உண்மையிலேயே கவலை தரும் செய்தி.
பலருக்கு இப்போது தமிழில் எழுதுவதே மறந்துபோய்விட்டது!
உணர்த்தியதற்கு நன்றி.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
உங்கள் கவிதை கண்டு எனக்கு அதிர்ச்சி. ஏனெனில் நான் இன்றும் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் காகிதத்திலோ. நோட்டுப்புத்தகத்திலோ எழுதிவைத்துக் கொண்டு, பலமுறை வாசித்து, தேவையெனில் திருத்தங்கள் செய்து திருப்தி வரும்போதுதான் தட்டச்சு செய்யவே விழைகிறேன். அதனால் எல்லோரும் என்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணிவிட்டேன்.
நீங்கள் சொல்வதை பலரும் ஆமோதிப்பதைப் பார்த்தபிறகுதான் உண்மை நிலவரம் உணர்கிறேன். நல்லவேளை. இப்போதாவது அறிந்தீர்களே. தினமும் கொஞ்சநேரம் எதையாவது எழுதிப் பழகினால் தமிழ் தானே வந்துவிடும்.
சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். இப்போது செந்தமிழும் கைப்பழக்கம் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. சிவா.ஜி அவர்கள் சொன்னதுபோல் மின்சாரத்துறை அமைச்சருக்கு ஒரு நன்றி, இப்படி ஒரு விழிப்புணர்வுக் கவிதையைப் படைக்க உங்களைத் தூண்டியதற்கு.
பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.
கீதம் நன்றிகள்..
உங்களை போல நான் ஒரு நாளும் செய்தது இல்லை..
பேப்பர் பேனாவுக்கான தேவை இருப்பது இல்லை..வங்கிக்கும் செல்வது இல்லை..ATM கொண்டே பண மரிமாற்றம். ஆன்லைன் என்று எல்லாமே கணினியிலே முடிதி விடுவதால் என் கைபையில் பேனாக்கூட இல்லை...இதை நினைத்து வருந்துகிறேன்...எங்க பாப்பா இல்லை என்றால் நோட்டு புத்தகம் கூட காண முடியாது போல இருக்கு..நான் பேனாவை கூட எங்க பாப்பா பையில் இருந்து தான் எடுத்தேன்..
என் கை எழுத்து முத்து முத்தாக இருக்கும் என்று சொல்லுவங்கள்..ஆனால் இப்போது சொல்ல முடியவில்லை..
இனி பேப்பர் பேனாவில் தான் எழுதி வைக்கவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்...
நன்றிகள் கீதம்![]()
எல்லோருக்கும் உள்ள நிலைதான். இப்படியாவது தமிழ் வருகிறதே என்று நினைத்து ஆறுதல் கொள்ள தோணுகிறது.![]()
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
மறைமுக மொழிச் சீரழிவை, அநாயாசமாகச் சொல்லும் கவிதை...
இணையத்திற் தமிழை வளர்ப்பது
காலத்தின் தேவைதான்...
அதற்காக,
இணையத்தில் மட்டுமே தமிழ் வளர்வது,
நல்லதல்ல...
கணினிக்குள் தமிழெழுத்து
முன்னேற்றம்தான்...
ஆனால்,
காகிதத்திற் தமிழெழுத்து
அவசியமானதன்றோ...
எழுத்தைத் தொலைத்துவிட்டு,
மொழியை வளர்ப்பது,
மொழியையே தொலைத்துவிடும்.
சுதாகரிக்கவேண்டிய நேரமிது...
இல்லையென்றால்,
தமிழ் தன் தனித்துவத்தை இழந்துவிடும்...
காகிதத்தில் தமிழ் எழுத்து உருவாய்
வாழும்வரைக்கும்தான்,
கணினிக்குட் தமிழெழுத்துருக்கள்
வகைவகையாய் அழகழகாய் இருக்கும்.
தமிழில் விரைவாகத் தட்டச்சிடுவேன்,
எந்த எழுத்துருவானாலும் சமாளித்திடுவேன்
எனப் பெருமிதப்படும் என்போன்றோருக்குச் சரியான சாட்டையடி இந்தக் கவிதை.
இப்போதேனும் சுதாகரிக்காவிட்டால், நம் தாய்மொழியின் அழிவுக்கு
நானும்தான் ஒரு காரணம்...
இது, வெளித்தெரியாது உருக்குலைக்கும் வியாதி.
தமிழுக்குப் பீடித்தது நம் கவனயீனமே...
நம் மொழியைப் பிடித்த வியாதிக்கு
மருத்துவர் நாமே...
மருந்தும் நம்மிடமே...
தினம் ஓர் வார்த்தையேனும் தமிழிற் காகிதத்திற் கட்டாயம் எழுத உறுதி கொள்வோம்.
சரியான தருணத்தில் வந்த கவிதை இது.
அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை.
ஆதலால்,
இதனை ‘ஒட்டி’ வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
விழிப்பைத் தந்த கவிதாவுக்கு நன்றி.
விழிக்க வைத்த கவிதைக்குப் பாராட்டு.
Last edited by அக்னி; 02-03-2010 at 03:27 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றிகள் அக்னி அவர்களே..
முன்பு எல்லாம் நேரடியாக தட்டச்சு செய்து பதிவிடுவேன்..
நானும் இபோதெல்லாம் கவிதைகளை
டைரியில் எழுதும் பழக்கம் வைத்து விட்டேன்..
ஆபிஸ் வேலையால் நேரமின்மையும் இருப்பதால்
தோன்றுவதை உடனே டைரியில் எழுதிவருகிறேன்...![]()
நினைத்து மறந்து
மரித்த கவிதைகள்
ஏராளம்
---எவ்வளவு உண்மை.
உங்கள் கவிதை அழகு
நிறைய எழுதுங்கள்.![]()
எனக்கு பல முறை நடக்கும் வழக்கமான குழப்பம்
நான் எழுத நினைத்ததை எழுதிவிட்டாய்
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
உண்மை.. உண்மை.. கணினி மொபைல்
போன்ற சாதனங்களை வசதியாக பழகிவிட்ட பிறகு நாம் இப்போது
நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் இருந்தும் நமது பண்பாடுகளிலிருந்தும் ரொம்பவே வெளியே வந்து விட்டோம்...
எப்படி இப்போதெல்லாம் நேரமின்மையால் உடனடி இட்லி தோசை மாவு வாங்கி உடனடியாக சமைத்து சாப்பிட்டு கொள்கிறோமோ அதுபோல ஆகிவிட்டது...
முன்பு இருந்த எனது நோட்டு புத்தக கிறுக்கல்களும் புத்தகங்களை படிக்கும் ஆர்வமும் எங்கே போனது என்ற தெரியவில்லை...
அதிர்ச்சியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது இந்த கவிதை
நன்றி கவிதா...!
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks