மிக்க நன்றி அண்ணா.......
மிக்க நன்றி அண்ணா.......
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
வணக்கம் நூர்,
பதிவு- 17,18,19 ன் பாடங்களும் அருமை.
வேலை பளுவால் பாடங்களை செய்ய தாமதம்,
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 21
---------------
File-> New கொடுத்து புதிய பைல் திறந்து கொள்ளுங்கள். (width 400/ Height 150)
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
மூன்று நியு லேயரில் மேல் உள்ள மூன்று தவளை படத்தை கொண்டு வாருங்கள்.
(ஒரு லேயருக்கு ஒரு படம்)
குறிப்பு.
======
பேக்ரவுண்ட்-ல் ஒரே கலர் இருக்கும் படத்தை செலக்ட் செய்வது ரொம்ப ஈஸி.
மறுபடியும்,
File -> Open கொடுத்து அந்த தவளை படத்தை திறந்து கொள்ளுங்கள்.
Magic Wand டூல் செலக்ட் செய்து, அந்த தவளை படத்தில் ஒயிட் (வெள்ளை) இருக்கும் பகுதில் வைத்து கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது அந்த ஒயிட் பாகம் முழுவதும்
செலக்ட் ஆகி இருக்கும். ஆனால், இது நமக்கு தேவை இல்லை.
Select -> Inverse கிளிக் செய்யுங்கள். இப்பொழுது, அந்த ஒயிட் பாகத்தை தவிர
மற்றவை செலக்ட் ஆகி இருக்கும்.
இதுதான் நமக்கு தேவை. Etit ->Copy செய்து கொள்ளுங்கள். காப்பி செய்த பின் அந்த தவளை படம் தேவை இல்லை Close செய்து விடுங்கள்.
இனி, நியு லேயரில் பேஸ்ட் செய்யுங்கள்..
இந்த முறையில் 3 நியுலேயரில் 3 படத்தை கொண்டுவாருங்கள்.
சரி, இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
=============================
பொதுவாக எல்லா பிரேமுக்கும், பேக்ரவுன்ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
முதல் பிரேமுக்கு- லேயர் 1-இன் கண் ஐகான் மட்டும் திறங்கள். மற்றவையை மறைத்து விடுங்கள்.
(அந்த கண் ஐகான் மீது கிளிக் செய்தால் மறைந்து விடும், மறுபடியும் கிளிக் செய்தால் வந்துவிடும்.)
2வது கிளிக் செய்த டூப்லிகேட் பிரேமுக்கு- லேயர் 2-ன் கண் ஐகான் மட்டும்.
3வது கிளிக் செய்த டூப்லிகேட் பிரேமுக்கு- லேயர் 3-ன் கண் ஐகான் மட்டும்.
4வது கிளிக் செய்த டூப்லிகேட் பிரேமுக்கு- லேயர் 2-ன் கண் ஐகான் மட்டும்.
5வது கிளிக் செய்த டூப்லிகேட் பிரேமுக்கு- லேயர் 1-ன் கண் ஐகான் மட்டும்.
ஒவ்வொரு பிரேமையும் செலக்ட் செய்து , தவளை தாவும் பொக்கிஷனுக்கு ஏற்ப ,மவுசால் அந்தந்த படத்தை நகர்த்திக்கொள்ளுங்கள்.
தேவையான நேரத்தை தேர்ந்தெடுத்து,சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
--------------------------------------------
![]()
மிக மகத்தான வேலை யைது கொண்டிருக்கிங்க நூர் என்னுடைய வாழ்த்துகளும் நன்றிகளும்
என்னிடம் இருப்பது adobe photshop elements6.0 அதிலும் இதே போல் செய்ய வேண்டுமா?
வாழ்க்கை வாழ்வதற்கே
நன்றி. நீங்கள் அதில் முயற்சி செய்து பாருங்கள். அல்லது pS3 இங்கு http://www.4shared.com/file/feb4CGTc..._Extended.html இருந்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.(50MB)
Last edited by நூர்; 16-06-2010 at 05:49 PM.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 22 .
------------
File-> openகொடுத்து உங்களுக்கு பிடித்த படத்தை திறந்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------
1-. நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
2-.Gradient Tool கிளிக் செய்து படத்தில் உள்ளது போல் செட்டிங் கொடுங்கள்..
சின்ன சின்ன கோடு இழுங்கள்.
3-.“Color Dodge” க்கு மாற்றுங்கள்.
---------------------------------------
1முதல் 3 முடிய இன்னும் 2 அல்லது 3 முறை செய்யுங்கள்.( சின்ன சின்ன கோடு வேறு வேறு இடத்தில் இழுங்கள்.)
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
-----------------------------------------------
பொதுவாக எல்லா பிரேமுக்கும், பேக்ரவுன்ட் லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
முதல் பிரேம்க்கு -லேயர் 1 கண் ஐகான் மட்டும்திறந்து இருக்க வேண்டும்.
2வது பிரேம்க்கு -லேயர் 2 கண் ஐகான் மட்டும்திறந்து இருக்க வேண்டும்.
3வது பிரேம்க்கு -லேயர் 3 கண் ஐகான் மட்டும்திறந்து இருக்க வேண்டும்.
தேவையான நேரத்தை தேர்ந்தெடுத்து,சேவ் செய்து கொள்ளுங்கள்.
25 வது பதிவுக்கு பின் பாகம் 2 தொடரும்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
====================================
![]()
நூர் தொடர்ந்து அளித்து வரும் அடோப் பயிற்சிக்கு நன்றி! அவரின் 22 வது பதிவுக்கும் நன்றி!
கீழே உருவாக்கியது...... தங்களது பயிற்சியினை பின்பற்றியதால்....கூடுதலாக தமிழ் வார்த்தைகளை சேர்த்திருக்கிறேன். அடோப்பில் தமிழ் எழுத்துக்களை வரவழைப்பது கடினமா? (தமிழ் வார்த்தைகளை உள்ளே கொண்டுவருவதற்கு மிக சிரமப்பட்டேன்.)
![]()
நன்றி.
மிக எளிதாக தமிழிழ் எழுதலாம்.
TSCu_paranar,மாற்றுங்கள், Alt-3 கிளிக் செய்து வழக்கம்போல் தட்டச்சு செயயுங்கள். மறுபடியும் ஆங்கிலத்திற்கு மாற Alt+1
மேலும் விபரம் அறிய.http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22312
![]()
போட்டோஷாப்பில் தமிழில் எழுத மிக மிக கடினமாக தெரிந்தது. ஆனால் நீங்கள் மிக இலகுவாக பதில் சொல்லிவிட்டீர்கள். முன்னரே உங்களிடம் கேட்டு தெரிந்திருக்க வேண்டும். நன்றி ஐயா . . .
வாழ்க்கை வாழ்வதற்கே
நூர்,
மிக அருமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள்.
எனக்கு photoshop தான் இல்லை...செய்துபார்ப்பதற்கு :(
-கண்ணன்
ஈ கலப்பை பயன்படுத்தி எழுதினேன் பிழையில்லாத எழுத்துக்கள் வந்தது. இருந்தாலும் அதில் தமிழ் ஒலியியல் முறை தான் உள்ளது. என்.எச். எம் கொண்டு அடோப்பில் எழுத முடியுமா? அல்லது தமிழ் 99 தட்டச்சு துணை கொண்டு எழுதமுடியுமா? என்.எச் எம் இயக்கினால் உடனே லதா எழுத்துரு வந்துவிடுகிறது. அந்த எழுத்துருவில் அடோப்பில் எழுத முடியவில்லை....( தமிழ் எழுத்துக்கள் பிய்த்து போட்ட ஜிலேபி மாதிரி ஆகிவிடுகிறது) என் எச் எம்...ஐ வெளியேற்றிவிட்டுத்தான் ஈ கலப்பையில் தட்டச்சு செய்ய முடிகிறது. (ஒலியியல் முறை மட்டும் உள்ளதால் தான் ஈகலப்பை பயன்படுத்தவில்லை.)
அடோப்பில் எழுதுவது குறித்து நல்லதொரு வழியை காட்டினீர்கள். மிக்க நன்றி நூர். அடோப்பில் மேலே கூறியது போல் (தமிழ் 99) தட்டச்சு செய்ய முடியுமா? என்பதை உடனே தெளிவு படுத்த வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும் பொழுது பதிவிட்டால் போதும்.
நன்றி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks