Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: முகமூடிப் பட்டங்கள்...................

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    முகமூடிப் பட்டங்கள்...................

    முகமூடிப் பட்டங்கள்...............


    ஆடி, ஓடி விளையாடி
    விழுந்து, அடிபட்ட காயங்களில்
    வீட்டின் நினைவுகள்
    பச்சை குத்தபட்டிருக்கிறது.

    கூடி நின்று கும்மாளமிட்ட
    கூடத்தில்
    இன்று வியாபாரக் கூடத்தின்
    அலுவலகம்.

    வீடு, மனை விற்று
    விலைக்கு வாங்கிய கல்வியை
    விருப்பம் போல விற்றுப் பிழைக்க
    வழியில்லை.

    அலைந்து, திரிந்து, ஓய்ந்து
    படித்த பிள்ளை முகமூடியை
    அலமாரியினுள் மூடி வைத்துவிட்டு
    நானும் தொழிலில் இறங்கினேன்.

    வீடு, மனை விற்றுப் பிழைக்கும்
    இன்றைய தொழிலுக்கு
    கல்வி தேவையில்லை.

    பொய்கள் பலபேசி
    கூட்டிக் குறைத்து
    வியாபாரம் பேசி
    முடிக்கும் பொழுது
    ஒரு அப்பாவி தகப்பனிடம்
    சொல்லமுடிவதில்லை
    'வீடுமனை விற்று
    முகமூடி வாங்கி மாட்டாதே
    உன் மகனின் மூஞ்சியில்'.


    தரகுக் கூலியில்
    நூறுரூபாயை அதிகம் திணித்த
    அப்பாவி அப்பன் சொன்னான் -
    வச்சுக்க, படித்த பிள்ளை ஆயிற்றே!

    நான் விட்டாலும்
    முகமூடிகள் என்னை விடுவதில்லை....
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:28 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    நண்பர் நண்பன் ஒரு உண்மைக் கதை சொல்லி இருக்கிறீர்கள்.
    நாம் எல்லோரும் முகமூடி போட்டுக் கொண்டவர்களா? அப்பா
    வாங்கித் தந்த முகமூடியா? அருமைதான்.-அன்புடன் நண்பர்.
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:28 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  3. #3
    இளம் புயல்
    Join Date
    03 Apr 2003
    Posts
    348
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    எத்தனை உண்மையான ஒரு விஷயம். அருமையான தத்துவம்.
    நண்பனே உம்மை வணங்குகிறேன்.பாராட்டுக்கள்.
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:29 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  4. #4
    இளம் புயல்
    Join Date
    18 Jun 2003
    Location
    Manama, Bahrain
    Posts
    399
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நறுக்கென சொல்லி எம் உண்மைநிலை உணரவைத்தீர் நன்றி நண்பா !

    எனது காலில் நிற்கவேண்டும் என்பதற்காய் எத்தனை உள்ளங்களை நோகடித்திருப்போம்.
    சின்ன வயதில் பெற்றோர் வளரும் வயதில் ஆசியர் வளர்ந்து வந்தால் ஊரவர் உறவுகள்
    ஏன் இன்றும்கூட இன்னொருவனை நொந்துதானே நாம் வாழ்கின்றோம்.
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:29 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இக்பால், செழியன், கரவை பரணீ அவர்களுக்கு நன்றி. இது நிறைய வீடுகளில் நடக்கிறது தான். அன்று பக்கத்து நகரத்து கல்வி. இன்று கடல் கடந்த, மேலை நாட்டுக் கல்வி.

    சோகம் என்னெவென்றால், கற்ற கல்விக்குச் சம்பந்தமேயில்லாத தொழில் தான் முக்கால்வாசி பேருக்கு. சில சமயம், கலவி அறிவே தேவையில்லாத தொழிலில் முழங்கிக் கொண்டிருப்பார்கள். அந்த வருத்தம் தான் இந்தக் கவிதை.........
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:30 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    முகமூடிகள் எங்கும் மூகமுடிகள்
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
    என சொல்லிவிட்டதால் என்னவோ
    முகமூடிகள் இன்று அவசியமாகிவிட்டது....
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:30 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  7. #7
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை .. நன்றி நண்பன் அவர்களுக்கு ...

    வேலை செய்யும்துறை நாம் படித்த துறையாகத்தான் இருக்கவேண்டும் என்பது சரியா எனத் தெரியவில்லை ... கல்வி என்பது அறிவை வளர்க்க ... உலகைப் புரிந்துகொள்ள , மனிதர்களைப் புரிந்துகொள்ள என்பது பலரின் கருத்து ..

    இலக்கியம் படித்தவர்கள் அனைவரும் தொழில்முறையில் கவிஞர்களாகவோ அல்லது எழுத்தாளர்களாகவோ ஆகவேண்டும்... அதேபோல் பி.காம் படித்தவர்கள் அனைவரும் வணிகத்தைத் தொடங்க வேண்டும் ... வரலாறு படித்தவர்கள் ... , புவியியல் படித்தவர்கள் ............. இப்படியே நினைத்துப் பார்த்தால் தலைசுற்றுகிறது ...

    யார் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் .. ஆர்வம் இருந்தால் ..யார் வேண்டுமானாலும் கவிஞராகலாம் .. ஆர்வம் இருந்தால் ...ஆனாலும் ஆர்வம் மட்டும் இருந்து மருத்துவம் படிக்காமல் யாரும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது ......
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:31 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நண்பனின் மற்றுமொரு வீரியப்படைப்பு...
    நத்தை, நக்சலைட் போல கதையே கவிதையாய்..
    ராம்பால் ஒரு முறை சொன்னார்: கவிதைக்கு அடுத்த நிலை கதை என்று...
    எனக்கென்னவோ கவிதை படைப்பது கதை எழுதுவதை விட இன்னும் உயர்வான படைப்பு நிலை என்றே படுகிறது.லாவண்யா ஒரு முறை கேள்விப்பட்ட "கதையை"..... "எளிமையாக தர எண்ணி" கவிதையாய் தந்தது (கோஒபித்துக்கொள்ள மாட்டாள்) நினைவுக்கு வருகிறது.
    சொற்சிக்கனம், அழகுடன், கூராக சரேலென அர்த்தமும் அடிவயிற்றில் பாய்ச்சும் பண்பு கவிதைக்கே உரியது.
    இப்பண்புகள் நண்பனின் கவிதைகளில் அதிகம்.
    பாராட்டுகள்.

    கவிதையின் கரு பற்றி நண்பனின் விளக்கமும், முத்துவின் அலசலும்..
    இரண்டும் சரியே..உண்மை நடுவில் உறங்கிக்கொண்டிருக்கிறது.
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:31 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    மருத்துவம் மட்டும் இல்லை...எந்த வேலைக்கும் படிச்சா தான் முத்து......
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:32 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  10. #10
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    அருமை நண்பரே!


    கவிதைக்கு அடுத்த நிலை கவிதை
    இங்க இரண்டுமே கவிதையா இல்ல ஒன்னு கதையா?தலை விளக்கவும்!
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:32 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நேற்று கண்விழிச்சு, கண்டநேரத்தில் இன்னைக்கு தூங்கி,
    எழுந்தவுடன் பதித்து குழப்பிட்டேன் போல..
    திருத்தியாச்சு நிலா..
    விளக்கெண்ணெய் உங்கள் கண்ணிலா?
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:33 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    விளக்கெண்ணெய் உங்கள் கண்ணிலா?

    நீங்க செய்யிறதப்பார்த்துதான் தல இப்படி!
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:33 PM. Reason: யுனிக்கோடாக்கல்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •