Results 1 to 11 of 11

Thread: தவறாகப்புரிந்துகொள்ளுதல் - ஒரு விளக்கம்

                  
   
   
  1. #1
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0

    தவறாகப்புரிந்துகொள்ளுதல் - ஒரு விளக்கம்

    தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……
    உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

    ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

    ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

    வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

    கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

    அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

    வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

    "தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

    வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

    மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

    மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

    திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

    வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

    இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

    எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

    புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

    தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

    எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

    அனுதின*மும் ஆனந்தமாய் வாழ்ந்திட* வாழ்த்துக்க*ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    முத்துவேல் இது ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும். மன்றத்தில் எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    இப்பொழுது தான் இந்த கதை படிக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    நடைமுறையில் பெரும்பாலோனோர் செய்யும் தவறை இந்த கதை மூலமாக திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறார் முத்துவேல் அவர்கள்.

    பாராட்டுக்கள்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    உண்மை தான். எந்தப் பிரச்சினையாயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசினால் பிரச்சினையைத் தீர்க்க இயலும். வேறுபாடுகளைக் களைய முடியும்.
    இப்போது தான் இந்தக் கதையை முதல் முறையாகப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி முத்துவேல்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகப்பெரிய பிரச்சனைகளே மனம்விட்டுப் பேசிப் பகிர்ந்துகொள்வதால் தீர்ந்துபோய்விடுகிறது. இதில் யார் முதலில் பேசுவது என்ற எண்னத்தை விட்டுவிட்டு...யார் வேண்டுமானாலும் பேச்சை தொடங்கினால்....அது நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்.

    சிந்திக்க வைத்தக் கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி முத்துவேல்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மிகப்பெரிய பிரச்சனைகளே மனம்விட்டுப் பேசிப் பகிர்ந்துகொள்வதால் தீர்ந்துபோய்விடுகிறது. இதில் யார் முதலில் பேசுவது என்ற எண்னத்தை விட்டுவிட்டு...யார் வேண்டுமானாலும் பேச்சை தொடங்கினால்....அது நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்.

    சிந்திக்க வைத்தக் கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி முத்துவேல்.
    மின் அஞ்சல் மூலம் அனைவர்க்கும் அனுப்புங்கள் ,

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்வில் -சந்தேகம்...சந்தோஷத்தைக் கெடுக்கும்..

    நடைமுறையில்..
    சந்தேகம்...தீர்ந்தால்....
    சகலமும் விளங்கும்..

    பகிர்வுக்கு நன்றி..
    பாராட்டுக்கள்..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள்


    தீர விசாரிப்பதே மெய்!
    மெய்ப்பொருள் காண்பதறிவு!



    பழைய முரளி படங்களில் கடைசிவரை தெளிவாய்ச் சொல்லாமல் இழுக்கும்
    படங்களுடன் எனக்கு ஒவ்வாமை!


    பகிர்வுக்கு நன்றி முத்துவேல் அவர்களே..

    இராணுவ வீரனின் கதை - படிப்பினை!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    உலகில் அனைவர்க்கும் நாகில்தான் சனி உள்ளது , நாவை அடக்கினால் போதும் ..

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    Quote Originally Posted by muthuvel View Post
    எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

    புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

    தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

    எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

    அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
    உண்மைதான் நண்பரே. மிகவும் அவசியமான வரிகள். பகிர்வுக்கு நன்றி !

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •