Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: நேர்மை.....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    நேர்மை.....!!!

    தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அட்டையை திரும்பப்பெறுவதற்காக நின்றபோது அருகிலிருந்த அந்த அனாதையான கைப்பேசியைப் பார்த்தார் செல்வராகவன்.

    பட்டென்று திரும்பி வாசலைப் பார்த்தார். யாராவது இருக்கிறார்களா....யாருமே இல்லை. விலையுயர்ந்த கைப்பேசி. அவரிடம் இதைவிட விலையுயர்ந்த கைப்பேசி இருந்தும், யாரோ தவறவிட்டுப்போன அந்தக் கைப்பேசியை எடுத்து உடனடியாக அதை அணைத்துவிட்டு பையில் போட்டுக்கொண்டு விருட்டென்று அங்கிருந்து கிளம்பினார்.

    ஒரு பதட்டத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கிளம்பினார். வீடு அருகில்தான். சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்ததும் முதல் வேலையாக அந்தக் கைப்பேசியை எடுத்து பத்திரமாக வைத்தார். இருக்கையில் அமர்ந்துகொண்டே மனைவி கேட்டிருந்த பணத்தைக் கொடுப்பதற்காக பர்ஸைத் திறந்தவருக்கு பகீரென்றது. ஏ.டி.எம் அட்டையைக் காணவில்லை.

    சட்டென்று நினைவுக்கு வந்தது. கைப்பேசியை எடுத்துக்கொண்டு வரும் அவசரத்தில் அட்டையை அந்த இயந்திரத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டார். கோட் நம்பர் மறந்துவிடாதிருக்க அட்டைக்குப் பின் பக்கமே ஒரு பேப்பரில் எழுதி ஒட்ட வைத்திருந்ததால்...பதட்டம் அதிகமாகிவிட்டது. இந்த அட்டை வழங்கும்போதே அதிலேயே அச்சிட்டிருந்தார்கள் கோட் நம்பரை அட்டையின் பின்னால் எழுதி வைக்காதீர்களென்று. அதை அலட்சியம் செய்தது தவறாகிவிட்டது. யார் கண்ணிலாவது பட்டிருந்தால்....40 ஆயிரம் நிச்சயம் எடுத்திருப்பார்கள்.

    பதறிக்கொண்டு மீண்டும் அந்த ஏ.டி.எம் அறைக்கு ஓடினார். வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாய் ஓடி வந்து இயந்திரத்தைப் பார்த்தார். அட்டை இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். இல்லை. அப்போது கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த இளைஞன்,

    "சார் என்ன தேடுறீங்க.."

    "என்னோட ஏ.டி.எம் கார்டுப்பா...இங்கேயே மறந்துட்டுப் போயிட்டேன்...இப்பதான் போனேன் அதுக்குள்ள எவனோ அடிச்சிட்டான்..."

    "இதானா பாருங்க சார்"

    இளைஞன் காட்டிய அட்டை அவருடையதுதான். சடாரென்று ஒரு பாரம் குறைந்ததைப் போல உணர்ந்தார். அதே சமயம் அவனிடமே எடுத்தவனைத் தவறாகப் பேசியதைக் குறித்து சங்கடத்தோடு,

    "இதேதாம்ப்பா. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சாரிப்பா...பதட்டத்துல தப்பா சொல்லிட்டேன்"

    "பரவால்ல சார்..இது சகஜம்தானே. இனிமே ஜாக்கிரதையா இருங்க சார். அதுவும் பின்னாலேயே கோட் நம்பரும் எழுதி வெச்சிருக்கீங்க...அதை எடுத்துடுங்க முதல்ல."

    "சரிப்பா. ரொம்ப தேங்க்ஸ்"

    "பரவாயில்ல சார். என் மொபைலக் காணோம். இங்க வந்துட்டுப் போனேன். ஒருவேளை இங்கேயே மறந்து வெச்சுட்டுப் போயிட்டனான்னு பாக்கலான்னு வந்தேன். அது இங்க இல்ல. வேற எங்கேயோ வெச்சுட்டேன் போலருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச மாடல்ன்னு கஷ்டப்பட்டு காசு சேத்தி வாங்குனது சார். என் வசதிக்கு இதை வாங்கினதே பெரிய விஷயம் சார். என்னோட அஜாக்கிரதையால தொலைச்சிட்டேன். சரி பரவாயில்ல...நீங்க இனிமே கவனமா இருங்க சார். நான் வேற எங்கேயாவது வெச்சிட்டனானு போய் பாக்கறேன்"

    அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லும், மண்டையில் விழும் சம்மட்டி அடியாய் உணர்ந்தார். இவனுடைய மொபைலையா நான் எடுத்துக் கொண்டு போனேன். கடவுளே....அந்த நிமிஷம் அவர் குப்பையைவிடக் கீழாய்த் தன்னை நினைத்தார். என் வயதில் பாதிதான் இருக்கும் எவ்வளவு நேர்மை...எவ்வளவு பக்குவம்....எனக்கு ஏன் அது இல்லாமல் போனது...என மனதுக்குள் நினைத்து மறுகினார்.

    சட்டென்று தன்னுடையக் கைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்டினார்.

    "சார்......."

    "இதை வெச்சுக்கப்பா...இந்த அட்டை வேற யாருக்காவது கிடைச்சிருந்தா இந்நேரம் பெரிய தொகையை எடுத்துட்டிருபாங்க. இதை உன்னோட நேர்மைக்கு என்னோட பரிசா வெச்சுக்க..ப்ளீஸ் வாங்கிக்கப்பா..."

    அவன் மிக மிக தயங்கினான்.

    "இதை வாங்கிக்கலன்னா என்னையே என்னால மன்னிக்க முடியாது தயவுசெஞ்சி வாங்கிக்கப்பா..."

    கிட்டத்தட்ட அழுதுவிடுவதைப்போல அவர் கெஞ்சியதைப் பார்த்து, எவ்வளவு நல்ல மனிதராக இருக்கிறார் என அவரைப் பெருமையாய்ப் பார்த்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டான். சிம் கார்ட்டை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு,

    "ரொம்ப நன்றிங்க சார். ஒரு நல்ல செயலுக்கு உடனடியா பலன் கிடைச்சதை நினைச்சு ஆச்சர்யமாவும், அதே சமயம் உங்களை மாதிரி நல்லவங்களும் இருக்காங்கங்கற பெருமையும் உண்டாகுது சார். நீங்க உண்மையிலேயே ரொம்ப பெரிய மனுஷன் சார்..."

    உள்ளுக்குள் உடைந்துபோன செல்வராகவன்....'நானா....' என நினைத்துக்கொண்டார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பொட்டில் அடிக்கும் கதை சிவாஜி.

    ஒரு சிறிய சபலம் அனைவருக்கும் இருக்கும் அதற்கு செல்வராகவனும் விதிவிலக்கல்ல என்று அருமையான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    இன்னும் எழுதுங்கள்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமாம் ஆரென். எத்தனைப் பெரிய மனிதர்களுக்கும் இதைப்போல சின்னச் சின்ன சபலம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தவறை உணர்ந்து கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பம் அமைந்தால்....உணர்ந்து கொண்டால் நல்லது.

    மிக்க நன்றி ஆரென்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    எத்தனை விடயங்களை ஒரு சிறுகதைக்குள் அடக்கிவிட்டீர்கள் சிவா.ஜி...
    • மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுதல்
    • அந்தப் பேராசையால் வரும் இழப்பு
    • இரகசியக்காப்பை பரகசியமாய் வைத்திருத்தல்
    • அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்
    • நேர்மை
    • அந்த நேர்மையாற் கிடைக்கும் நற்பயன்
    • தீர ஆராயாமல் சுமத்தப்படும் வீண்பழி
    • தன் கவனக்குறைவுக்கு மற்றவர்மேல் பழிபோடாமை
    • செய்த தவறுக்குப் பிரயாச்சித்தம்
    • செய்த தவறைச் சொல்லிட இடம் கொடாத சுயகௌரவம்
    • அதற்கும் மருகும் மனது
    அப்பப்பா...
    இந்தச் சிறுகதைக்குள் இத்தனை விடயங்களையும்,
    சர்வசாதாரணமாகத் பதித்துவிட்டீர்களே...

    பாராட்டுக்கள் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....மெய்சிலிர்க்கிறது அக்னி. உண்மையிலேயே மிக மிகப் பொருத்தமாகத்தான் உங்களுக்கு இளசு, திறனாய்வுப்புலி என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.

    எவ்வளவு தீர்க்கமாக கதைகளைக் கவனிக்கிறீர்கள். எல்லா எழுத்துக்கும் நீங்கள் கொடுக்கும் இந்த முக்கியத்துவம், அந்த எழுத்துக்கான மரியாதை.

    மனமார்ந்த நன்றி அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    சூப்பர் கதை...
    சுருக்கமா தெளிவா அழகா சொல்லி இருகின்றீர்கள்...
    நல்லா இருக்கு..

    "திறனாய்வுப்புலி" சரியான பட்டம் தான்...
    அக்னி அவர்களுக்கு...என் சொந்த அனுபவம்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்ல கதை. சில சமயங்களில் நாம் தவறை உணர்ந்தாலும், தன்மானம் அதை ஒப்புக்கொள்ளவிடாமல் செய்துவிடும். பிறகு வெளியில் தெரியவந்தால்.....அது இழுக்குதானே! அதனால் கெளரவம் பார்க்காமல் நாமே தவறை ஒப்புக்கொள்வது நம்மை மேலும் உயர்த்தும்.

    பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    நேர்மை தன்னை தானே மீட்டுக்கொண்டது அது சாகப்போன நேரத்தில் . நல்ல கதை சிவா அண்ணா . வாழ்த்துக்கள். உங்கள் மொபைலும் கிரெடிட் கார்டும் பத்திரம்தானே.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி இன்பக்கவி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமாம் கீதம் அவர்களே. தவறு எனத் தெரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ள எல்லோராலும் இயல்வதில்லை. சுயகௌரவம் தடுக்கும்.

    மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி ரவி. என்னோட மொபைல் என்கிட்ட பத்திரமா இருக்கு. ஆனா கிரெடிட் கார்டு இப்ப இல்ல....இனி எப்பவுமே வாங்கறதா இல்லை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சமயத்தில் நல்லவர்க்கும் சபலப் புத்தி ஏற்பட்டு தடுமாற வைத்து விடும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இது சில சமயங்களில் நடப்பது தான்.
    சின்னச் சின்ன நிகழ்வுகளை வைத்து அழகான கதைகளைப் புனைவதில் நிபுணராக ஆகிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

    எனக்கு ஒரு சிறு சந்தேகம்:-

    அந்த மொபைலைப் பார்த்தவுடன், "அடடே இது என்னோட மொபைல் போலவே இருக்கே, அதே மாடல்" என்று அந்த இளைஞன் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா? ஏன் சொல்லவில்லை?
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •