Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 43

Thread: மிருகத்தைப் போன்று......

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    மிருகத்தைப் போன்று......

    'ஏன் இப்படி மிருகத்தைப் போன்று
    கீழ்த்தரமாக நடந்துகொள்கிறாய்?' -கேட்கப்படுகிறது,
    பெண்களைக் கண்டதும்
    காமவயப்படும் ஆணை நோக்கி!

    கேட்கப்படுகிறது-
    இரக்கமின்றி பிறர்
    இரத்தத்தைக் குடிக்கும் பாவியை நோக்கி!

    கேட்கப்படுகிறது-
    சுய சிந்தனையோடு
    எதையும் அணுகாத
    அறிவிலியை நோக்கி!

    கேட்கப்படுகிறது-
    மெத்தப் படித்தும்
    நாகரிகமற்ற மேதாவியை நோக்கி!

    மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிடுவதை
    தயவுசெய்து நிறுத்துங்கள்!
    அவற்றின் அருங்குணங்கள் அறியாமல்
    அவற்றை அவமதிக்காதீர்கள்!

    மிருகங்கள் எவையும்
    நம்போல் நடந்து கொள்வதில்லை,
    உண்மைதான்!

    பாலியல் பலாத்காரங்கள்
    அவற்றின் உலகில் அரங்கேறுவதில்லை;
    பெட்டையின் ஒப்புதலின்றி,
    கிட்ட நெருங்குவதில்லை எந்த ஆணும்!

    அழகென்பது அவ்வுலகில்
    ஆண்களுக்கே சொந்தம்;
    ஆனபோதிலும் அங்கே உண்டு,
    அன்பு வாழ்க்கைக்கான உத்திரவாதம்!

    எனவே,
    காமுறும் ஆணை மிருகமென்று கூறி,
    காதற் பறவைகளையும், விலங்குகளையும்
    கேவலப்படுத்தாதீர்கள்!

    மிருகங்கள் முட்டி மோதும்
    காரணம் அறிவீரோ?
    தன் இனத்தை வழி நடத்த,
    தலைவனாகும் தகுதி தனக்கிருப்பதையுணர்த்த,
    சண்டையிட்டு வெல்லுதல் அவசியம்!

    அங்கே,
    தொண்டர்கள் எவரும் தீக்குளிப்பதில்லை;
    வெடிகுண்டு, வெட்டரிவாள்களின் புழக்கமில்லை;
    உட்கட்சிப் பூசல்களில்லை;
    ஒன்றுபட்டு அத்தனையும்
    உளமாற ஏற்கின்றன,
    வென்றவனையே தலைவனாக!

    எனவே,
    கொடுங் குணம் கொண்டவனையெல்லாம்
    மிருகமென்று கூறி,
    வரையறுக்கப்பட்ட வாழ்க்கை வாழும்
    விலங்குகளை இழிவுபடுத்தாதீர்கள்!

    உதவாக்கரைகள் என்று
    விலங்கினத்தில் எதுவுமில்லை;
    எல்லா மிருகங்களும் வாழத் தெரிந்தவையே,
    மனிதனைத் தவிர!

    அனாதை இல்லங்களோ,
    அபலைகள் மறுவாழ்வில்லங்களோ,
    முதியோர் இல்லங்களோ
    முற்றிலும் இல்லை மிருகங்களுக்கு!
    நீதி மன்றமோ, காவல் நிலையமோ
    நிச்சயமாய் இல்லை அவைகளுக்கு!

    நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
    நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

    தெருவோரம் சிறுநீர் கழிப்பதில் அல்லாது,
    நன்றியுணர்ச்சியில் நாயைப் பின்பற்றுங்கள்!
    ஏய்த்துப் பிழைப்பதில் அல்லாது,
    பகிர்ந்து உண்பதில் காக்கையைப் பின்பற்றுங்கள்!

    தனித்த வாழ்வோ, கூட்டு வாழ்க்கையோ
    தனக்கென்று, தன் இனத்திற்கென்று,
    வரையறைகளைக் கொண்டு,
    கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து,
    தத்தம் கடமையைச் செய்யும்
    மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு
    அவற்றின் தரத்தைக் குறைக்காதீர்கள்!

    யார் அறிவார்?
    ஒருவேளை,
    கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
    ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,
    'ஏன் இப்படி மனிதனைப் போன்று
    நடந்துகொள்கிறாய்?' என்று
    கேட்கக் கூடும் அங்கே!

    (நிலாச்சாரலில் வெளிவந்த என் கவிதை)

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான்....மிருகங்கள் நிச்ச்யமாய் மனிதனைவிடக் கேவலமானவையல்ல....

    "தங்கள் இனத்தை தாங்களே அழிக்காதவை"

    "பொறாமையும், பொச்செரிப்புமில்லாதவை"

    "கூட இருந்தே குழி பறிக்கும் குணமில்லாதவை"

    நாய், காக்கை இவற்றின் நற்குணமேற்காத....மனிதர்களை...மிருகத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறுதான்.

    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
    நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

    மனிதா.., மிருகத்தைப் பார்த்துப் படி...திருந்து..
    நல்ல போதனைப் புகட்டும் கவிதை...

    வாழ்த்துக்கள்...கீதம் அவர்களே...

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உண்மைதான்....மிருகங்கள் நிச்ச்யமாய் மனிதனைவிடக் கேவலமானவையல்ல....

    "தங்கள் இனத்தை தாங்களே அழிக்காதவை"

    "பொறாமையும், பொச்செரிப்புமில்லாதவை"

    "கூட இருந்தே குழி பறிக்கும் குணமில்லாதவை"

    நாய், காக்கை இவற்றின் நற்குணமேற்காத....மனிதர்களை...மிருகத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறுதான்.

    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.
    நன்றி சிவா.ஜி அவர்களே.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by govindh View Post
    நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
    நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

    மனிதா.., மிருகத்தைப் பார்த்துப் படி...திருந்து..
    நல்ல போதனைப் புகட்டும் கவிதை...

    வாழ்த்துக்கள்...கீதம் அவர்களே...
    நன்றி கோவிந்த் அவர்களே.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் பா.சங்கீதா's Avatar
    Join Date
    23 Mar 2010
    Posts
    322
    Post Thanks / Like
    iCash Credits
    14,305
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post

    யார் அறிவார்?
    ஒருவேளை,
    கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
    ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,
    'ஏன் இப்படி மனிதனைப் போன்று
    நடந்துகொள்கிறாய்?' என்று
    கேட்கக் கூடும் அங்கே!
    மிகவும் நன்றாக உள்ளது
    யாருக்கு தெரியும் ஒரு வேலை மிருகங்கள்
    அவ்வாறு கேட்டாலும் மனிதர்கள் திருந்த போவதில்லை என்பது மட்டும் உறுதி
    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
    வாழ்க தமிழ்!

    அன்புடன்
    பா.சங்கீதா

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    உண்மைதான் கீதம். நல்லதோர் கவிதைக்கு உளமார்ந்த பாராட்டு

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அதிகமான பற்றே தீவிரத்தை நம்மில் பற்ற வைக்குது.

    அன்பு வெளிப்படுத்துகையில் வன்முறை தென்பட்டால் அதை மிருகத்தனம் என்கிறோம்.

    மனிதர்கள் தமக்குள் அடித்துக் கொல்கிறார்கள்.

    ஆதியன் அவ்வாறு நடந்து கொண்டதாக இதுவரை நான் அறிந்ததில்லை.

    மிருகங்களுடன் அவன் வாழும் போது பிற இனத்தையே தாக்கினான்.

    மிருகங்களை விட்டு வாழத் துவங்கிய போது இனத்துக்குள் கொலை வெறியைக் கக்கினான்.

    காட்டுக்குள் போய் வேட்டையாடுவதால் மட்டும் பல விலங்கினங்கள் அருகிடவில்லை. அழிந்திடவில்லை.

    மிருகங்களுக்குள் இனச்சண்டை இருக்கு.

    சிங்கம் சிங்கத்தை கொல்வதில்லையே தவிர மானைக் கொல்வதில்லை என்றோ வேறு மிருக இனங்களைக் கொல்வதில்லை என்றோ எவராலும் சொல்லிட இயலுமா?

    இதே போலத்தான் நமக்குள்ளும்.. இனச்சண்டை.. நாட்டுச் சண்டை.. சாதிச்சண்டை.. ஊர்ச்சண்டை.. தெருச்சண்டை என்று பல் பரிணாமப்பட்டுள்ளோம்.

    இப்படியாக ஒவ்வொரு உயிரியிலும் உள்ள தீவிர உணர்வு வெளிப்பாட்டுக்கு எப்படி மிருகத்தனம் என்று பெயர்சூட்டலாம்? நியாயமாகத்தான் கேட்டிருக்கீங்க கீதம்.

    பாராட்டுகிறேன்.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by sangeethaa.rp View Post
    மிகவும் நன்றாக உள்ளது
    யாருக்கு தெரியும் ஒரு வேலை மிருகங்கள்
    அவ்வாறு கேட்டாலும் மனிதர்கள் திருந்த போவதில்லை என்பது மட்டும் உறுதி
    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
    பாராட்டுக்கு நன்றி சங்கீதா.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    உண்மைதான் கீதம். நல்லதோர் கவிதைக்கு உளமார்ந்த பாராட்டு
    மிக்க நன்றி பா.ராஜேஷ் அவர்களே.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எனக்குத் தோன்றியதை எழுதினேன். உங்கள் பின்னூட்டம் பார்த்தபிறகு சற்று குழப்பமும், வருத்தமும்.
    எனினும் பாராட்டுக்கு நன்றி அமரன் அவர்களே.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Akila.R.D's Avatar
    Join Date
    20 Jan 2010
    Location
    Bangalore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    16,226
    Downloads
    67
    Uploads
    1
    கவிதை நன்றாக உள்ளது கீதம் அவர்களே...

    பாராட்டுக்கள்...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •