Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: நாய்க்கடி-சிறுகதை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0

    நாய்க்கடி-சிறுகதை

    அன்று காலை நண்பனைப் பார்க்கச் சென்றவிடத்தில், நாயிடம் கடிபடுவோம் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை! அழைப்பு மணியை அழுத்தச் சென்ற இடத்திற்குக் கீழே நாய் படுத்திருந்ததை நான் கவனிக்கவில்லை. அழைப்பு மணி எங்கிருக்கிறது என்று மேலே தேடுவதிலேயே கவனமாயிருந்தவன், அதனை மிதித்து விட்டேன் போலும்!

    அடுத்த நிமிடம். ஆ! என்ற அலறலுடன் காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். கதவைத் திறந்து கொண்டு வந்த நண்பனும் பதறிப்போய் விட்டான். பின்னங்கால் சதையில் ஒரு கொத்து சதை நாயின் வாயில் இருந்தது!

    வலி தாங்க முடியவில்லை. இரத்தத்தைக் கட்டுப்படுத்த முதலுதவி செய்த நண்பன், தன் ஸ்கூட்டரில் என்னை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த மருத்துவமனைக்குப் பறந்தான்.

    டி.டி. ஊசி போட்ட டாக்டர், "கடிச்சது வீட்டு நாயா அல்லது தெரு நாயான்னு தெரியுமா?" என்று நண்பனிடம் விசாரித்தார்.

    "வீட்டு நாய்தான் டாக்டர். என் வீட்டுலேர்ந்து நாலைஞ்சு வீடு தள்ளியிருக்கிற ஒரு வீட்டுலதான் அதை வளர்க்கிறாங்க. ஒரே ஒரு நாள் மீந்திருந்த சாதத்தை அதுக்குப் போட்டது தப்பாப் போச்சு. அதிலேர்ந்து அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து படுத்துக்கும். துரத்தினாலும் போகாது. ஆனா இது வரைக்கும் யாரையும் கடிச்சதில்லே. இவன்தான் நாயைக் கவனிக்காம மிதிச்சுட்டான் போலேயிருக்கு!"

    "தெரு நாயாயிருந்திருந்தா தினமும் கவனிக்கிறது கஷ்டம். ஊசி போட்டே ஆகணும். வீட்டு நாயாயிருக்கிறதினாலே பத்து நாள் தினமும் கவனிங்க. சோறு நல்லாத் திங்குதா, தண்ணி குடிக்குதான்னு பாருங்க. பத்து நாளுக்குள்ள நாய்க்கு ஒன்னும் ஆகலேன்னா, ஊசி போட வேணாம். அப்படியில்லாம பத்து நாளுக்குள்ள நாய் செத்துப் போச்சுன்னா, கண்டிப்பா ஊசி போட்டே ஆகணும்!"

    தொப்புளைச் சுற்றிப் போடப்படும் ஊசி நினைவில் வந்து என்னைப் பயமுறுத்தியது. காலரா ஊசிக்கே பயந்து கொண்டு காத தூரம் ஓடுபவன் நான். நல்லவேளை! வீட்டு நாயாகப் போயிற்று. 'கடிபட்டாலும் வீட்டு நாயால் கடிபட வேண்டும்' என்ற பொன்மொழி என் மூளையில் அப்போது பளிச்சிட்டது.

    "என்னடா யோசனை? ஒன்னும் கவலைப்படாதே! அநேகமா ஊசி போட வேண்டிய தேவையிருக்காது. மச்சான் கல்யாணத்திற்கு நானும் மனைவியும் ஊருக்குப் போக வேண்டியிருக்கு. ஊர்ல இருந்தா நானே கவனிச்சுப்பேன். நான் வர்ற வரைக்கும் நீ தினமும் அந்த வீட்டுக்குப் போயி நாயைப் பாரு. ஏதாச்சும் அறிகுறி தெரிஞ்சா அலட்சியமாயிருக்காம, உடனே ஊசி போட்டுடு"

    வீட்டுக்கு வந்தவுடன் காலைப் பார்த்துப் பதறிப் போய் விட்டாள் மனைவி கவிதா.
    "யார் மூஞ்சில இன்னிக்கு முழிச்சீங்கன்னு தெரியலியே! காலங்கார்த்தால இப்படி நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வந்து நிக்கிறீங்களே!" என்று கவலைப்பட்டாள்.

    யோசித்துப் பார்த்தேன். "ம். நல்லா ஞாபகமிருக்குது, கவிதா. இன்னிக்கு காலைல ஒன் மூஞ்சிலதான் முழிச்சே........ன்" அவள் முறைப்பைப் பார்க்கப் பயந்து கடைசி வார்த்தையை மென்று விழுங்கினேன்.

    "தினமும் என் மூஞ்சிலதான் முழிக்கிறீங்க! இன்னிக்கு மட்டும் புதுசாவா முழிக்கிறீங்க? உங்களுக்குக் கீழப் பார்த்தே நடக்கத் தெரியாது. கண்ணைப் பிடறியில வச்சுக்கிட்டு நடந்தா, நாய் புடுங்காம என்ன செய்யும்?"

    'வள், வள்' ளென்று விழுந்து பிடுங்கினாள்!

    "உடனே ஊசி போட்டாகணுமே? டாக்டர்கிட்டப் போயிட்டு வந்தீங்களா இல்லியா?"

    "ம், டாக்டர் பத்து நாளைக்கு நாயைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறாரு. நாய்க்கு ஒன்னும் ஆகலேன்னா ஊசி வேணாமாம்"

    "நாளையிலேர்ந்து தூக்கத்தப் பார்க்காம, காலையிலே எழுந்திரிச்சி நாயைப் போயி பார்த்துட்டு வாங்க" உத்தரவு போட்டாள்.

    அடுத்த நாள் காலையில் அந்த வீட்டுக்குப் போன போது ஓர் அம்மாள் வாசலில் இருந்தார். "யாரு நீங்க? யாரைப் பார்க்கணும்?"

    "வந்து..வந்து.... உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே, அதப் பார்க்கணும்"

    "என்னது? நாயைப் பார்க்கணுமா? விநோதமாக என்னைப் பார்த்தார்.

    நாய்க்கடி பற்றியும், டாக்டர் சொன்னதையும் சொன்னேன்.

    "நாய் வெளியே போயிருக்குது. அப்படி ஒரு ஓரமா உட்காருங்க. அரை மணி நேரங் கழிச்சுதான் வரும். வந்ததும் பார்த்துட்டுப் போங்க"

    "நேத்து ராத்திரி நல்லாச் சோறு தின்னுச்சா? தண்ணி குடிச்சுதா?" அக்கறையுடன் விசாரித்தேன்.

    'ம்.ம். தின்னுச்சு, தின்னுச்சு' என்று கடுப்புடன் சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று மறைந்தார்.

    என் விதியை நொந்தபடி, நாயை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

    அந்தம்மா உள்ளே சென்று என்ன சொன்னாரோ தெரியவில்லை. உள்ளேயிருந்து ஒவ்வொருவராக வந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

    இந்தக் கொடுமைக்குப் பேசாமல் ஊசியே போட்டிருக்கலாம் என்று தோன்றியது.
    ஒரு வழியாக நாய் வந்தது. என்னைப் பார்த்ததும் குரைத்தது. நேற்று மிதித்தது ஞாபகம் வந்திருக்குமோ?

    'சரி, நாய் நல்லா சுறுசுறுப்பாத்தான் இருக்குது' என்பதை உறுதி செய்து கொண்டு வீடு திரும்பினேன்.

    முதல் நாள் அனுபவத்தை கவிதாவிடம் சொன்னேன். ”நடப்பது நடக்கட்டும், இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்” என்று அடம் பிடித்தேன்.

    "போய்த்தான் ஆகணும்" கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள் அவள்.

    வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வீட்டை நோக்கித் தினமும் படையெடுப்பது என் வேலையாகிவிட்டது.

    நான்கு நாட்களுக்குள் அந்த வீட்டுக்கு அக்கம்பக்கத்து சிறுவர், சிறுமியர்க்கு நான் நாயைத் தேடி வரும் செய்தி பரவிவிட்டது. "தோ வந்துட்டார்டா” என்று கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர். இன்னும் சில குழந்தைகளோ, 'நாயைத் தேடி வரும் மாமா' என்பதைச் சுருக்கி, 'நாய் மாமா' என விளித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது. ஏதோ ஒரு வைராக்கியத்தில் 'இனிமே இங்கு வரவே கூடாது' என்று முடிவு செய்தேன்.

    கவிதாவிடம் சொன்னபோது "அதெல்லாம் முடியாது. டாக்டர் சொன்னபடி செஞ்சுதான் ஆகணும், இல்லேன்னா தொப்புளைச் சுத்தி ஊசி போட்டுக்கங்க" என்று பயமுறுத்தினாள்.

    "இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஊசி போட்டாலும் போட்டுக்குவேனே ஒழிய, அந்தத் தெருப்பக்கம் இனிமே அடியெடுத்து வைக்க மாட்டேன்" என்றேன் தைரியமாக.

    என் தைரியத்தைப் பார்த்து அவளுக்குச் சந்தேகம். தண்ணீரை என் முகத்துக்கு நேரே கொண்டு வந்து மிரள்கிறேனா என்று சோதனை செய்தாள். என்ன சொல்லியும் கேட்காமல், என் கூட டாக்டர் வீட்டுக்கு வந்தாள்.

    "டாக்டர், அந்த நாய் எங்கோ ஓடிப் போயிடுச்சு. நான் தொப்புளைச் சுத்தி ஊசியே போட்டுக்கிறேன்" கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போதே என் தொப்புள் வலிப்பது போலத் தோன்றியது.

    அரசு ஆஸ்பத்திரிக்குப் போனீங்கன்னா, தொப்புளைச் சுத்திப் போடுவாங்க. அங்க இலவசமாகப் போட்டுக்கலாம். வெளியில வாங்கிப் போடறதாயிருந்தா, இப்பக் கையிலேயே போட்டுக்கிற ஊசியெல்லாம் வந்துடுச்சி. ஒரு ஊசியோட விலை இருநூத்தி ஐம்பது ரூபாயிலேர்ந்து முன்னூறுக்குள்ள இருக்கும். மொத்தம் அஞ்சு ஊசி போட வேண்டியிருக்கும்!"

    'ஆஸ்பத்திரியிலேயே போட்டுக்கிறோம்' என்று சொல்ல எத்தனித்த மனைவியை இடைமறித்து,
    "நீங்க எழுதிக் கொடுங்க டாக்டர். நான் வெளியிலேயே வாங்கிப் போட்டுக்கிறேன்" என்றேன் அவசர அவசரமாக.

    'மைசூர் சில்க் புடைவை கேட்டதுக்குப் பணமே இல்லைன்னு சத்தியம் செஞ்சுட்டு, இப்ப இவ்ளோ பணத்துக்கு நாய்க்கடி மருந்தா வாங்கறீங்க? இருங்க இருங்க, உங்களைப் பிறகு கவனிச்சுக்கிறேன்' என்ற மிரட்டல் அவள் முகத்தில் தெரிந்தது.

    மிரட்டலைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், அலட்சியமாக அவளைப் பார்த்து "வா, போகலாம்" என்றேன்.

    நாய்க்கடிக்குப் பிறகு, உண்மையிலேயே எனக்குத் தைரியம்தான் வந்துவிட்டது!

    (நிலாச்சாரலில் நான் எழுதிய கதை)
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    அந்தம்மா உள்ளே சென்று என்ன சொன்னாரோ தெரியவில்லை. உள்ளேயிருந்து ஒவ்வொருவராக வந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

    இந்தக் கொடுமைக்குப் பேசாமல் ஊசியே போட்டிருக்கலாம் என்று தோன்றியது.



    ஆஹா இந்த ஒரு வரிக்கு வாய்விட்டு சிரித்தேன் . உங்கள் கதையை படிக்கும் போது இதை படமா எடுத்த பாக்கியராஜை போட்டுத்தான் எடுக்கணும் .
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சூப்பரான கதை.....சரளமா...எழுதியிருக்கீங்க. அதுவும், நாயைப் பாக்க தினசரி படையெடுப்பை ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க.

    இயல்பான நகைச்சுவை. நிஜமாவே ரொம்ப ரொம்ப நல்லாருக்குங்க கலையரசி அவர்களே.

    மனமார்ந்த பாராட்டுக்கள்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்லதொரு நகைச்சுவைக் கதை. நாய்க்கடி பட்டவரின் பரிதாப நிலையை இப்படியும் சுவைபட எழுதமுடியுமா என்று வியக்கிறேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் கலையரசி அவர்களே.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    ரொம்ப நல்லா இயல்பாக எழுதி இருக்கீங்க. குதிரை கடி என்று ஒரு கதை படித்த ஞாபகம் வருகிறது (சுஜாதாவின் கதை என்று நினைக்கிறேன்.)

    பாராட்டுக்கள்

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நாய் நம்மைக் கடித்தால் அது பத்து நாளில் செத்துவிட்டால் நமக்கு ஆபத்தா, நல்லாவே நாயைத் தேடி சுத்தியிருக்கீங்க. இனிமே நாமளும் ஜாக்கிரதையாக தெருவில் நடக்கவேண்டும்.

    கதை நல்லா வந்திருக்கு. பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நாய்க்கடி பற்றிய கதை நல்லா வந்திருக்கு.. மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவை, வீட்டில் குத்திக்காட்டல்.. பின்னர் தைரியம் வருவது என அழகாக பின்னப்பட்டிருக்கிறது..

    நல்ல கதை வாழ்த்துகள்..!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by Ravee View Post
    அந்தம்மா உள்ளே சென்று என்ன சொன்னாரோ தெரியவில்லை. உள்ளேயிருந்து ஒவ்வொருவராக வந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

    இந்தக் கொடுமைக்குப் பேசாமல் ஊசியே போட்டிருக்கலாம் என்று தோன்றியது.



    ஆஹா இந்த ஒரு வரிக்கு வாய்விட்டு சிரித்தேன் . உங்கள் கதையை படிக்கும் போது இதை படமா எடுத்த பாக்கியராஜை போட்டுத்தான் எடுக்கணும் .
    நன்றி ரவி அவர்களே! ஆம் பாக்யராஜ் மிக மிகப் பொருத்தமாயிருப்பார்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சூப்பரான கதை.....சரளமா...எழுதியிருக்கீங்க. அதுவும், நாயைப் பாக்க தினசரி படையெடுப்பை ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க.

    இயல்பான நகைச்சுவை. நிஜமாவே ரொம்ப ரொம்ப நல்லாருக்குங்க கலையரசி அவர்களே.

    மனமார்ந்த பாராட்டுக்கள்
    பாராட்டுக்கு நன்றி சிவா.ஜி அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    நல்லதொரு நகைச்சுவைக் கதை. நாய்க்கடி பட்டவரின் பரிதாப நிலையை இப்படியும் சுவைபட எழுதமுடியுமா என்று வியக்கிறேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் கலையரசி அவர்களே.
    நன்றி கீதம்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    ரொம்ப நல்லா இயல்பாக எழுதி இருக்கீங்க. குதிரை கடி என்று ஒரு கதை படித்த ஞாபகம் வருகிறது (சுஜாதாவின் கதை என்று நினைக்கிறேன்.)

    பாராட்டுக்கள்
    பாராட்டுக்கு நன்றி ராஜேஷ் அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நாய் நம்மைக் கடித்தால் அது பத்து நாளில் செத்துவிட்டால் நமக்கு ஆபத்தா, நல்லாவே நாயைத் தேடி சுத்தியிருக்கீங்க. இனிமே நாமளும் ஜாக்கிரதையாக தெருவில் நடக்கவேண்டும்.

    கதை நல்லா வந்திருக்கு. பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

    வெறி நாய் ஒருவரைக் கடித்ததிலிருந்து பத்து நாட்களுக்குள் இறந்து விடுமாம்.
    நம்மைக் கடித்த நாய் வெறி நாயா, சாதாரண நாயா என்பதைக் கவனிக்கத்
    தான் இந்த அலைச்சல். சாதாரண நாய் தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் ஊசி போட வேண்டிய அவசியமில்லை.

    பாராட்டுக்கு நன்றி ஆரென் அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •