Quote Originally Posted by இளசு View Post
என் எட்டாம் வகுப்பு ஆசிரியர் , '' பன்னாடை'' என சில சமயம் திட்டுவார்.

பன்னாடை : பனை ஆடை

கள், பதநீர் இறக்குவோரின் உச்சிமர சுதேசி ஃபில்டர் பனை மரத்தில் இருக்கும் வலை போன்ற பனை ஆடை.

அது சுவைநீரை விட்டுவிட்டு தேள், பூச்சிகளைத் தக்கவைக்கும் .

உங்கள் சல்லன்றுடை கண்டு பன்னாடை நினைவுகள்.

ன்னும் தீவட்டி, தேர்முட்டி என பல நல்ல வசவுகள் கேட்டதும் நினைவாடலில்..



நல்ல பகிர்வுக்கு நன்றி சொ.ஞா. அவர்களே!
நெய்யரி என்றால் நீங்கள் சொன்ன பன்னாடை என்பது பொருத்தமான பொருள். அது சிலர்க்குப் புரியாது என்பதால் சல்லடை என்று எழுதினேன், பன்னாடை பற்றி விளக்கிய உங்களுக்கு நன்றி இளசு அவர்களே.