Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: முதல் இந்திய பிரவுசர் - எபிக்.

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
  Join Date
  20 Feb 2008
  Posts
  448
  Post Thanks / Like
  iCash Credits
  29,758
  Downloads
  120
  Uploads
  0

  முதல் இந்திய பிரவுசர் - எபிக்.  முதல் இந்திய பிரவுசர் - எபிக்
  ----------------------------------


  இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம்.


  இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.


  பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது.

  இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

  இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது.

  இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது.

  நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம்.

  இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.


  இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது.

  வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது.

  மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.


  அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.

  இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது.

  இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.

  இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.

  இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

  நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.

  மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன.

  பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.

  பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது.

  அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

  இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.

  சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

  நன்றி.தினமலர்.

 2. #2
  Banned
  Join Date
  11 Dec 2009
  Posts
  2,348
  Post Thanks / Like
  iCash Credits
  7,600
  Downloads
  3
  Uploads
  0
  நன்றி! நூர் பயனுள்ள தகவல்!...பயன்படுத்தி பார்க்கலாம்....

 3. #3
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Jun 2010
  Location
  Muscat - Oman
  Posts
  747
  Post Thanks / Like
  iCash Credits
  8,572
  Downloads
  3
  Uploads
  0
  தகவலுக்கு நன்றி நூர்.....! பதிவிறக்கிக்கொண்டிருக்கிறேன். முதல் இந்திய ப்ரவுசரின் மூலம் இனி உலகை வலம் வரலாம்.

 4. #4
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  136,841
  Downloads
  161
  Uploads
  13
  தகவலுக்கு நன்றி நூர். ஆனா அதுல நிற்கும் பெண்ணை பார்த்தால் வெள்ளைக்கார பொண்ணு பொல இருக்கே... ஏமியோ???

  Quote Originally Posted by மச்சான் View Post
  தகவலுக்கு நன்றி நூர்.....! பதிவிறக்கிக்கொண்டிருக்கிறேன். முதல் இந்திய ப்ரவுசரின் மூலம் இனி உலகை வலம் வரலாம்.
  அப்போ இனி விசா தேவையில்லையா???
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  98,916
  Downloads
  97
  Uploads
  2
  தகவலுக்கு மிக்க நன்றி நூர், பயன்படுத்திப் பார்ப்போம்.

  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  தகவலுக்கு நன்றி நூர். ஆனா அதுல நிற்கும் பெண்ணை பார்த்தால் வெள்ளைக்கார பொண்ணு பொல இருக்கே... ஏமியோ???
  அவர் நடிக்கும் விளம்பரங்கள் இப்படியானவை கிடையாதுப்பா..!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  98,916
  Downloads
  97
  Uploads
  2
  இந்த பதிவினை எபிக் மூலமாகவே பதிவிடுகிறேன், பரவாயில்லையே நன்றாகத்தான் இருக்கிறது...

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  54,191
  Downloads
  114
  Uploads
  0
  லினக்சுக்கு பதிப்பு இல்லை போலருக்கே.... அதனால இந்தப் பழம் புளிக்கும்.

  வாழ்த்துக்கள் உருவாக்கியவர்களுக்கு...!
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 8. #8
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  136,841
  Downloads
  161
  Uploads
  13
  Quote Originally Posted by ஓவியன் View Post
  அவர் நடிக்கும் விளம்பரங்கள் இப்படியானவை கிடையாதுப்பா..!!
  அப்போ எப்படியானவை???
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  64
  Posts
  2,495
  Post Thanks / Like
  iCash Credits
  27,218
  Downloads
  92
  Uploads
  0
  சகோதரர் நூருக்கு
  நன்றிகள் பல,
  ஒரு நல்ல அருமையான தகவலை
  இங்கு எங்களுக்கு கொடுத்தமைக்கு.

  வாழ்த்துக்கள்
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 10. #10
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Jun 2010
  Location
  Muscat - Oman
  Posts
  747
  Post Thanks / Like
  iCash Credits
  8,572
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  அப்போ இனி விசா தேவையில்லையா???
  ஹி....ஹி.... விசா மட்டுமல்லாமல் டிக்கெட்டும் கூட தேவையில்லையாம்...!!!

 11. #11
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,969
  Downloads
  78
  Uploads
  2
  நல்லா தான் இருக்கு.. நன்றி நூர்

 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
  Join Date
  09 Jan 2009
  Posts
  1,560
  Post Thanks / Like
  iCash Credits
  15,805
  Downloads
  33
  Uploads
  0
  நான் தரவிறக்கிவிட்டேன்... கலர்புல்லா இருக்கு....
  முயற்சி என்பது மூச்சானால்
  வெற்றி என்பது பேச்சாகும்....

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •