Page 3 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 125

Thread: அடோப் இமேஜ் ரெடி அனிமேஷன் .(Adobe image Ready).

                  
   
   
  1. #25
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    ஓகோ. அதுதான் வீட்டுபாடம் செய்யவில்லையா!

    சரி. உடனே Recycle Bin -ல் அது இருக்கும் ரீஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.








    இல்லை என்றால். போட்டோஷாப். அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.அப்படி செய்தாலும். ஒரு சில போல்டர்,பைல் இருக்கும்.



    சர்ச் சென்று போட்டோஷாப் என்று சர்ச் கொடுங்கள். வரும் போட்டோஷாப் சம்பந்தபட்ட அத்தனை பைல்,போல்டர் களையும், நீங்கள் அழித்துவிட்டு மீண்டும் நிறுவுங்கள்.

    நன்றி.

  2. #26
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அருமையன தொடர் . இன்றுதான் இந்த தலைப்பைப் பார்த்தேன். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் .. இந்த தொடர் பல பதிவுகள் கண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக மிக அருமையான பாடம். அருகிலிருந்து சொல்லித்தருவதைப் போல விளக்கங்கள். மிக மிக நன்றி நூர். உங்களுடைய ஆத்மார்த்தமான பாடப் பகிர்வுக்கு ஆயிரம் நன்றிகள்.

    (வாங்க பூர்ணிமா....நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம்.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிவு-5
    ----------

    சென்ற பதிவில் சொன்னது போல் ஒரு எழுத்தை எழுதி முடித்த பிறகு,

    (பேக்ரவுண்ட் லேயரில் ஏதும் எழுதாது விட்டு இருக்கின்றேன்)



    எண்-1ல் கிளிக் செய்து நியு லேயர் எடுத்துக்கொள்ளுங்கள்.

    எண்-2ல் கிளிக் செய்து



    இங்கிருந்து ஒரு பென் படம் எடுத்துக்கொள்ளுங்கள்.



    இந்த ஐகானை கிளிக் செய்து பெவில் அன் எம்போஸ் கிளிக் செய்து வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள்.



    (இங்கு வித விதமான டிஷைன் செய்யலாம்,உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லை)

    edit--> transform சென்று பென் படத்தை உங்கள் தேவைக்கு ஏற்ப திருப்பிக் கொள்ளுங்கள். சரி.

    இனி. இமேஜ்ரெடிக்கு செல்லலாம்.
    -------------------------------------------

    பேக்ரவுண்டு லேயர், மற்றும் பென் சம்பந்தபட்ட லேயர் தவிர மற்ற லேயரின் கண் போன்ற ஐகானை மறைத்து விடுங்கள்.

    கீழே உள்ள படத்தை பாருங்கள்.



    இப்பொழுது பென்னின் மீது கர்சரை வைத்து, மவுசை கிளிக் செய்தபடி மெதுவாக எழுத்து ஆரம்பிக்கும் இடத்திற்கு நகர்த்துங்கள்.

    (எழுத்து ஆரம்பிக்கும் இடம் தெரியவில்லை என்றால் எண் 1ல் இருக்கும் லேயரின் கண் ஐகானை தற்காலியமாக திறந்து கொள்ளுங்கள்,சரியான இடத்தில் பென்னை நிறுத்திய பின் இந்த கண் ஐகானை மறைத்துவிடுங்கள்.)



    இப்பொழுது



    டூப்லிகேட் கரன்ட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.ஒரு பிரேம் வரும்.

    லேயர் 1-ன் கண் ஐகானை திறங்கள்.

    பென்னை நகர்த்துங்கள்.

    கிழே படத்தை பாருங்கள்.




    டூப்லிகேட் கரன்ட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.
    லேயர் 2-ன் கண் ஐகானை திறங்கள்

    பென்னை நகர்த்துங்கள்.






    சுருக்கமாக.

    ஒவ்வொரு டூப்லிகேட் கரன்ட் பிரேமுக்கும், ஒருஒரு கண் ஐகானை திறந்து கொள்ள வேண்டும்.

    பென்னை அந்த எழுத்தின் சின்ன,சின்ன மூமென்ட்டுக்கு தக்க நகர்த்த வேண்டும்.

    சரி,இனி என்ன! சேவ் செய்து கொள்ளுங்கள்.




    நன்றி.மீண்டும் அடுத்த வாரம் TWEEN உடன் சந்திப்போம்.அன்புடன் நூர்.

    Last edited by நூர்; 27-03-2010 at 05:41 AM.

  5. #29
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    அனைவருக்கும் வணக்கம்.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.(யாரும் கருத்திடவில்லையா! பரவாயில்லை)

    பதிவு-6
    ------------

    TWEEN-

    இதில் மிக,மிக எளிமையாக அதே நேரத்தில் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அனிமேஷன் செய்யலாம்.
    -----------------------------------
    File--> New ஒரு புதிய பைலை திறந்து கொள்ளுங்கள்.

    Layer--> Layerstyle-->Blending options சென்று,உங்கள் விருப்பம்போல்,கலர்,டிசைன் செய்து கொள்ளலாம்.ஒரு படத்தை கூட வைத்துக்கொள்ளலாம்.



    இந்த லாக் போன்ற ஐகான் இருக்கும் வரை நீங்கள் சில மாற்றங்களை இந்த லேயரில் செய்ய முடியாது.

    லாக் போன்ற ஐகான்னை டபுல் கிளிக் செய்யுங்கள், வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள். இப்போது அந்த லாக் மறைந்து விடும். இனி தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

    Text ஐ கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமானதை டைப் செய்து கொள்ளுங்கள்.

    Layer--> Layerstyle-->Blending options சென்று,டிசைன் செய்து கொள்ளலாம்.



    புதிய பைலில் டெக்ஸ்ஸை டைப் செய்து விட்டீர்களா!

    இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
    ---------------------------------------------

    அந்த Text-ன் மீது கர்சரை வைத்து மவுசில் கிளிக் செய்தபடி மெதுவாக நகர்த்துங்கள். கிழே படத்தை பாருங்கள்.




    நகர்த்திய பிறகு டூப்லிகேட் கரண்ட் பிரேமை கிளிக் செய்யுங்கள்.
    அந்த Text ஐ எதிர் பக்கமாக நகர்த்துங்கள்.



    நகர்த்திய பிறகு ,Tween animation frames

    என்பதை கிளிக் செய்யுங்கள்.

    வரும் விண்டோவில் Frames to add என்பதில் நான் 12 பிரேம் கொடுத்து இருக்கின்றேன்.



    நீங்கள் எத்தனையும் வைத்துக்கொள்ளலாம்
    பிரேம் அதிகமானால் படம் தத்ரூபமாக இருக்கும். அதே நேரத்தில் படத்தின் அளவு(Bytes) அதிகமாகும்.

    மற்றபடி செட்டிங் இது மாதிரி இருந்தால்
    ஒகே கொடுத்து விடுங்கள்.

    சுருக்கமாக
    ---------------
    முதல் பிரேம்மில் அனிமேஷன் ஆரம்பிக்கும் இடம்

    2-வதாக கிளிக் செய்த டூப்லிகேட் பிரேம்மில் அது முடியும் இடம்.,Tween ஐ கிளிக் செய்து வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள்.

    எந்த திசையில் இருந்தும், எந்த திசைக்கும் நகர்த்தலாம்..

    (நேர் கோட்டில்தான் செல்லும்.)

    இனி என்ன!

    நேரத்தை(வேகம்) தேர்வு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.



    ----------------------------
    இதை பேசிக்காக வைத்துக்கொண்டு,

    வில்லில் இருந்து விடும் அம்பு,

    துப்பாக்கியில் இருந்து பாயும் புல்லட்,

    பறக்கும் விமானம்.

    காற்றில் மிதக்கும் பலூன்

    தரையில் இருந்து விடும் ராக்கெட்........

    என உங்கள் கற்பனைக்கு ஏற்ப செய்யலாம். உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லை.
    ------------------------------------------
    பார்வேடு அன் ரிவர்ஸ்,
    -------------------------------
    சரி, இன்னொரு ஸ்டெப் அதிக படுத்தலாம்,



    அந்த கடைஷி பிரேமை செலக்ட் செய்து,

    பின் Tween ஐ கிளிக் செய்யுங்கள்.




    எண்-1ல் இருக்கும் ஆரோ வை கிளிக் செய்யுங்கள், வரும் விண்டோவில்
    First Frame செலக்ட் செய்து ஒகே கொடுங்கள்.



    இதை பேசிக்காக வைத்துக்கொண்டு,

    சுவற்றில் வீசிய பந்து....

    மற்றும் திரும்பி வரும் செயல்களை செய்யலாம்.
    ---------------------------------------------------
    இந்த டெக்ஸ் க்கு பதிலாக நீங்கள் விரும்புகிற படத்தை கொண்டுவருது எப்படி!, என்பதை வரும்வாரம் பார்க்கலாம்.

    நன்றி,மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.அன்புடன் நூர்.



    -----------------------------------------------------

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நன்றி நூர் உங்கள் ப(பா)டங்கள் கற்பதற்கு சுலபமாக உள்ளது. யாராவது மட்டுறுத்துனர்கள் இதை தொகுத்து வைத்தால் மன்றத்தில் பின்னாடி வருபவர்களுக்கும் சுலபமாக இருக்கும்

    எல்லோருக்கும் விடுமுறை என்பதால் பின்னூட்டங்களை இடவில்லை என நினைக்கின்றேன்.

  7. #31
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    நன்றி நூர்,எல்லா பாடங்களையும் தொகுத்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

  8. #32
    புதியவர்
    Join Date
    01 Mar 2010
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    மிக அருமை... எங்களுக்கும் இதை எப்படி செய்வது என்று கற்று தாருங்கள்...

    நன்றி
    மா. தமிழரசி

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    tween செய்து பார்த்தேன் என்னால் என்னுடைய பெயரை நகர்த்த முடியவில்லை...cursor select தான் செய்கிறது...
    கையெழுத்து அனிமேஷன் கோணலா வருகிறது
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  10. #34
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    Quote Originally Posted by trifriends View Post
    மிக அருமை... எங்களுக்கும் இதை எப்படி செய்வது என்று கற்று தாருங்கள்...

    நன்றி
    மா. தமிழரசி
    நன்றிங்க. கற்று தருவதற்குகாகத்தான் இந்த திரி.

  11. #35
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    Quote Originally Posted by இன்பக்கவி View Post
    tween செய்து பார்த்தேன் என்னால் என்னுடைய பெயரை நகர்த்த முடியவில்லை...cursor select தான் செய்கிறது...
    கையெழுத்து அனிமேஷன் கோணலா வருகிறது
    வாங்க சகோதரி. இப்ப படம்மொல்லாம் பதிவது இல்லையா!

    சரி,

    Tween-ல் உங்கள் பெயரை நகர்த்த முடியவில்லையா! நீங்கள் நகர்த்தும் போது அந்த லேயர் செலக்ட் செய்யபட்டு இருக்கிறதா! என்பதை கவனிங்கள்.

    இன்னும் ஒரு வழி.
    --------------------
    நகர்த்த வேண்டிய லேயரை செலக்ட் செய்து, கீ போர்டில் லெப்ட்,ரைட் ஆரோ கீ யை அழுத்துங்கள்.

    நன்றி.

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    நான் ஒவ்வொரு பதிவையும், முயற்சி செய்து பார்கிறேன் ஒரு சிலது நல்லா வருவது இல்லை...எனக்கு handtool sometimes வருது...செலக்ட் ஆகி தான் வருகிறது...

    நான் ஆர்வமாய் உங்கள் பதிவை தொடர்ந்து வருகிறேன்..
    என் தோழிகளுக்கு சொல்லி தருகிறேன்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

Page 3 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •