'தமில் நாட்டில் நடந்த ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாநில அளவில் சுரேஷ் என்ற மாணவன் முதலிடம் பிடித்தார்' சன் நியூஸ் வழக்கம்போல் முரசு கொட்டி தீர்த்தது.நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த பாமா தன் கணவன் பக்கம் திரும்பி....
"என்னங்க..நம்ம பையனும் இந்த மாதுரி வருவானா?ம்ம்ம்ம்..அதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கனும்..நம்ம அப்படியா புள்ளைய பெத்துவச்சிருக்கோம்...தின்னுட்டு தின்னுட்டு ஊர் சுத்திட்டு வருது"
"ஏன் புழம்பி திறியுற..அதுக்கு உன் புள்ளைய அடிச்சு ஒடிச்சு வள்ர்திருக்க வேண்டும்.இப்ப வளையுமா அது?ம்ம்ம்ம்..அரசாங்கமும் அப்படித்தான் இருக்கு.."பதிலுக்கு வெடித்தார் கிருபாகரன்.
"அரசாங்கம் மேல் ஏன் பழியை போடுறிங்க"
"பின்ன என்னடி சொல்றது?தீண்டாமை ஒரு பெருங்குற்றம்னு புத்தகத்தோட முதல் பக்கத்துல சொல்லுற அதே அரசாங்கம்தான்...குழந்தைய பள்ளில சேர்க்கும்போது முதற்க்கொன்டு ஸ்காலர்சிப் வாங்குறவரைக்கும் ஜாதிய பத்தி கேக்குது.மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு அறிவிப்பு கொடுத்துட்டு அதே டாஸ்மார்க் பெயரில் வியாபாரம் செய்கிறது."
"ஜாதிங்கறது மக்களோட ரத்தத்துல ஊறிப்போச்சு..இனிமேல் என்ன செய்ய முடியும்"
"சரிதான்டி..மதம் என்பது வேர்.ஜாதி கிளைகள்.மரத்த மூட்டோடு வெட்டிசாய்க்க முடியாது. வேர்களையும் ஒன்னும் செய்யமுடியாது.கிளைகளை வேண்டுமென்றால் வெட்ட முயற்ச்சிக்கலாம்."
"சரி கஸ்டப்பட்டு படிக்கவச்சி ஒரு காலேஜ்ல போய் சேர்க்கலாம்னா அதுக்கு ரெண்டு லட்சம் மூனு லட்சம்னு அரசாங்கமே கேக்குது"பாமா.
"இவ்வளோ பேசுறியே..ஒரு நல்லவனா பார்த்து ஓட்டு போட்டுருக்கியா?ஒரு நூரு ருபா இல்ல சேலைய நீட்னா போதும்..பல்ல இளிச்சிக்கிட்டு அவன் சொன்ன இடத்துல குத்துற.."
"எவன் இங்கு நல்லவனா இருக்கான்..அப்படியே ஒருத்தன் வந்தாலும் அவன் குடும்ப ஓட்டே அவனுக்கு விழமாட்டேங்குது"
"ம்ம்ம்ம்ம்...எனக்கென்னவோ இங்லீஸ்காரன்கிட்ட இருந்தபோதுகூட இந்தியா நல்லாதான் இருந்துச்சோன்னு தோனுது....ஜாதி பிரச்சனை அப்படி இப்படினு தூண்டிவிட்டாலும் மக்கள் செலிப்பாதான் இருந்தாங்க.இதுல கொடுமைய பார்த்தியா?அவன் நாட்டவிட்டு போனாலும் அவன் கற்று தந்த விசயங்கள் இன்னும் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.ஒருத்தன் தமிழ் என் மூச்சுங்குறான்..பார்த்தா அவன் குழந்த இங்லீஷ் மீடியத்துல படிக்குது."
"இனி அரசாங்கத்த குற சொல்லி என்ன பிரயோஜனம்?நாம நம்ம வழிய பார்த்துட்டு போக வேண்டியதுதான்.அப்துல் கலாம் கூட அத உறுதி படுத்துற மாதிரி"நீங்க ஒரு தொழில ஆரம்பிச்சி நாலு பேருக்கு வேலைய கொடுங்கன்னார்"

"சரி விடு..புழைக்கிறதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு.இதெல்லாம் உணர்ந்து பையன் ஒழுங்கா படிச்சி,அட்லீஸ்ட்..மெரிட்ல ஒரு நல்ல வேலைல செர்ந்து சம்பாதிச்சா அவனுக்கு நல்லது.அது நம்ம கைலதான் இருக்கு.அடிச்சுதான் திருத்தனும்னு இல்ல.ஒரேடியா அடிச்சாலும் மலுங்கி போய்ருவான்.நல்லது கெட்டத பக்குவமா எடுத்துச் சொல்லி வளர்த்தா போதும்....அவன் தலைல என்ன எழுதியிருக்கோ?"
"சூரியன் கிழக்கே உதிச்சி மேற்க்கே அடையுற மாதிரி டெய்லி நாம ரெண்டுபேரும் இப்படித்தான் புழம்பிட்டு இருக்கோம்....ஒன்னும் நடந்த பாடுல்ல"
"சரி இன்னேலிருந்து அவன ட்யூஸன் போக வைக்கவேண்டியது என்னோட வேலை.மத்த விஸயங்களை நீ பார்த்துக்க.."
இவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்தாலும் ஒன்றும் தெரியாதது போல் அவன் கண்கள் சன்முயூசிக்கில் ஓடிக்கொன்டிருந்த"சின்ன பொன்னுதான் வெட்க்கப்படுது அம்மா அம்மாடி"பாடலின் மேல் நிலைகுத்தியிருந்தது.

நன்றி ;அறுசுவை