Results 1 to 7 of 7

Thread: மனிதனின் மூதாதையர் ஒரு லெமூர்....!

                  
   
   
 1. #1
  Banned
  Join Date
  11 Dec 2009
  Posts
  2,348
  Post Thanks / Like
  iCash Credits
  7,690
  Downloads
  3
  Uploads
  0

  மனிதனின் மூதாதையர் ஒரு லெமூர்....!
  உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தனித்தனியாக தோன்றியவைகள் அல்ல. அனைத்தும் ஒரு உயிரினத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியே என்று வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர், உயிர் பரிணாமத்தின் தந்தை (Father of evolution) எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின் என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் இதை அவர் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பொழுது அத்தனை எளிதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


  அன்றைய காலத்தில் மிகுந்த சர்ச்சைகளை எழுப்பியது. இது டார்வினுக்கு எதிராக விக்டோரியா மகாராணியார் ஆட்சிக் காலத்திலேயே விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் அதை நிருபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் கைவசம் அப்போது இல்லை. மனதனின் மூதாதையர் (Ancestor)ஒரு குரங்கு என்ற மிக சர்ச்சைக்குரிய விஷயத்தை நிருபிக்குமாறு அவரிடமே சண்டையிட்டனர்.


  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க 1974 ஆம் ஆண்டுதான் ஒரு கல் படிமம் (fossil slab) கிடைத்தது. அது லூசி என்ற பெண் மனித குரங்கின் படிமம் தான் அது. அதை ஆராய்ந்தவர் டாக்டர் டொனால்டு ஜோகன்ஸ். அந்த மனித குரங்கு கல் (Primate) படிமத்தின் வயது 35 லட்சம் ஆண்டுகள். அந்த குரங்கு வாழந்த காலம் அத்தனை லட்ச காலத்திற்கு முந்தையது.


  அதன் பின் தற்பொழுது 2007 ஆம் ஆண்டு ஒரு கல் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. இது பாதிக்குரங்கு (Prosimian- before ape) எனப்படும் இனமாகும். இதை நிருபித்தவர் ஜோன் ஹோரம் (Joen Horum) என்னும் நார்வே புதை படிவ ஆராய்ச்சியாளர் (Palaeantologist). இது உண்மையில் 2007 இல் கண்டுபிடிக்கவில்லை. அதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை. அதாவது 1983 இல் ஜெர்மனியின் மெசல் பிட் என்னும் படிம புதை குழியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் வணிக நோக்கு இதிலும் இருந்ததால் இது கிடைக்க இவ்வளவு தாமதமாயிற்று. இது சற்று சுவராசியமானவை..........  இந்த மெசல் பிட்டில் பொழுதுபோக்கிற்காகவும், வணிகத்திற்காகவும் ஈடுபடும் வணிக அகழ்வு நிறுவனத்தினர் பலர் அகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இந்த படிமமும் கிடைத்தது. இது அந்த அகழ்வு வணிகர் விலை பேச ஆரம்பித்தார் பலரிடம். ஆனால் இதன் மதிப்பு கூடுவதைக்கண்டும், இதற்கு பலர் போட்டி போடுவதைக்கண்டும், இதற்கு மாற்றாக போலியாக பல படிமங்களை உருவாக்கி விற்று காசு பார்க்க ஆரம்பித்தனர்.


  இது மாதிரி போலியான படிமம் ஒன்று ஜெர்மன் மியூசியத்திற்கும் கிடைத்தது. அதை கொண்டு சென்று ஆராய்ந்த பொழுது இது போலியானது என்று அறிந்து இதன் அசலைத் தேடி அலைந்தனர். பலன் இல்லை. இதை பல நாட்கள் ஆரய்ந்து பின் எப்படியோ மோப்பம் பிடித்த ஜோன் அதன் அசல் இருக்கும் இடம் மற்றும் வைத்திருக்கும் நபரை கண்டு பேரம் பேசினார். கடைசியாக 10 லட்சம் டாலர் என்ற ஒப்பந்தம் இறுதியானது.


  இது சர்வதேச ஆய்வாளர்களின் ஒப்பந்தங்களுடன் கூடியது. இதன் மாதிரியை முதலில் ஆராய்ந்தனர். பிறகு அசல் எனப்படுவையும் எக்ஸ் ரே கதிர் மூலம் ஆரய்ந்தனர். ஆய்வில் இது உண்மையான படிமம் என்று உறுத்செய்யப்பட்டது. (போலியில் எலும்பு மஜ்ஜைகள் கதிரலை மூலம் தெரியாது) பின்பு அதை வாங்கி தன்னுடைய நார்வே மியூசியத்திற்கு கொண்டு சென்றார் ஜோன்.


  அதை அவரின் ஆய்வுக்குழுவனர் பலவகையில் ஆராய்ந்தனர். இந்த படிமத்தின் பெயர் எடா (Ida). இது டாக்டர் ஜோனின் 6 வயது மகளின் பெயர் தான். இவர் பெண்ணின் பெயரை ஒரு குரங்கிற்கு வைத்தார். மூதாதையருக்குத் தானே வைத்தார். இது ஒரு லெமூர் (Lemur) இனக் குரங்கு (தேவாங்கு போன்று இருக்ககூடிய குரங்கு வகை). இதன் வயது சுமார் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகள். இதன் வால் 24 செமீ நீளம் கொண்டது. (இதன் வால் மேலும் ஒன்னரை மீட்டர் நீளம் வளரக்கூடியது). கால்கள் கட்டை விரலுடன் மனிதனின் விரல்களைப் போன்று அமைந்துள்ளது. அதே போன்று நடக்கக்கூடியது ஆகும். அதாவது பாதிக்குரங்கு. இதை மேலும் முப்பரிமான சோதனைக்கு உட்படுத்த ஜெர்மனிக்கு எடுத்துச் சென்ற போது (அங்கு தான் இந்தளவுக்கு வசதிகள் உள்ளது) பல அரியத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. மனிதனை போன்ற பற்கள், தாடைகள் இவற்றிற்கும் ஒத்திருந்ததினை ஆய்வாளர்கள் கண்டனர்.


  இது ஒரு பெண் குரங்கு மேலும் இதன் வயது 8 மாதம், (மனிதனின் 6 வயதிற்கு சமம்). இது இறந்தது இரவு நேரத்தில். மெசல் பிட் ஏரியில் நீர் அருந்த செல்கையில் இது கரியமில (கார்பன் டை ஆக்சைடு) வாயு தாக்கி அதனால் மயக்கமுற்று, அந்த தண்ணீருக்கு அடியில் சென்று மாட்டிக்கொண்டு, மடிந்து, கல்படிமம் ஆனது. அந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்திருந்தினால் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. எரிமலை எனபது பூமியின் மையப்பகுதி நெருப்பு குழம்பு என்பது தெரியும் அது மேல் பகுதியில் உள்ள நீரை நெருப்பு அடைந்தவுடன் வினைபுரிந்து ஆவியாதல் நடைபெறுகிறது. அந்த ஆவி வெளியேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கையில், ஒருநாள் வெடிப்பது எரிமலை.


  அப்போது பூமியிலுள்ள நீரும் வெளிவரும். அப்படி வெளியேறிய நீர், நீர் நிலைகளாக எரிமலைகளின் பக்கத்தில் , பல வேதிபொருட்கள் கலந்த அமில ஏரியாக அமைந்திருப்பது வழக்கம். சமயத்தில் எரிமலை நெருப்பு குழம்பு பக்கத்தில் உள்ள நீர் நிலைகளை அடைந்தாலும் அந்த நீர் நிலை அமில ஏரியாக மாறும். இந்த நீர் நிலைகளை கந்தக ஏரி என்று கூட அழைப்பர். இப்போதும் அது போன்ற ஏரிகள், எரிமலைகள் உள்ள நாடுகளில் உள்ளன. இது தெரியாமல் எடா குரங்கு நீர் அருந்த வந்ததினால், வாயுத் தாக்கத்தால், மயக்கமடைந்த இந்த லெமூருக்கு இறப்பு நேர்ந்து அப்படியே கல்படிமமாகிவிட்டது, என்ற ஆய்வு முடிவை தெரிவித்துள்ளனர், இந்த ஆய்வாளர்கள்.


  எப்படியோ! சார்லஸ் டார்வின் மறைந்து பல ஆண்டுகள் ஆயினும் அவர் கூறியவைகளை நிருபிக்க இப்போது இந்த ஆதாரங்கள் உதவியது. இது போன்று பல படிமங்களை பல செல்வந்தர்கள் தங்கள் வீட்டு படுக்கையறையிலும், வரவேற்பறையிலும் அழகுக்காகவும், பெருமைக்காகவும் வாங்கி வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் இவ்வாய்வாளர்களுக்கு தந்தால் பல ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று டாக்டர் ஜோன் தெரிவிக்கின்றார்.


  காந்தியத்துக்கு சம்பந்தமில்லா விட்டாலும் காந்தியின் கைத்தடி, கண்ணாடி போன்றவைகளை அதிக ஏலத்தில் வாங்கி வீட்டிற்குள் பெருமைக்காக வைத்திருக்கும் செல்வந்தர்கள், இந்த கலபடிமங்களையும் வாங்கி வைத்திருப்பதனால் என்ன பயன்?. இம்மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துதவினால் மனித குலத்திற்கு வேண்டிய ஆய்வுகள், இந்த பூமியில் ஏற்பட்ட அதிசயங்களை ஆராய உதவும். உணர்வார்களா?


  ....நன்றி டிஸ்கவரி சேனல்.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,670
  Downloads
  62
  Uploads
  3
  காலப்பரிமாற்றத்தை கண் முன்னே கொண்டு வர முயற்சிக்கும் இது போன்ற தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  26 Oct 2007
  Location
  Chennai
  Posts
  469
  Post Thanks / Like
  iCash Credits
  12,397
  Downloads
  94
  Uploads
  13
  படிபத்தற்கு மிகவும் சுவையாக உள்ளது, மேலும் இதுபற்றிய தகவல்களை தந்தால் நன்றாக இருக்கும்..
  நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  176,366
  Downloads
  39
  Uploads
  0
  இப்படிக் கஷ்டப்பட்டு, விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தாலும்....இன்னும் பலர்...விலா எலும்பிலிருந்து படைத்தார், தொப்புளிலிருந்து பிறந்தார்....நெற்றியிலிருந்து உதித்தார்...என்று நம்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

  கடுமையான உழைப்பின் மூலம்...கண்டறியப்படும் உண்மைகள்...இந்த நம்பிக்கையாளர்களின் முன் செல்லாக்காசாகிவிடுவதைப் பார்க்கும்போது சகித்துக்கொள்ள முடிவதில்லை.

  உண்மை உரைக்கும் செய்திப்பகிர்வுக்கு நன்றி நம்பி.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  Banned
  Join Date
  11 Dec 2009
  Posts
  2,348
  Post Thanks / Like
  iCash Credits
  7,690
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by xavier_raja View Post
  படிபத்தற்கு மிகவும் சுவையாக உள்ளது, மேலும் இதுபற்றிய தகவல்களை தந்தால் நன்றாக இருக்கும்..
  தகவல் கிடைத்தவுடன் தருகின்றேன். தங்கள் பின்னூட்டத்திறகு நன்றி!

 6. #6
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  9,711
  Downloads
  12
  Uploads
  0
  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  விலா எலும்பிலிருந்து படைத்தார், தொப்புளிலிருந்து பிறந்தார்....நெற்றியிலிருந்து உதித்தார்...என்று நம்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
  அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு அண்ணா!! பலபேர் வந்துசெல்லும் மன்றத்தில் நம்பிக்கையாளர்களும் இருப்பார்களே... அவர்கள் மனம் புண்படவேன்டாமே அண்ணா! தவறாக எண்ணாதீர்கள்.

  Quote Originally Posted by nambi View Post
  தகவல் கிடைத்தவுடன் தருகின்றேன். தங்கள் பின்னூட்டத்திறகு நன்றி!
  நல்ல தகவலை தந்த நம்பிக்கு நன்றிகள்  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

 7. #7
  இளையவர்
  Join Date
  30 Apr 2008
  Location
  மத்திய கிழக்கு
  Posts
  69
  Post Thanks / Like
  iCash Credits
  7,683
  Downloads
  7
  Uploads
  0
  அறிவியல் ஆராய்ச்சி மனித குல நலனுக்கு பயன்படுவதாக இருந்தால் மிக நல்லது. அதனால் மத நம்பிக்கைகளையும், அறிவியலையும் போட்டு குழப்ப வேண்டாம். மேலும் விஞ்ஞானிகளில் அதிகமானவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
  வாழ்க்கை வாழ்வதற்கே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •