Results 1 to 10 of 10

Thread: புகை பிடிப்பதால் 25 நன்மைகள் (மின்னஞ்சலில் வந்தது)

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    37
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    6,319
    Downloads
    148
    Uploads
    1

    Cool புகை பிடிப்பதால் 25 நன்மைகள் (மின்னஞ்சலில் வந்தது)

    புகை பிடிப்பதால் 25 நன்மைகள்

    புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

    1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

    2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

    3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.

    4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

    5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

    6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

    7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

    8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

    9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

    10. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.

    11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.

    12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

    13. இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.

    14. வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.

    15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.

    16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.

    17. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.

    18. மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.

    19. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

    20. வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

    21. சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.

    22. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.

    23. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.

    24. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.

    25. நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

    சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,835
    Downloads
    39
    Uploads
    0
    அழகா வாழைப்பழத்தில் ஊசியை செருகியிருக்கிறார் கட்டுரையாளர்.

    பகிர்வுக்கு நன்றி அகத்தியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    23,185
    Downloads
    8
    Uploads
    0
    நல்ல அறிவுரைகள்..
    பல ஆண்டுகளுக்கு முன்பு விடை கொடுத்த பழக்கத்துக்கு
    மீண்டும் வரத் தூண்டும் ஆலோசனைகள்!!
    பா.ரா.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    18,554
    Downloads
    0
    Uploads
    0
    அப்படிப் போடு!

    நல்ல மாற்றுச் சிந்தனை.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Akila.R.D's Avatar
    Join Date
    20 Jan 2010
    Location
    Bangalore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    11,636
    Downloads
    67
    Uploads
    1
    சபாஷ் அகத்தியன்...

    இதைப்படித்தவர்கள் ஒரு 2 மணி நேரம் புகை பிடிக்காமல் இருந்தால் கூட அது உங்களுக்கு கிடைத்த வெற்றிதான்..

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    9,277
    Downloads
    94
    Uploads
    13
    செருப்பால் அடிப்பது என்பது இதுதான். இதை படித்தாவுது நாலு பேர் திருந்தினால் உங்களுக்கு நிச்சியம் கோடி புண்ணியம்.
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,233
    Post Thanks / Like
    iCash Credits
    15,199
    Downloads
    2
    Uploads
    0
    இந்த பதிவை பார்த்தவுடன் புகைக்க ஆரம்பித்து விட்டேன்.
    இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது, ஏன் விடவேண்டும்.
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  8. #8
    இளையவர்
    Join Date
    30 Apr 2008
    Location
    மத்திய கிழக்கு
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    4,563
    Downloads
    7
    Uploads
    0
    யார் யாருக்கெல்லாமோ டாக்டர் பட்டம் வழங்குகிறார்கள் . இந்த கட்டுரை எழுதிய அகத்தியன் அவர்களுக்கு தமிழ் மன்றம் சார்பில் ஏன் டாக்டர் பட்டம் வழங்கக்கூடாது ?
    வாழ்க்கை வாழ்வதற்கே

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    49
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    6,679
    Downloads
    47
    Uploads
    0
    இது தான் மாத்தி யோசி போலும் நல்லது சொன்னாத்தான் யாரும் கேட்க மாட்டீர்களே. இதை படித்த ஒருவர் சிகரெட்டை ஒரு மணி நேரம் விட்டால் கூட நண்பருக்கு வெற்றி தான்.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    14,875
    Downloads
    138
    Uploads
    0
    நல்ல அறிவுரை வழங்கிய அகத்தியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •