Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 65

Thread: அசைப்போம் இசைப்போம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    அசைப்போம் இசைப்போம்.

    வந்தனம் நண்பர்களே!

    எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. நானும் வெண்பா எழுத வேண்டும் என்று. அதனை ஒட்டிப் பிறந்தது இந்தப் பயிலரங்கம்.

    என்னாசை முதலடியாக அசை பிரிக்கக் கற்றுக்கொள்ளலாம் என்று களம் காண்கிறேன்.

    அதென்ன அசை. இதைப் பற்றி மன்றத்தில் பலரும் அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும் என் பங்குக்கு நானும் சொல்லிடுறேன்.

    அசை இரு வகைப்படும்.

    1) நேர் அசை
    2) நிரை அசை

    நேரசைகளாக அமைவன..

    க - குறில் எழுத்து தனித்து

    கல் - குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது.

    கா - நெடில் எழுத்துத் தனித்து தருவது

    கால் - நெடில் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்து வருவது.

    நிரையசைகளாக அமைவன..

    சுடு - குறிலும் குறிலும் இணைந்து வருவது
    சுடும் - குறிலும் குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது
    கடா - குறிலும் நெடிலும் இணைந்து வருவது
    கடாம் - குறிலும் நெடிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது

    இந்தளவுதாங்க இப்போதைக்கு நமக்குத் தேவை.

    இனி ஒவ்வொரு குறளா அசைச்சுப் பார்ப்போம். அதாங்க அசை பிரிச்சுப் பார்ப்போம்.
    Last edited by அமரன்; 10-07-2010 at 12:08 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதற்குறளை அசை பிரியுங்க பார்ப்போம்.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.


  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    முதற்குறளை அசை பிரியுங்க பார்ப்போம்.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    உதாரணத்துக்கு ஒன்றை நீங்களே பிரித்துக் காட்டிவிடுங்களேன், அமரன்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கற்க வந்’தவன் எப்’படிங்’க?

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    அக/ர
    முத/ல
    எழுத்/தெல்/லாம்
    ஆ/தி
    பக/வன்
    முதற்/றே
    உல/கு
    பிரித்திருக்கிறேன். சரியா?

  6. #6
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    அஞ்சாம் வகுப்பிலையோ, ஆறாம் வகுப்பிலையோ படிச்சது [நீ இப்ப வரைக்கும் அவ்வளவுதான்டா படிச்சிருக்க]

    விவரமானவங்க சொல்லித்தாங்க. தெரிஞ்சுகறோம்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தேவையானத் திரிதான் பாஸ்...

    தெரிஞ்சவங்க நல்லா சொல்லித்தாங்க....

    குணமதி...நீங்க பிரிச்சதுல எது நேர் அசை...எவை நிரை அசை என பட்டியல் போடமுடியுமா...இன்னும் விளக்கமாய் புரியும்.(எனக்குத்தான்)

  8. #8
    புதியவர்
    Join Date
    25 Jun 2010
    Location
    ஹைதராபாத்
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    9,358
    Downloads
    0
    Uploads
    0
    மன்றத்தினர் அனைவருக்கும் வணக்கம்.
    மன்றத்திற்கு நான் ஒரு புது உறுப்பினர்..

    "நேர் - நிரை" குறித்த இந்த விவாதத்தில் நானும் எனக்கு தெரிந்தவற்றை சொல்ல விரும்பி உங்களுக்காக இந்த சிறுவன் இதோ....

    திரு.அமரன் அவர்கள் மேற்கூறிய விரிவுரைகளை நன்கு படிக்கவும். இப்போது ஒரு சொல்லை எடுத்துக்காட்டாக பார்போம்.

    "வணக்கம்" - இந்த சொல்லை நாம் இப்போது பிரித்து பார்போம். இதில் கவனிக்க வேண்டியது, அமரனின் அசை குறித்த விளக்கங்கள். நாம் பிறக்கப்போகும் சொல் அந்த இலக்கண விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

    வணக்கம் - வணக் + கம்

    வணக் - நிரை அசை, ஏன் என்றால்
    "குறிலும் குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது" என்ற விதிக்கு உட்பட்டது .
    கம் - நேர் அசை, ஏன் என்றால்
    "குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது" என்ற விதிக்கு உட்பட்டது.

    அனால் இப்போது உங்கள் மனதுக்கு ஒரு கேள்வி எழும். வணக்கம் என்ற இந்த சொல்லை "வ + ணக் + கம் என்றும் கூட பிரித்து சொல்லலாமே? "

    அனால் இங்கு கவனிக்க வேண்டியவை
    ஒரு குறில் எழுத்தை மட்டும் வைத்து நாம் "நேர் அசை " என்று முடிவுக்கு வரக்கூடாது. "வ" என்ற குறில் எழுத்தை தொடர்ந்து "ண" என்னும் குறில் எழுத்தோடு 'ம்' என்ற மெய் எழுத்தையும் பார்த்து தான் அது எந்த அசையில் வரும் என்பதை நாம் பிரித்து சொல்ல வேண்டும்.

    இப்போது நான் குணமதி அவர்கள் பிரித்த குறளை
    விவரிக்கிறேன்.

    அக - நிரை /ர - நேர்
    முத - நிரை /ல - நேர்
    எழுத் - நிரை /தெல் - நேர் /லாம் - நேர்
    ஆ - நேர் /தி - நேர்
    பக - நிரை /வன்- நேர்
    முதற் - நிரை /றே - நேர்
    உல - நிரை /கு - நேர்

    வெண்பாவின் அசை விதிக்கு மேற் கூறிய இந்த எடுத்துக்காட்டு சரியானது தான் என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் சந்தேகங்கள் இருந்தால் தயவு கூர்ந்து கேளுங்கள்.. காத்திருகிறேன்.. தமிழ் சுவையை உங்களுக்கு தெரிய வைக்க.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இந்த முறை எப்படியாவது நானும் வெண்பா எழுதப் பழகி விடுவேன் என்ற நம்பிக்கையை உறுதியாக்குகிறீர்கள்.

    நன்றி நண்பர்களே.

    குணமதி அசை பிரித்த போது எனக்குள் எழுந்த சந்தேகம் வணக்கத்தை வைத்து ஜெய்சந்தோஷ் விளக்கிய போது காணாமல் போச்சு.

    ஆனாலும் அது தொடர்பால சில தேடல்களை மேற்கொண்டேன். அப்போது சிக்கியவை..



    வணக்கம் என்ற பழகிய சொல்லையே எடுத்தோமானால்,
    குறில்-குறில்-மெய்-குறில்-மெய் என்றவாறு எழுத்துகள் இணைந்துள்ளன.

    நமது அசைகள் பற்றிய அறிவின்படி
    குறில்-குறில்-மெய் நிரை அசையாக வருகிறது. எனவே வணக் எனப் பிரிக்கிறோம்.
    (இங்கே
    குறில் -
    குறில்+மெய் -ணக்
    என இரு அசையாகப் பிரித்தல் ஒழுங்கில்லை)

    அடுத்து குறில்-மெய் மிச்சமாகிறது.
    நமது அசை அறிவின்படி இது நேர் அசையாக வருகிறது.

    இந்த ஒழுங்கு சரிதானா நண்பர்களே.



    இன்னொரு சந்தேகம் எழுகிறதே..

    பகவன் என்ற சொல்லை ஏன் ப-கவன் என்று அசை பிரிக்கக் கூடாது...?

    இங்கே முக்கியமான ஒரு ஒழுங்கு கவனத்துக்கு வருகிறது.

    அதாவது,

    அசை பிரிக்கும் போது சொல்லின் முன்னிருந்து பார்க்க வேண்டும்.

    அதாவது பகவன் என்ற சொல்லின் முதல் மூன்று எழுத்துகள் பகவ.

    அதாவது குறில்---->குறில்----->குறில்.

    மூன்று குறில் சேர்ந்து வரும் அசை நாம் கற்கவில்லை. எனவே மூன்றாவது எழுத்தை (வ) விடுவோம்.

    மிஞ்சுவது பக (குறில்--->குறில்). இது நிரையசை.

    பகவன் என்பதில் பக போனால் மீதி வன். குறிலும் மெய்யும். இது நேரசை.

    எனவே பகவன் என்பதை அசை பிரித்தால்,

    பக-வன்
    நிரை-நேர்

    இதிலிருந்து நான் கற்றது என்ன என்றால்,
    மூன்று குறில் எழுத்துகள் வரும்போது 2+1 என்றவாறு அசை பிரித்தல் ஒழுங்கு. (குறுக்கு வழி)

    சரிதானா நண்பர்களே.
    Last edited by அமரன்; 10-07-2010 at 12:18 AM.

  10. #10
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    நல்லது! அசை பற்றித் தொடருங்கள்! இசைவுடன் தொடர்கிறோம்!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    என்பதை அசை பிரிக்கிறேன். சரிதானா என்று சொல்லுங்கள்.

    1. அகர---->
      • மூன்று குறில். எனவே அக (நிரை) ,
      • ர (நேர்)
    2. முதல---->
      • மூன்று குறில். எனவே முத (நிரை)
      • ல (நேர்)
    3. எழுத்தெல்லாம்--->
      • முதல் மூன்றும் (எழுத்) குறில்+குறில்+மெய் (நிரை என்று கற்றேன் முன்பு).. எழுத் (நிரை)
      • அடுத்து (தெல்) குறில்+மெய் (நேர் என்று கற்றேன் முன்பு).. தெல் (நேர்)
      • அடுத்து (லாம்) நெடில்+மெய் (நேர் என்று கற்றேன் முன்பு) லாம் (நேர்)
    4. ஆதி--->
      • ஆ-நெடில் (நேர் எனக் கற்றேன் முன்பு)
      • தி -குறில் (நேர் எனக் கற்றேன் முன்பு)
    5. பகவன் ---> முதல் மூன்றும் குறில். எனவே
      • பக---> குறில் + குறில் (நிரை எனக் கற்றேன் முன்பு) பக (நிரை)
      • வன் --> குறில் + மெய் (நேர் எனக் கற்றேன் முன்பு) வன் (நேர்)
    6. முதற்றே--->
      • முதல் மூன்றும் குறில்+குறில்+மெய் (நிரை எனக் கற்றேன் முன்பு). எனவே முதற் (நிரை)
      • அடுத்தது றே-நெடில் (நேர் எனக் கற்றேன் முன்பு) எனவே, றே (நேர்)
    7. உலகு---> குறில்+குறில்+குறில்... குறுக்கு வழியின்படி உல (நிரை)கு (நேர்)
    அக (நிரை) , ர (நேர்)
    முத (நிரை) ல (நேர்)
    எழுத் (நிரை) தெல் (நேர்) லாம் (நேர்)
    ஆ(நேர்) தி(நேர்)
    பக (நிரை) வன் (நேர்)
    முதற் (நிரை) றே (நேர்)
    உல (நிரை)கு (நேர்)
    Last edited by அமரன்; 10-07-2010 at 12:58 AM.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    உலகு---> குறில்+குறில்+குறில்... குறுக்கு வழியின்படி உல (நிரை)கு (நேர்)

    உல (நிரை)கு (நேர்)
    உலகு - இதை நிரைபு என்பார்கள். வெண்பாவின் இறுதியடியின் இறுதிச் சொல் அதாவது சீர்,

    நேர் (கல்)
    நிரை (உள)
    நேர்பு (நட்பு)
    நிரைபு (உலகு)

    போன்ற உறுப்புகள் கொண்டு முடியும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •