தேடினால் கிடைக்கும்

ஒரு மரங்கொத்திக் குருவி தன் கூரிய அலகால் டொக், டொக் என்று ஒரு மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித்தாவி ஏறியது.
அதைப் பார்த்த ஒரு மனிதன், “மூடக்குருவியே, எதற்காக மரம் முழுவதும் கொத்துகிறாய்? இது வீண் வேலை அல்லவா?” என்று கேட்டான்.
“மனிதனே நான் என் உணவை தேடுகிறேன். தேடினால் தான் எதுவும் கிடைக்கும்” என்றது மரங்கொத்தி.
“மரம் முழுவதும் கொத்துவது மடத்தனம்” என்றான் மனிதன்.
மரங்கொத்தி சிறிது நேரத்தில் மரத்திலுள்ள ஒரு போரையைக்கண்டு அந்த இடத்தினைத் தன் அலகால் குத்திப் பெயர்த்து போரைக்குள் குடியிருந்த புழுக்களைத் தின்றது.
அப்போது அது மனிதனைப் பார்த்துக் கூறியது, “மனிதனே நீயும் தேடு. மரத்திலும், மண்ணிலும், நீரிலும், ஏன் எல்லா இடத்திலும் உனக்கும் ஏதாவது கிடைக்கும்.