Results 1 to 3 of 3

Thread: இந்திய இணையத்தள சேவை வரலாற்றில் முதல்முறையாக

                  
   
   
 1. #1
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  15 Jun 2008
  Posts
  92
  Post Thanks / Like
  iCash Credits
  8,019
  Downloads
  35
  Uploads
  0

  இந்திய இணையத்தள சேவை வரலாற்றில் முதல்முறையாக

  வணக்கம் நண்பர்களே!
  தலைப்ப பார்த்தவுடனே சன்டிவி மாதிரியே விளம்பரம் பண்றேன்னு நினைச்சுக்காதி்ங்க. ஒரு வேளை அக்குழுமங்களில் பணியாற்றியதின் பாதிப்பாக கூட இருக்கலாம்

  அது ஓண்ணுமில்லை
  இந்திய இணையத்தள சேவை வரலாற்றில் முதல் முறையாக மேகக் கணினி இணையத்தளச் சேவையை - Cloud Hosting சிபேனல் வசதியுடன் நாங்கள் தான் முதலில் வழங்க உள்ளோம் என்பதைத்தச்சொல்லத்தான் இந்த தலைப்பு.
  இச்சேவையை பற்றி பார்ப்பதற்கு முன்பு மேகக்கணினியாக்கம் என்றால் என்ன ன்னு பார்ப்போமா?

  வெப்சைட் சேவையை பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன என்றாலும் பல நிறுவனங்கள் பணத்தை குறி வைத்து இயங்குகின்றன அப்படிப்பட்ட நிறுவனத்தில் தான் அடியேனும் முதன் முதலில் 2004-ல் வாங்கி மாட்டிக்கொண்டேன். அது தனி அனுபவம். ஆனால் அந்த அனுபவம்தான் இன்று தனியாக இணையத்தள சேவையை குறிவைத்து இறங்க காரணமாக அமைந்தது.

  இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தளம் வைத்திருப்பவர்கள் மிக அதிகமான ப்ரச்னைகளை சந்தித்திருக்கிறார்கள்.

  * தாக்கர்களின் ப்ரச்னை
  * கஷ்டப்பட்டு உருவாக்கிய தளத்தினை சிலர் ஸ்பாம் தளங்களில் மாற்றிவிடுவார்கள்.
  * நாம் கேட்ட வசதி கிடைக்காது. அப்படியே கேட்டாலும் மிக அதிகமாக பணம் வாங்குவார்கள்.
  * அதிகப்படியான ட்ராபிக், அதிகப்படியான பைல்கள் ஹோஸ்டிங் செய்வது என்று பல ப்ரச்னைகள் இருக்கிறது.


  இப்படிப்பட்ட எந்த ப்ரச்னையும் இல்லாமல் ? வெப்சைட் நடத்த வேண்டுமென்றால் மேகக் கணினி சேவைக்கு மாறிவிடுங்கள்..

  * தாக்கர்கள் தளத்தினை தாக்கிவிட்டால் அதை தாக்கர்களின் தரவுத்தளத்தில் சேமித்துவிடுவார்கள். இப்படி சேமிக்கும்போது பல தாக்கர்கள் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அப்போது நம் வழங்கியின் ஐபி யை மாற்றவேண்டுமெனில் தனியாக பணம் கட்டவேண்டும்.
  * ஆனால் மேகக்கணினியில் நம் வழங்கியின் ஐபி முகவரியை உடனடியாக மாற்றிவிடலாம். இதனால் தாக்கர்களிடம் நம் தளம் பற்றிய விபரங்கள் இருந்தாலும் எடுபடாது.
  * குறிப்பு : ஐபி முகவரியை மாற்றவெண்டுமெனில் நாம் கணினியை ரீஸ்டார்ட் செய்யவேண்டும். ஆனால் இங்கே உடனடியாக மாற்றிவிடலாம்.
  * இரண்டாவது ; இதை நமது எல்லாவகையான மென்பொருட்களையும் நிறுவிக்கொள்ளலாம். இது ஒரு நேரடி வழங்கியாகவே பயன்படுத்திக்கொள்ளலாம்.
  * அதிகப்படியான ட்ராபிக் னாலும் ப்ரச்னையா? கவலையே வேண்டாம்.
  * இங்கே லோடு பேலன்ஸ் வழியாக அனைத்தையும் எளிதாக சமாளிக்கலாம்.
  * இதைவிட குறிப்பிட்டத்தக்க அளவு உடனடியாக ஹார்டுவேர்களை மேம்படுத்தவோ குறைக்கவோ செய்யலாம்! உடனடியாக.
  * உதாரணத்திற்கு ஒரு தளத்திற்கு ஒரு நாள் மட்டும் அதிகப்படியான ராம்(RAM) வேண்டுமோ, இடம் வேண்டுமோ, அல்லது ப்ராசசரின் வேகம் கூட்டவேண்டுமானால் கூடகூட்டவோ குறைக்கவோ செய்யலாம். சர்வரை ரீஸ்டார்ட் செய்யாமலே உடனுக்குடன்
  * மேலும் தகவல் பாதுகாப்பு என்பது இங்கே அதிகப்படியான வசதியுடன் இருக்கும். எனவே டேட்டா பேக் அப் அதிகப்படியான வசதியும் உண்டு.
  * எல்லாவற்றையும் விட 100% அப்டைம் உறுதி. மெயின்டனஸ் நேரத்தில் மட்டுமே ஆப் செய்யப்படும்.

  இச்சேவையை நாங்கள் இந்தியாவில் முதல்முறையாக சிபேனல் வசதியுடன் வழங்குவதில் பெரு மகிழச்சி அடைகிறோம்.
  அடுத்த வருடங்களில் சொந்தமாகவே டேட்டாசென்டர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். அதுவும் அதிகப்பட்சம் ஒரு வருடத்தில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
  அதிகப்பட்ச நுட்ப வசதி / குறைந்த செலவில் வழங்கவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்

  இதுபோன்று நாங்கள் தொழில்நுட்ப அளவில் பல அரிய வசதிகளையும் அளிக்க இருக்கிறோம்.
  மொபைலில் இருந்து கணினிக்கு பேசுவது, மொபைலில் இருந்து கணினிக்கு கான்பரன்ஸ் வழியாக பேசுவது ,
  இணையத்தளத்தில் தாக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் மென்பொருட்களையும், இணையத்தளங்களுக்கு சோதித்துவருகிறேன். வெகு விரைவில் அவைகளும் வெளியிடப்படும்....
  அதிகப்பட்ச நுட்ப வசதி/ குறைந்த செலவில்
  மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் தயங்காமல் கேளுங்கள்
  நன்றி!
  என்றும் அன்புடன்
  செல்வ.முரளி

 2. #2
  புதியவர்
  Join Date
  13 Jul 2010
  Location
  சென்னை
  Posts
  47
  Post Thanks / Like
  iCash Credits
  8,671
  Downloads
  0
  Uploads
  0
  வணக்கம் முரளி
  உங்களின் பகிர்வு மிகவும் பயனுள்ளதாகும் என நம்புகிறேன்.
  வாழ்த்துக்களுடன்
  R.ராஜேஷ்

 3. #3
  இளையவர்
  Join Date
  30 Apr 2008
  Location
  மத்திய கிழக்கு
  Posts
  69
  Post Thanks / Like
  iCash Credits
  8,013
  Downloads
  7
  Uploads
  0
  இந்தியாவிலிருந்து இப்படியான ஒரு சேவையை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.
  வாழ்க்கை வாழ்வதற்கே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •