Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 45

Thread: நினைவுநீர் குட்டைகள்...!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    நினைவுநீர் குட்டைகள்...!!!

    அந்த இறுதி சந்திப்புக்குப் பிறகு
    உறுதி செய்துகொண்டேன்
    உன்னைப்பற்றிய நினைவுகளை
    என்னை மறந்தும் எண்ணிப்பார்ப்பதில்லையென...
    இருந்தும், பெருமழை விட்டப் பிறகான
    பராமரிப்பில்லா தெருவைப்போல
    நினைவுநீர் குட்டைகள்
    மனமெங்கும் தேங்கி நிற்கிறது...
    ஆனால் எதிலும் கால் பதிக்க துணிவில்லை
    ஏதோ ஒரு குட்டையின் ஆழம்
    என்னை உள்ளிழுத்துவிடுமோ என....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //பெருமழை விட்டப் பிறகான
    பராமரிப்பில்லா தெருவைப்போல
    நினைவுநீர் குட்டைகள்
    மனமெங்கும் தேங்கி நிற்கிறது...//

    காதல் கவிதைனாலே படிமங்கள் தானாக வரிசை கட்டி நிக்கும் போல..

    //ஆனால் எதிலும் கால் பதிக்க துணிவில்லை
    ஏதோ ஒரு குட்டையின் ஆழம்
    என்னை உள்ளிழுத்துவிடுமோ என....!!! //

    கால் பதிக்க துணியாமல் இருப்பதற்கு, குட்டையின் ஆழம் மட்டும் முகாந்திரமல்ல, கலங்கடிக்கப்படுகிற நீரின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருப்பவை விழித்து மேலெழுந்து வந்து மிதக்கும் சாத்தியங்களும் உண்டு, அப்போது குட்டை விழிகளுக்கு இடமாறி, உறக்கததை வெளி தள்ளி, இறக்கமில்லாமல் கொல்லும் நிம்மதியையும், உயிரையும்..

    யாரென அறியாதவர்களும் சில நேரங்களில் கல்லெறிந்துவிட்டுப் போகிறார்கள், அப்போது எழுகிற பேரலை மாற்றிவிடுகிறது குட்டையை ஒரு காடலாகவும், மனதை ஒரு கவிழும் கப்பலாகவும்....

    உங்களுக்கெல்லாம் எப்படித்தான் இந்த மாதிரி அழகான வார்த்தைகள் வந்து விழுதோ, எனக்கு இப்படி எதுவும் சிக்கவதில்லை..

    நவீனத்துவத்தின் சாயல் நிறைவே இந்த கவிதையில் இருக்கு, அதானல் இது நவீன கவிதை என்று சொல்லலாம்..


    பாராட்டுக்கள் சிவா அண்ணா...
    அன்புடன் ஆதி



  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    நாம் மறக்க நினைக்கும் நினைவுகள் தேங்கிய குட்டைகளாக மனமெங்கும் வியாப்பித்து நம்மை மூழ்கடிப்பது நல்ல பொருத்தமான உவமை. நல்லதொரு கருத்துள்ள கவிதை. பாராட்டுக்கள்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  4. #4
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    இதயத்தின் ஆழத்தில் இருந்து ஏளுதிருகீரிர்கள்

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதனைப்போல ஒரு கவி எழுத...இந்த ஜென்மத்தில் என்னால் முடியாது. அந்த ஆதனே..இதில் நவீனத்துவம் இருக்கிறதென்று பாராட்டினால்...அதுவும் அந்த ஆதனையேச் சேரும்.

    மன்றக்கவிகளின் நிழலில் வளரும் சின்ன புல் நான். பாராட்டெனும் நீர் ஊற்றி...வளரவைப்பதற்கு...மனமார்ந்த நன்றி ஆதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப ரொம்ப நன்றிங்க கலையரசி அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கப் பாராட்டுக்கு நன்றி முத்துவேல்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    பதினோராயிரம் தாண்டிய நீங்கள் புள் என்றால் நாங்கள் புதியவர்கள் என்னாவது... !!!!
    இந்த கவிதையும் வழக்கம் போலவே அருமை ...

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    பதினோராயிரம் தாண்டிய நீங்கள் புள் என்றால் நாங்கள் புதியவர்கள் என்னாவது... !!!!
    அண்ணேன் புள் தான் ராஜேஷ்..
    அன்புடன் ஆதி



  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி ராஜேஷ்.

    நான் ஒரு புள்தான்...ஹி...ஹி....பறந்துக்கிட்டேயிருக்கேன் இல்ல....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    நினைவுநீர் குட்டைகள் -
    நிரந்தர மகிழ் கடலாக மாறி .....
    காதலை நீடுழி வாழ வைக்கட்டும்....

    நவீன கவிக்கு நல் வாழ்த்துக்கள்.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி கோவிந்த்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •