அந்த கவிஞன் திருடன்.
இவன் கோழை.
இன்னொருத்தன் குடிகாரன்.
மற்றொருவன் ஸ்த்ரீலோலன்.
கவிதாயினி ஒருத்தி காமம் பீடித்தவள்.
இன்னொருத்தி சிகரெட் ரசிப்பவள்.
ஒருத்தி திமிர் பிடித்தவள்.
போதும்.
இனி
அவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேசுங்கள்.

source - uyirmmai.com