புத்தகங்களுக்கு நிகராக வலைப் பக்கங்களில் அகராதிகளும் அகரமுதலிகளும் படையெடுக்கத் தொடங்கி விட்டன. கணிசமான இணையப் பயனாளர்களும் அதனைப் பயன்படுத்தி வருகின்ற வேளையில் முக்கிய அகராதிகளை ஒருங்குப் படுத்தும் ஒரு சிறு முயற்சியாக இந்த கஜெட்டை உருவாக்கியுள்ளேன்.



பயன்படுத்தும் முறை:
இதில் நேரடியாக தமிழ் சொற்களைத் தட்டச்சு செய்யலாம். அல்லது வேண்டிய சொல்லை இணைத்தும் கொள்ளலாம்.
அடுத்து வேண்டிய அகராதியை தேர்ந்தெடுத்து 'செல்' பொத்தானை அழுத்தவும்.
முகக்கியமான மற்றும் தொழிற்நுட்ப ரீதியில் இணைக்கமான அகராதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

முடிந்தளவு பிழைகளை களையப்பட்டுள்ளது மேலும் பிரதான உலாவிகளில் சிறப்பாக செயல்படுகிறது. கஜெட் பாதிக்காமல் இதை புதிப்பிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மேலும் பயனர்சார் வசதி மேன்பாட்டு ஆலோசனைகளும் குறைகளும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

தேவைப்பட்டால் உங்கள் வலைப் பக்கத்தில் இணைக்கும் முறை:
இந்த நிரலியை நேரடியாக எடுத்தும் போட்டுக் கொள்ளலாம்.
Code:
<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/Neechalkaran_tamildictionaries.xml&synd=open&w=290&h=110&title=Tamil+Dictionaries+and+Searches&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>
இதன் மாதிரியை இப்பக்கத்தின் கீழே பார்த்துக் கொள்ளலாம்..
http://ethirneechal.blogspot.com/2010/08/gadget.html

தொடர்புடைய இடுகை:
முன்னர் சேகரித்த அகராதிகளின் பட்டியலில் மேலும் சில அகராதிகள் சேர்த்துள்ளேன். வேண்டியவர்கள் அறிந்து கொள்ளுங்கள்