Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: ஊர்க்கோலம்.

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  250,670
  Downloads
  151
  Uploads
  9

  ஊர்க்கோலம்.

  இங்கிருந்து பலரும் இலங்கைக்குப் போகிறார்கள். போனவர்களில் பலர் அங்கிருந்து அழைத்து அப்படி இருந்த ஊர் எப்படி எல்லாம் மாறிவிட்டுது என்பதை அனு அனுவாக அளிக்கிறார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல அவர்களின் மகிழ்ச்சி பூத்த மனங்களைக் காணக் காண முறுவலான அப்பத்தின் கரையில் இருக்கும் கருகிய இடம் முந்திக்கொண்டு முன்வந்தது.

  ஊர்க்கோலம் சொல்லி ஊர்கோலம் அழைத்துப் போகும் தடம் ஒன்றை மன்றத்தில் தொடங்கினால் என்ன என்றும் தோன்றியது.

  நான் பிறந்த ஊரைப் பற்றி இங்கே சொல்வேன், கொஞ்ச நாளைக்குப் பிறகு. அதற்கு முன் எவராவது ஊர்க்கோலம் போட விரும்பினால் தாராளமாகப் போடலாம்.

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  சொல்லுங்க சொல்லுங்க.... காத்திட்டு இருக்கொம்.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  15,770
  Downloads
  62
  Uploads
  3
  ஓ...!
  அய்யப்பன் படிக்கட்டுகளைத் தொட்டதால் எங்களுக்கு சிறப்பு விருந்தா...?
  பாராட்டுடன் பகிர்வைப் படிக்க காத்திருக்கிறேன் அமரன்.

 4. #4
  இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
  Join Date
  23 Mar 2009
  Posts
  928
  Post Thanks / Like
  iCash Credits
  9,700
  Downloads
  7
  Uploads
  0
  தொங்கினால் கூடவே வந்துவிட்டு போகிறோம்.என்ன தூரம் ரொம்ப அதிகமா இருக்குமா.
  குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
  Join Date
  18 Mar 2010
  Location
  தாய்த்தமிழ்நாடு
  Posts
  2,949
  Post Thanks / Like
  iCash Credits
  14,535
  Downloads
  47
  Uploads
  2
  சொல்லுங்க சொல்லுங்க
  த.நிவாஸ்
  வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  250,670
  Downloads
  151
  Uploads
  9
  ஊக்கத்துக்கு நன்றி நண்பர்களே.

  பாரதி அண்ணா..

  பதினேட்டாம் படி தொட்டமைக்காக இல்லை இது.

  14 முதல் 31 வரை விடுப்பு. திட்டமிட்ட பயணங்கள் ரத்தாகி விட்ட நிலையில் மன்றம்தானே கதி.. அந்த விடுப்பில் ஊர் விடுப்புப் பேசலாமே என்று ஒரு எண்ணம். நீங்களும் பேசுவீங்கதானே.

 7. #7
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  133,031
  Downloads
  161
  Uploads
  13
  பேசப்போறீங்களோ...???
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  161,636
  Downloads
  69
  Uploads
  1
  நேரமாச்சி... சீக்கிரம் கைப்பிடிச்சி கூட்டிட்டு போ அமரா...
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  250,670
  Downloads
  151
  Uploads
  9
  வசாவிளான்.. நான் பிறந்து தவழ்ந்த கிராமம். ஊரைக் கிழித்து, வடக்குத் தெற்காக ஒரு பிரதான வீதி போகும். யாழ்ப்பாண மாநகர் வரை நீளும் மாவட்ட நெடுஞ்சாலை எனலாம் அதை. பிரதான வீதியின் கிழக்குப் பக்கம் தோட்டக்காணியும், பொட்டல் வெளிகளும் விரிந்து கிடக்கும். குடிமனைகள் சொட்டைத்தலையில் இருக்கும் முடிகளாகக் காட்சி அளிக்கும். மேற்குப்பக்கம் குடிமனைகள். சூரியன் காலிக்கும் முன் கிழக்கே போய், மறைந்த பின் மேற்கே வருவது எங்கள் ஊரின் வாழ்க்கை.

  எங்கள் பெருங்கிராமம் சிறு சிறு குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். குறிச்சிகளின் வகிடாக சாதி இருந்தாலும் சாதிச்சண்டையை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒவ்வொரு வீட்டு விசேசத்திலும் எல்லாச் சாதிக்காரனும் இருப்பான். எக்காரணமும் எவரையும் பிரிக்கவில்லை, தள்ளி வைக்கவில்லை. விருந்தாளி என்று வந்துவிட்டால் எல்லாரும் சமானம் என்ற சமரசப் பூமி எங்களூர். இப்படிப் பட்ட ஊரில் குறிச்சிகள் எப்படி முளைத்தன..

  தேடினால் கிடைக்கும் விடை.. தொழில். ஆனால் உண்மை சந்ததி, பரம்பரை... குறித்த குறிச்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே வம்சாவழியாக இருப்பர். அதுக்கா பரம்பரப்பகை என்று எதுவும் இருக்கவில்லை. தொழில் ரீதியான பிரிப்பு என்று பலரும் கூறினாலும் அதை எவரும், எந்தச் சாதியினரும் மாற்ற முன்வராதது எதனால் என்ற குழப்பம் இன்றளவும் எனக்குள்.

  எங்கள் ஊர் தரும் ஆச்சரியங்களில் இன்னொன்று, வீடு வளவுகள். ஓட்டு வீட்டுக்கு கிடுகு வேலி இருக்கும். கூரை வீட்டுத் தொகுதிக்கு சீமெந்துச் மதிலிருக்கும். கதியால் வேலிகள் மலிந்திருக்கும். அனேகமாக கிளுவைவேலியை எங்கும் காணலாம். மழைக்காலங்களில் தழைத்து நிற்கும் கிளுவைகளையும் அவை தரும் குளுமையும், கிளுவையில் பிடித்து, தீப்பெட்டியில் அடைத்த பொன்வண்டு கையில் ஊரும் போது உடலெங்கும் பரவும் குறுகுறுப்புக்கு ஈடானது.

  எல்லார் வளவுக்குள்ளும் மரங்கள் நிற்கும். மா, பலா, மாதுளை, விளா, பப்பாளி எனப் பழமரங்கள் புடை சூழ கம்பீரமாக அமர்ந்திருக்கும் ஓலைக்குடிசைகளின் அழகு எதிலும் வழையாததொன்று. பழங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உண்ணும் பாங்கு இருக்கே, உறவுகள் தரும் இன்பத்தின் உச்சத்துக்கு வழி சமைக்கும்.

  ஒரு சில வீடுகளுக்கு தனிக்கிணறு. பல வீடுகளுக்குப் பொதுக்கிணறு. ஆனாலும் அப்பழுக்கு இல்லாத பழக்கம் தப்புக்கு இடங் கொடுக்கவில்லை. பொதுக்கிணறு வரும் எல்லாரும் அண்ணன், தங்கை, அங்காளி, பங்காளி எனும் போது தப்புக்கு எப்படித் தைரியம் வரும் என்றால் அதுவும் உண்மைதான்.

  உடல் கழுவி ஓடும் தண்ணீரை வயிற்றைக் கழுவவும் பயன்படுத்துவது உண்டு. வாழையோ, தென்னையோ கிணற்றுக்கு பக்கத்தில் நின்று நிழல் கொடுக்கும் குடும்பங்கள் பலதுக்கு. என்னதான் சொன்னாலும் கிணற்றடி வாழையை நினைத்தால் நாக்கில் இப்பூதும் தண்ணி ஊறும்.

  இதுவரை சொன்னதை சுருக்கமாகச் சொல்வதானால், ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சமைத்ததின் சுவையை ஊர் நா அறியும். பிரிவினை வாதத்தை அது கருவிலேயே அரியும்.

  பொதுவாகக் கிராமங்களில் காதுகளைத் தட்டும் இன்னார் மகனா நீ, இன்னார் பேரனா நீ போன்றவை எங்களூரிலும் உண்டு. ஊரின் ஒரு கோடியில் நான் விழுந்தால் அது மறுகோடியிலிருக்கும் என் வீட்டுக்கு மறுகணம் போய்ச்சேரும். ஒவ்வொருவனும் என்ன செய்கிறான் என்று பாசக்கார ஊர்க்கண்கள் பார்த்துக்கொண்டே இருப்பதால் எவனுக்கும் தப்புச்செய்யும் எண்ணம் ஏற்படவில்லை.

  எங்கள் ஊரில் இரு கீழ்நிலைப்பள்ளிகள். வகுப்பு நிலை ஐந்து வரை அங்கே படிக்கலாம். நான்கு ஊர்கள் சந்திக்கும் எல்லையில் ஒரு உயர்நிலைப்பளி. உயர்தர வகுப்பு வரை உண்டு. நான்கு ஊருல இருந்தும் வருவோரில் எங்களூரிலிருந்து வருவோரை இலகுவாக அடையாளம் கண்டிடுவாங்களாம்.

  அவர்கள் கால்களில் சேறொட்டி இருக்க, உடுப்புகள் செம்புளுதி பூசி இருக்குமாம். ஆம், எம் மண்ணின் நிறம் சிவப்பு. அதுதான் எம் வறுமையைப் போக்கியது.

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  15,770
  Downloads
  62
  Uploads
  3
  ஆஹா... ஆரம்பிச்சாச்சா...!
  வசாவிளானின் வாசம் மன்றத்திலும் வீசட்டும்.
  வசாவிளான் பழங்களாய் மனங்களில் இனிக்கட்டும்.
  தொடர்ந்து வருவேன் அமரன்.
  Last edited by பாரதி; 15-08-2010 at 10:34 AM. Reason: பிழை நீக்கம்.

 11. #11
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  48
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  96,476
  Downloads
  21
  Uploads
  1
  கொஞ்சும் தமிழில் பிறந்த ஊருக்கு ஒரு தாலாட்டு. வளவு, குறிச்சி, கிளுவை போன்ற அர்த்தம் புரியா பல புதிய வார்த்தைகள் புழங்கியபோதும் தயக்கமேதுமில்லாமல் உங்களுடன் பயணப்படமுடிகிறது.

  பழ பரிமாற்றங்கள், பொதுக்கிணறு போன்றவை நான் பிறந்த ஊரை (பிறந்தது மட்டுமே, வளர்ந்ததெல்லாம் வேறு) நினைவுபடுத்துகின்றன. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? என்று பாடத்தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி, அமரன்.

 12. #12
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  133,031
  Downloads
  161
  Uploads
  13
  ஊர்ஞாபகம் வந்திட்டுது. எப்படியும் இந்த தடவை செல்லவேண்டும் என்றிருக்கிறேன். நம்மூர் வாசனை என்றும் மறக்கமுடியாத பசுமை நினைவுகள். இந்திய இராணுவம் வருவதற்கு ஏறத்தாள 1 வாரத்திற்கு முன்னர் வசாவிளானில் சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று தேசையும் இஞ்சிச்சம்பலும் சாப்பிட்டது நல்ல ஞாபகம். பலாலி றோட்டால லாண்ட்மாஸ்டரில வந்தது.

  தொடருங்கள்.

  Quote Originally Posted by கீதம் View Post
  கொஞ்சும் தமிழில் பிறந்த ஊருக்கு ஒரு தாலாட்டு. வளவு, குறிச்சி, கிளுவை போன்ற அர்த்தம் புரியா பல புதிய வார்த்தைகள் புழங்கியபோதும் தயக்கமேதுமில்லாமல் உங்களுடன் பயணப்படமுடிகிறது.
  வளவு - Land என்று சொல்லலாம். காணி என்று சொல்லலாம். இது இன்னாரின் வளவு. இத்தனை பரப்பு இருக்கும். வீடு பத்து பரப்பு வளவு சீதனம் கொடுத்தார்கள் என்று கதைப்பார்கள்...

  குறிச்சி - ஒரு பழைய காலத்தில் ஒரு கூட்டமாக வாழ்ந்ததால் வந்த பெயர் பழக்கம். community எனலாம். எங்க வீடு சோமராந்தோட்டம் குறிச்சி. அம்மம்மாவின் வீடு அம்மையார் தோட்டம் குறிச்சி. என்று சொல்வார்கள்.

  கிளுவை. இவை அநேகமாக வீட்டு வேலிகளை அலங்கரிக்கும் ஒரு வகை மரம். ஒரு 2-3 m நீளமான தடியை (கதிகால்) நட்டால் விரைவில் வேர் விட்டு முளைத்துவிடும். அதிலும் ஆண் கிளுவை பெண்கிளுவை என்று இருப்பதாக சிலர் சொல்வார்கள். பெண்கிளுவையில் உள்ள விதையை காயவைத்து சீமேந்து தரையில் தேய்த்து மற்றவர்கள் உடலில் வைத்தால் காயமே வந்தவிடும். எங்காவது இருந்தால் படம் இணைக்கிறேன்.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •