தங்கத்தின் இன்றைய விலை நிர்ணயிப்பு என்பது அதன் சர்வேதேச அமெரிக்க சந்தை மதிப்பீட்டை கொண்டு கணிக்கப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே....அமெரிக்காவில் இன்றைய ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை என்னவாக இருக்குமோ? அதைக்கொண்டு இந்திய மதிப்பீட்டில் டாலரின் மதிப்பைக் கொண்டு கணக்கிட்டு இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தினமும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமும் இதனடிப்படையில் தான்....பொருளாதாரப்பிரிவில் உள்ளவர்கள் இதை இன்னும் விளக்கமாக விளக்குவார்கள்....

நாம் இந்த அடிப்படையில் ஒரு கணிப்பானை எக்சலில் உருவாக்கி தினமும் அதன் விலையை அறிந்து கொள்ளலாம்....


ஒரு டிராய் அவுன்ஸ் (troy ounce) தங்கம் என்பது 31.1034768 கிராம் அதன் (டாலர்).....இன்றைய விலையை...இங்கே சென்று அறிந்து கொள்ளலாம்
அதை மேற்குறிப்பிட்ட முறையில் தரவு பணித்தாள் படத்தில் காட்டியுள்ளபடி உருவாக்கி அங்கு குறிப்பிட்டுள்ளபடி டாலர் மதிப்பீட்டை உள்ளிட்டவுடன் 10 கிராம் தங்கத்தின் டாலர் மதிப்பீடு கிடைக்கும்...

அதன்பின் டாலரில் இருந்து இந்திய மதிப்பீட்டுக்கு மாற்றவேண்டும்...அப்படியென்றால் டாலரின் இன்றைய மதிப்பீட்டை உள்ளிட வேண்டும்...
அதற்கு இங்கே சென்று மதிப்பீட்டை பெற்று உள்ளிடவும்

அதன் இந்திய ரூபாயில் 10 கிராம் தங்கத்தின் விலை கிடைக்கும் அதற்கு சுங்க வரி 200 ரூபாய் அதற்கு ஒரு சதவீதம் வாட் வரி (மும்பை பங்கு வர்த்தக சட்டதிட்டத்தின் படி) உள்ளிட்டால் இன்றைய தங்கத்தின் விலை கிடைக்கும் இது ஒரு தோராயமான மதிப்பு இது அவ்வப்பொழுது சந்தை நிலவரம் மற்றும் தங்க வணிகர்களை பொறுத்து இந்த மதிப்பீடு மாறும்...அதிக வேறுபாடு இருக்காது...

அடுத்து வேறொரு....தரவு தாளில்...
நன்றி!
ஆதாரத்தகவல்கள் பெறப்பட்ட தளம்...இதில் கூறியுள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது