Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 42

Thread: பூமிக்கடியில்...அறிவியல் தொடர்கதை (இறுதி பாகம்)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    பூமிக்கடியில்...அறிவியல் தொடர்கதை (இறுதி பாகம்)

    குரும்பூர் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள ஒரு குக்கிராமம். குரும்பூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் இந்த கதையை படிக்கும் வரை. கதையின் முடிவில் நீங்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறியப்போகிறது இந்த கிராமதைப்பற்றி.

    குரும்பூரை சேர்ந்த வேலன் என்ற ஆட்டிடையன் இந்த கதையை ஆரம்பித்து வைக்கிறான். பெரியகருப்பனின் ஆட்டு மந்தையிலிருந்து ஆடுகளை மேய்வதற்கு காலையில் கூட்டி சென்று மாலையில் வீடு திரும்புவான் வேலன். அலுமினிய தூக்குச் சட்டியில் அம்மா கொடுதப்பனுப்பும் தண்ணீர் விட்ட சோற்றை பச்சை மிளகாய் வெங்காயம் இவற்றுடன் சாப்பிட்டு விடுவான். ஆடுகளை மலையடிவாரத்தில் மேய விட்டு ஒரு மேடான மரத்தடியில் அமர்ந்து பக்கத்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை நோட்டம் விடுவான். ஆடுகளை ஓட்ட அவன் கையில் ஒரு சின்ன கம்பு வைதிதிருந்தான். வேல மரத்து கிளையை ஒடித்து அதிலிருந்த இலைகளை நீக்கிவிட்டு பெரிய கருப்பன் அவனிடம் கொடுத்திருந்தான் அந்த கம்பை. தோளில் சோத்து மூட்டையும் கையில் கம்பையும் வைத்து நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரைப்போல நிற்பான். கம்பை சுழற்றிக் கொண்டிருப்பது, மணலில் கம்பின் நுனியைக் கொண்டு சித்திரங்கள் வரைவது அவனது பொழுதுபோக்கு.

    மதிய நேரங்களில் அவனைப் போன்ற சில ஆட்டிடையர்கள் அங்கு வந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பேச்சு முழுவதும் பக்கத்து டூரிங் டாக்கீஸில் நடக்கும் சினிமா படத்தைப் பற்றித்தான் இருக்கும். அன்று அங்கு வந்திருந்த சிறுவர்களில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த முருகன் கையில் வழக்கமான கம்பு இல்லை. அவன் கையில் இருந்த கம்பு கருப்பாக நுனியில் பூண் வைத்திருந்தது. முருகன் அவனது பாட்டனார் இறந்து விட்டதாகவும் அவர் வைத்திருந்த இந்த கம்பை அவன் எடுத்துக் கொண்டதாகவும் சொன்னான். எல்லோரும் அந்த கம்பை வாங்கி ஆவலுடன் பார்த்தார்கள்.

    மாலை சாய மற்ற சிற்வர்கள் சென்றதும் தான் வேலனுக்கு பெரிய கருப்பன் ஆடுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பத்திக் கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக சொன்னது நினைவுக்கு வந்தது. ஆடுகளை ஒன்று திர*ட்டி எண்ணத் தொடங்கினான். எண்ணிக்கைகு தனது கை விரல்களோடு கால் விரல்களையும் சேர்த்துக் கொண்டான். திரும்ப திரும்ப எண்ணியதில் ஒரு ஆடு குறைவதைக் கண்டு பதறினான். செய்வதறியாமல் ஆடுகளை பெரிய கருப்பனின் பண்டில் சேர்த்தான். அவனது நல்ல வேளை பெரிய கருப்பன் அங்கு இல்லை. பன்டின் கதவை மூடி விட்டு ஓட்டமாக திரும்ப மலையடிவாரத்திற்கு வந்தான். அங்கிருந்த புதர்கள், பள்ளங்கள் இவற்றில் தேடினான். தேடிக்கொண்டே மலை மீது சிறிது ஏறத் தொடங்கினான். துவக்கத்தில் ஒரு குகை இருந்தது. கிராமத்தில் அந்த குகையில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவும் பகல் நேரத்தில் கூட அங்கிருந்து நெருப்பு தெரிகிறது என்றும் பேசிக்கொண்டது வேலனின் நினைவுக்கு வந்தது. பயந்து கொண்டெ குகையை நெருங்கினான். மே என்று ஆடுகளின் குரலைக் கொடுத்துப் பார்த்தான். குகையின் உள்ளே இருட்டாக* இருந்தது. கையிலிருந்த கம்பைக் கொண்டு துழாவினான். கம்பின் நுனி குகையின் சேற்றுப்பகுதியில் சிக்கிக் கொண்டது. தன் பலம் அனைத்தையும் திரட்டி இழுத்தான். வேகமாக விடுபட்டு கம்பு வெளி வர வேலன் கீழே விழுந்தான். தன்னை சமாளித்துக் கொண்டு மெதுவாக எழுந்த கம்பின் நுனியில் ஒரு குழம்பு போல ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதை கவனித்தான். இருள் வேகமாக பரவ வீட்டை நோக்கி நடந்தான் வேலன். கொஞ்ச தூரம் நடந்த பின் தன் பின்னால் யாரோ வருவதைபோல உணர்ந்து திரும்பி பார்த்தான். அவனுக்கு ஒரே வியப்பு. அவன் கண் முன்னால் கானாமல் போன ஆடு நின்று கொண்டிருந்தது. உற்சாகமாக ஆட்டைத் தூக்கி தோளில் சாய்த்து நடந்தான்.

    ஆட்டை பெரிய கருப்பனின் பண்டில் அடைத்து விட்டு வீடு திரும்பினவனுக்கு கம்பின் நினியில் ஒட்டிக் கொண்டிருந்த குழம்பு மற்ந்து விட்டது. மறு நாள் காலை ஆடுகளை மேய்க்க கிளம்பியவனுக்கு கம்பின் நுனியில் இறுகிப் போய் ஒரு பூண் மாதிரி இருந்த உலோகத்தைபார்த்து மகிழ்ச்சி பிடிபடவில்லை. ஏதோ அரசன் கையில் செங்கோலைப் பிடித்திருந்ததை மாதிரி கம்பை பிடித்துக் கொண்டு நடனமாடினான். வழககம் போல ஆடுகளை மேய விட்டு நெடுஞ்சாலையை பராக் பார்த்துக் கொண்டிருந்தவன், சாலையில் வேகமாக வந்த ஜீப் ஒன்று திடீரென்று நின்றதைப்பார்து மெல்ல அதன் அருகில் சென்றான். ஜீப்பில் அமர்ந்திருந்த இரண்டு கனவான்கள் ட்ரைவரிடம் " என்னய்யா என்னாச்சு" என்று வினவ ட்ரைவர் " எஞ்சின்ல கோளாறு சார்" என்று சொல்லிவிட்டு பானரைத் திறந்து உள்ளே நோட்டம் விடலானார்.

    தன்னிடமிருந்த பூண் வைத்த கம்பை அவர்களிடம் கொடுத்து காசு வாங்கலாம் என் நினைத்து வேலன் அவர்களை நெருங்கினான். " நல்ல கம்புய்யா அருமையான பூண் வைச்சது. வாங்கிகிரீங்களா" என்று கேட்டவாறு கம்பை உயர்த்தி வேலன் காட்ட ஜீப்பில் இருந்த ஒரு கருவியிலிருந்து அபாய ஒலி கேட்க துவங்கியது.


    தொடரும்...
    Last edited by மதுரை மைந்தன்; 16-05-2010 at 11:16 AM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஆகா...
    மீண்டும் ஒரு அறிவியற் கதையா...
    கற்கண்டு தின்னக் கசக்குமா...
    சிறப்பாகத் தொடர்ந்து முடித்திட என் வாழ்த்து...

    ஆக, அந்தக் குகையும், அந்த உலோகமும்,
    கதையிற் பிரதான பாத்திரங்களை வகிக்கப் போவதைக் கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்.

    சன் தலைப்புச் செய்திகளில்,
    குரும்பூரிற் பரபரப்பு... ஆட்டிடையன் வேலனால்...................................

    இடைவெளியிற் தொடரப்போவது என்ன..?

    ஆவலுடன் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கின்றேன்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல துவக்கம்!

    கதையின் முதல் பாகத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டதே!

    எழுதுங்க நண்பரே.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எரிமலையின் ஆரம்பமோ... தொடருங்கள். படிக்கும் ஆவல் மிகுகிறது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ம்....அடுத்த அறிவியல் அட்டகாசம் தொடங்கிவிட்டதா.....குகைக்குள் என்ன இருக்கிறது?....பூண் ஏன் சத்தம் போட்டது....தெரிந்துகொள்ள ஆவல் மிகுக்கிறது. தொடருங்கள் நண்பரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    ஆகா...
    மீண்டும் ஒரு அறிவியற் கதையா...
    கற்கண்டு தின்னக் கசக்குமா...
    சிறப்பாகத் தொடர்ந்து முடித்திட என் வாழ்த்து...

    ஆக, அந்தக் குகையும், அந்த உலோகமும்,
    கதையிற் பிரதான பாத்திரங்களை வகிக்கப் போவதைக் கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்.

    சன் தலைப்புச் செய்திகளில்,
    குரும்பூரிற் பரபரப்பு... ஆட்டிடையன் வேலனால்...................................

    இடைவெளியிற் தொடரப்போவது என்ன..?

    ஆவலுடன் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கின்றேன்.
    ஆகா அறிவியல் கதைக்கு இத்தனை வரவேற்பா. எனக்கு உற்சாகமாக இருக்கு. மிக்க நன்றி அக்னி அவர்களே

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    நல்ல துவக்கம்!

    கதையின் முதல் பாகத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டதே!

    எழுதுங்க நண்பரே.

    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர் பாரதி

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    எரிமலையின் ஆரம்பமோ... தொடருங்கள். படிக்கும் ஆவல் மிகுகிறது.

    உங்களது ஆவலுக்கு மிக்க நன்றி

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ம்....அடுத்த அறிவியல் அட்டகாசம் தொடங்கிவிட்டதா.....குகைக்குள் என்ன இருக்கிறது?....பூண் ஏன் சத்தம் போட்டது....தெரிந்துகொள்ள ஆவல் மிகுக்கிறது. தொடருங்கள் நண்பரே.
    அன்பான உங்களுடைய பின்னூட்டதிற்கு மிக்க நன்றி சிவாஜி அய்யா

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    பூமிக்கடியில்...அறிவியல் தொடர்கதை (பாகம் 2)

    பாகம் 2

    அணுசக்தி துறையின் யுரேனிய தாதுப் பொருளை கண்டறியும் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் ஜீப்பில் வந்த கனவான்கள். அவர்களில் கிருஷ்ணன் சற்றே வயதான அனுபவசாலி. அவரின் சீடன் நடராஜன் ஒரு இளைஞன். அவர்களின் தலைமை செயலகம் பெங்களூரில் இருந்தது. சில நாட்களுக்கு முன்பாக அவர்களின் பிரிவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்று யுரேனிய படிமங்களை கண்டறிய சென்ற்போது குரும்பூருக்கருகில் அவர்களுக்கு துப்பு கிடைத்ததால் அவர்கள் ஜீப்பில் அந்த வழியாக யுரேனிய தாதுப் பொருளைக் கண்டறியும் கருவியுடன் சர்வே நடத்தினர்.

    வேலனின் பூண் வைத்த கம்பு ஜீப்பின் அருகில் வந்ததும் அந்த கருவியிலிருந்து அபாய ஒலி ஆரம்ப்மாகியது. கருவியிலிருந்த ஸ்பீக்கரை நிறுத்தி விட்டு " இந்த பூண் எங்கு கிடைத்தது" என்று வேலனிடம் கேட்டார் கிருஷ்ணன். ஜீப்பிலிருந்த கருவியின் அபாய ஒலியைக் கேட்டு அரண்டு போயிருந்தான் வேலன். " எனக்கு தெரியாதுங்க" என்று பொய் சொன்னான். " பயப்படாம சொல்லு. நாங்க உன்னை ஒண்ணும் செய்ய மாட்டோம்" என்று சொல்லிவிட்டு வேலனின் கைகளில் ஒரு நூறு ரூபாய் தாளை தந்தார் கிருஷ்ணன். அவ்வளவு பெரிய தொகையை அது வரை பார்த்திராத வேலன் அதை நடுங்கும் கைகளால் வாங்கிக் கொண்டான். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் " வாஙக சார். எனக்கு இந்த பூண் ஒரு குகைல கிடைச்சது. அங்கே கூட்டி போறேன்" என்று தான் மேய்க்க விட்டுடுகொண்டு வந்த ஆடுகளை மறந்து கிளம்பினான்.

    " கொஞ்சம் இருப்பா. நாங்க அங்கே வறதுக்கு எங்களை தயார் பண்ணிக்கணும்" என்று சொல்லிவிட்டு கிருஷ்ணனும் நடராஜனும் தலையில் ஹெல்மெட், காலில் தடிமனான பூட்ஸ்கள், டார்ச் லைட் மற்றும் அணுக்கதிர் வீச்சை கண்டறிந்து அளவிடும் கருவி, போட்டோ காமிரா இஅவ்ற்றை எடுதுக் கொண்டு கிளம்பினர் தற்செயலாக அங்கு வந்த பெரிய கருப்பன் " ஏய் வேலா ஆடுகளையெல்லம் அம்போனு விட்டுடு நீ பாட்டுக்கு கிள்ம்பிட்ட" என்றவன் பின்னால் வந்த விஞ்ஞானிகளைக்கண்டதும் தோளில் போட்டுக்கொண்டிருந்த துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு " கும்பிடறேன் சாமி" என்றான்.

    " நாங்கள் வேலனுடன் இங்கு மலையடிவாரதிலுள்ள குகையைக் காணச் செல்கிறோம்' என்ரார் கிருஷ்ணன்.

    " அய்யய்யோ அந்த குகைப் பக்கம் போகாதீங்க. அங்கே கொள்ளிவாய் பிசாசு இருக்கு. இப்படித்தான் போன் மாசம் போலீஸ் காரங்ககிட்டே இருந்து தப்பிக்க ஒரு திருடன் அந்த குகைக்குள்ள புகுந்துட்டான். கொஞ்ச நாள் கழிச்சு போலீஸ் அவனைத் தேடிகிட்டு அந்த குகைகுள்ளார லைட் போட்டு பார்த்தாங்க. அங்கே அவனோட எலும்புக் கூடு தான் கிடந்துச்சு. இந்த பொடியன் உங்க கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பான். நீங்க திரும்பி போயிடுங்க சாமி. உங்களைப் பார்த்தா பிள்ளை குட்டி காரங்க மாதிரி தெரியுது" என்றான் பெரிய கருப்பன்.

    " கவலைப்படாதீங்க. எங்க கிட்ட தேவையான பாதுகாப்புகள் இருக்கின்றன" என்று கூறி விட்டு வேலனுடன் குகையை நோக்கி நடந்தார்கள் கிருஷ்ணனும் நடராஜனும். குகையை நெருங்க நெருங்க அவர்களது அணுக்கதிர் வீச்சு அளவு மானியில் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதைக் கண்ட கிருஷ்ணன் மற்றவர்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு குகையின் அருகில் இருந்த ஒரு பாறையின் பின்னால் சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட்டின் ஒளியை குகைக்குள் செலுத்தினார். பெரிய கருப்பன் கூறிய மாதிரி குகைக்குள் ஒரு எலும்புக்கூடு கிடந்தது. குகையின் மத்தியில் சேறாக இருந்தது. அதிலிருந்து நீர்த்துப் போன நெருப்பும் அதிலிருந்து வந்த புகையும் தெரிந்தன. சற்று யோசனைக்குப் பிறகு நடராஜனிடம் ஜீப்பிலிரும்து தாங்கள் கொண்டு வந்திருந்த நீள்மான இடுக்கியை கொண்டு வரச் சொன்னார். அது வந்ததும் அதை குகைகுள் செலுத்தி அங்கிருந்த காய்ந்த மண்ணை எடுத்து ஒரு பாலிதீன் பையில் இட்டு அதை அந்த இடுக்கியின் மூலமாகவே துக்கிக் கொண்டு ஜீப்பிற்கு சென்று அவர்களிடமிருந்த கதிர்வீச்சு பாதுகாப்பு பெட்டகத்தில் இட்டார்.

    ஜீப்பில் ஏறிச் செல்லும் முன் பெரிய கருப்பனிடம் " நாங்கள் அர்சாங்க அலுவலர்கள். இந்த குகையில் மிகுந்த ஆபத்தான பொருட்கள் இருக்கின்றன. நாங்கள் மீன்டும் வந்து இந்த குகையை ஆராயப் போகிறோம். அது வரை யாரும் குகையை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறி விடை பெற்று சென்றனர்.

    ஜீப்பில் நேரடியாக பெங்களூர் செல்ல கிருஷ்ணன் தீர்மானித்தார். நடராஜன் அவரிடம் " சார் அந்த குகைல யுரேனிய தாதுவின் கிடங்கு இருக்கும் என நினைக்கிறீர்களா" என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணன் " நாம் எடுத்துச் செல்லும் அந்த குகையின் மண்ணை ஆராய்ந்தால் தான் தெரியும்" என்றார். பெங்களூர் அடைந்து தனது பரிசோதனை சாலைக்கு சென்று அந்த மண்ணை ஆராயத் தொடங்கினார் கிருஷ்ண்ன். நடராஜனும் அவருக்கு உதவியாளராக இருந்தார். ஆராய்ச்சியின் முடிவில் கிருஷ்ணன் நடராஜனிடம் " என்னால் நம்பவே முடியவில்லை" என்ரார். 'என்ன ஆச்சு சார்" என்று ஆவலாய் கேட்ட நடரஜனிடம் " அந்த குகையில் இருப்பது ஒரு சக்தி வாய்ந்த இயற்கையான அணு உலை" என்றார் கிருஷ்ணன்.

    தொடரும்.....

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடேங்கப்பா....ஏதோ எரிமலைக் குழம்பு என சாதாரணமாக நினைக்க....ஒரு அணு உலையே அதனுள் இருப்பதாகச் சொல்லி ஆவலை மேலும் அதிகரிக்கிறீர்கள். அதுவும் இயற்கையாக உருவான அணு உலை என்பதால், அதனைப் பற்றி இன்னும் என்ன எழுதப்போகிறீர்கள் என ஆர்வமாக இருக்கிறேன்.

    தொடருங்கள் ஐயா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இந்த யுரேனிய இயற்கை அணு உலையினால்,
    ஏற்படப்போகின்ற சாதகபாதகங்களைப் பற்றி வரப்போகும் பாகங்களுக்காக,
    ஆவலுடன் நானும் காத்திருக்கின்றேன்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •