Results 1 to 4 of 4

Thread: இணையதளத்தில் புதிய இலவச தமிழ் அகராதி: அண்ணா பல்கலைக. ஆசிரியர்களின் உருவாக்கம்...

                  
   
   
  1. #1
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    7,600
    Downloads
    3
    Uploads
    0

    இணையதளத்தில் புதிய இலவச தமிழ் அகராதி: அண்ணா பல்கலைக. ஆசிரியர்களின் உருவாக்கம்...



    சென்னை: தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

    அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி, ஆசிரியர்கள் கீதா, ஷோபா, ரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளனர். இதன் முகவரி www.agaraadhi.com

    ஏற்கனவே, இணையதளத்தில் பல தமிழ் அகராதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அளித்திடாத 20 சேவைகளை இந்த புதிய அகராதி அளிக்கிறது. தமிழ்ச் சொல் உருவாக்கம், பிழைத்திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்கள் பயன்பாடு, திருக்குறள் பயன்பாடு, பாரதியார் மற்றும் ஔவையார் பாடல்களில் உள்ள சொற்களின் பயன்பாடு உள்ளிட்ட பல பயன்பாடுகள் இதில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வரிகளையும் இதனுடன் இணைத்துள்ளது வித்தியாசமாக உள்ளது.

    ....தட்ஸ் தமிழ் 18.07.2010

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    360,734
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல முயற்சி!

    அனைவரும் பயனுறட்டும்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    64
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    27,218
    Downloads
    92
    Uploads
    0
    நல்ல பயனுள்ள தகவல், ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க மென்பொருள் ஏதும் உள்ளதா,
    கூகல் திரான்ஸ்லேட்டரில் உள்ளது போல
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  4. #4
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    7,600
    Downloads
    3
    Uploads
    0
    இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன்....நானும் தேடிப்பார்த்துவிட்டேன்...கூகுள் டிரான்சிலேசன் தமிழுக்கு கொண்டு வரவில்லை...தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் வருவதால், ஆங்கில சொல்லுக்கு எந்தந்த சொல் பொருந்தி வரும் என்று பிரித்து உள்ளிடுவதில் பிரச்சன உள்ளதாக நினைக்கிறேன். அதை உருவாக்க பலரும், தமிழக அரசு உட்பட முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்பதாக தகவல்.

    கூகுள் பயனர்களிடமே அதற்கான சொற்கள் உருவாக்கும் பொறுப்பை கூகுள் நிறுவனம் கொடுத்துள்ளனர்....அது ஒரளவுக்கு முடிந்தாலும் வந்து விடும்....இணையத்தில் அறிந்த தகவல்...

    இந்த செம்மொழி மாநாட்டில் இது பற்றி அலசப்பட்டது. விரைவில் வரும் என்று எதிர் பார்க்கலாம். அப்படி ஒரு வேளை உருவாக்கி இருக்குமானால்.....நானும் அதை எதிர் நோக்கி....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •