்லை என்று அறிவிப்பு வருகின்றது.
    அப்போது நண்பரது அறைக்குச் சென்று ரூட்டரின் மிண்தொடர்பை நிறுத்தி மீண்டும் போட்டால் எல்லாம் சரியாகிவிடுகிறது.
    எனக்கு இதுபோல் சம்பவிக்கும்போது மற்றவர்களுக்கு சரியாகவே உள்ளது.
    இதுபோலவே ஒவ்வொரு சமயமும் ஒவ்வொருவருக்குக அல்லது இருவருக்கு நிகழ்கிறது.
    காரணம் என்னவாக இருக்கும்????
    ரூட்டர் வைத்திருக்கும் நண்பர் தனது அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தால் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும். இதை தவிர்ப்பது எப்படி?
    Last edited by pgk53; 13-09-2010 at 01:57 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு பி.ஜி.கே,

    நீங்கள் கம்பியில்லா இணைப்பு வழியாக இணையத்தில் இணைகிறீர்களா அல்லது லேன் முறையிலா...?

    ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மின்சாரம் முறையான படி அங்கே வருகிறதா என்று சோதிக்கவும். மேலும் ஐம்பது மீட்டர் என்பது ஓரளவுக்கு தூரமே. நீங்கள் கூறி இருப்பதை மட்டும் வைத்துப்பார்த்தால் ரூட்டர் அதிகமாக வெப்பமடைகிறது எனத்தோன்றுகிறது. தற்காலிகமாக வேறு ரூட்டரை இணைத்து சில நாட்கள் சோதிக்க முடியுமா என்று பாருங்கள்.

    இன்னும் எளிதாக வேண்டுமெனில் நண்பரின் அறைச்சாவி ஒன்றை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    4 பேருக்கு சாதகமாகக்கூடியது தான் இந்த ரூட்டர்ஸ். DSL ற்கு நன்றாக இயங்கும். ஆனால் நான் நினைக்கிறேன் அநேகர் 512 ADSL இணைப்பு வைத்திருப்பார்கள். அதை ஆறு ஏழு என பகிர்ந்தால் அதனுடைய திறமை குறைய ஆரம்பிக்கும். இப்படியான நேரத்தில் ரூட்டர்களுக்கு உதவியாக பகிர்ந்தளிக்கும் ஒரு சாதனம் ஏறத்தாள 40-50 AED ற்கு இருக்கிறது (ஏறத்தாள ரூட்டரைப்போலவே இருக்கும்.). ஒரு கேபிளை எடுத்து 4 5 ஆக பிரிக்கும். அப்படி எடுக்கும் போது இணைய வேகம் குறையும். ஆனால் ரூட்டருக்கு பெரிய பழு ஏற்படாது தடுக்கலாம்.

    6 பேர் பாவிப்பதென்றால் குறைந்தது 1 - 2 MB இணைப்பு வைத்திருப்பது நலம். ஓரளவான வேகத்தினையும் கொண்டிருக்கும்.

    இந்த சம்பவம் எமக்கும் நடந்திருக்கு. துபாயில் நானிருந்தபோது அங்கு எட்டு கணினிகள். இருந்த இணைப்பு 512. பின்பு நானும் இன்னும் 2 நண்பர்களுமாக இன்னொரு 2 MB இணைப்பு எடுத்து பாவித்தோம். இரவு பகலாக பதிவிறக்கம் யூடியூப் என இருந்தது. அதிலும் ரப்பிட்ஷேர் ஒருநாளைக்கு 10 GB க்கு மேல் பதிவிறக்க வேண்டும் என்று மேலும் 10 யூரோ கொடுத்து கணக்கு வைத்திருந்து பதிவிறக்கியபோதும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றய 5 பேரும் பட்ட அல்லல்கள் நினைத்தால் சிரிப்பு வரும். ஒருவர் மெசென்ஜரில் கதைத்துக்கொண்டிருப்பார். மற்றவருக்கு நின்றுவிடும். அவர் வந்து இதை நிறுத்தி மீள ஆரம்பிப்பார். மற்றவர் மறுபுறமாக ஹலோ ஹலோ என்று உரத்து பேசுவார். நான் சொல்வேன். டேய் நீ சத்தமாக கத்தினாலும் அங்கால கேட்க்காது. ஏனென்றால் உன் கனெக்ஷன் கட் எனும் போது கோபத்தை பார்க்கணுமே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •