அன்பில் ஆழ்கடலாய்
இரக்கத்தில் ஈசனாய்
உண்மையின் ஊற்றாய்
எண்மையில் ஏகாங்கியாய்
கருணையில் கசிந்துருகி
கடமையே கண்ணாக
சலிக்காத சாமரமாய்
தளர்வின்றி தடையின்றி
பகட்டின்றி பகையின்றி
மனம் நிறைந்து
பசியிலும் பணியாற்றிட
ஆசி தருக! இறைவா!!