நல்ல தவலுக்கு நன்றி
நல்ல தவலுக்கு நன்றி
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 10
-------------
File -> open கொடுத்து ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள்.
1- நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
2- Edit > Fill (கருப்பு கலரால் நிரப்புங்கள் )
3-Filter > Noise > Add Noise படத்தில் உள்ளது போல் செட்டிங்,மதிப்பு கொடுங்கள்.
4- Filter > Blur > Motion Blur படத்தில் உள்ளது போல் செட்டிங்,மதிப்பு கொடுங்கள்.
5-"Screen" க்கு மாற்றுங்கள். மேல் உள்ள படத்தை பாருங்கள்.
6-"Ctrl+L" அழுத்தி வரும் விண்டோவில்,படத்தில் உள்ளது போல் மதிப்பு கொடுங்கள்.
சரி.
எண் 1 லிருந்து 6 முடிய மறுபடியும்,மறுபடியும் செய்யுங்கள்.(மொத்தம் 3 முறை செய்யுங்கள்.)
Filter > Blur > Motion Blur =Distance-ன் மதிப்பை மட்டும் மாற்றி 30,40,50 என கொடுங்கள்.
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
-------------------------------------------
பேக்ரவுண்ட் லேயரின் கண் போன்ற ஐகானை தவிர மற்ற கண் ஐகானை மறைத்துவிடுங்கள்.
இரண்டு முறை டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.( மொத்தத்தில் 3பிரேம்)
முதல் பிரேமை செலக்ட் செய்து,லேயர் 1ன் கண் ஐ திறங்கள்.
2வது பிரேமை செலக்ட் செய்து,லேயர் 1ன் கண் ஐ மறைத்துவிட்டு 2ன் கண் ஐ திறங்கள்.
3வது பிரேமை செலக்ட் செய்து,லேயர் 1,2ன் கண் ஐ மறைத்துவிட்டு 3ன் கண் ஐ திறங்கள்.
சுருக்கமாக. ஒரு,ஒரு பிரேமுக்கு ஒரு நியு லேயர் கண் ஐகான் மட்டும்.
இனி, தேவையான நேரத்தை தேர்ந்து எடுத்து சேவ் செய்யுங்கள்.
இந்த 10 பதிவுகளில் பேசிக் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.
இனிவரும் பதிவுகளில் சில எபெக்ட் களை பயன் படுத்தி
பதிவிடுகின்றேன்.நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
ரொம்ப நல்லா இருக்கு ...சூப்பர்...
இதை செய்து பார்த்தேன் எனக்கு fill கலர் கொடுத்த பிறகு கருப்பு dark-அ வந்து விட்டது கடைசி கட்டம் கொஞ்சம் பொறுமையாக செய்யது பார்க்கணும்...
கருப்பு மழை பெய்கிறது![]()
தகவலுக்கு மிக்க நன்றி......நீங்கள். கூரியதை முயற்சி செய்து பார்க்கிறேன்.
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
அன்பு நூர்,
பாடத்தை எவ்வளவு எளிமையாக கற்றுத் தருகிறீர்கள். நீங்கள் சொல்லி கொடுத்தவுடன் செய்து பார்த்து விடுவேன். 4 நாட்களாக நெட் கனைக்ஷனில் ப்ராப்ளம் இருந்ததால் இதை பார்வையிட முடியவில்லை. உங்கள் படைப்புக்கள் அனைத்தும் மிக அருமை. உங்கள் நல்ல மனதிற்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப். என்னைப் பற்றீதானே கண்டிப்பாக அறிமுக பகுதியில் எழுதுகிறேன். நன்றி நூர்
அன்புடன்
ஜமிலா
தோழர் நூர் அவர்களுக்கு பாராட்டுக்கள் . ஒவ்வொரு பாடமும் அசத்தலாக விளக்கம் தருகின்றீர்கள் . போட்டோ ஷாப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் என்னைப் போன்ற புதியவர்கள் அனைவருக்கும் மிக மிக பயனுள்ள தொகுப்பாக இது இருந்து வருகின்றது. நன்றி .
வாழ்க்கை வாழ்வதற்கே
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
சகோதரி, கருப்பு மழை பெய்கிறது என்றார்கள், அது சரியாக வந்ததா! என்று தெரியவில்லை.
பதிவு- 11
-------------
File -> open கொடுத்து ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள்.
Polygonal Lasso Tool இந்த டூல் மூலம் படத்தின் உள்பக்கமாக செலக்ட் செய்யுங்கள்.
நியு லேயர் கிளிக் செய்யுங்கள்.
Edit > Fill உங்களுக்கு பிடித்த கலரால் நிரப்புங்கள்
Blending ஆப்சன் கிளிக் செய்து Darken க்குமாற்றுங்கள். மேல் உள்ள படத்தை பாருங்கள்.
Layer -> add layer mask -> Reveal selection கிளிக் செய்யுங்கள்.
லேயரில் செயின் போல் இருக்கும் ஐகான் மீது ஒரு கிளிக் செய்து மறைத்து விடுங்கள்.
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
-------------------------------------------
டூப்லிகேட் பிரேம் கிளிக் செய்யுங்கள்.
அந்த கலரின் மீது கர்சரை வைத்து மவுசில் கிளிக் செய்தபடி கிழாக நகர்த்துங்கள்.
(எந்த திசையிலும் நகரும் இருந்தாலும், நாம் ஆரம்பத்தில் செலக்ட் செய்த எல்கையை தாண்டாது.)
Tween ஐ கிளிக் செய்து ஒகே கொடுங்கள்.
இனி, தேவையான நேரத்தை தேர்ந்து எடுத்து சேவ் செய்யுங்கள். அந்த கடைஷி பிரேமை செலக்ட் செய்து ரிவர்ஸ் வரும் மாதிரியும் செய்யலாம்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
![]()
சூப்பர்......பதிவு- 11 ம் அருமையாக வந்தது. நன்றி.....
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
ஆச்சர்யம்... ஆஹா அற்புதம்... நான் இதுவரையில் போட்டோஷாப்பில் டிசைனிங் மட்டுமே செய்துவந்திருக்கிறேன்.. இந்த தொழில்நுட்பங்கள் மிகவும் ஆச்சர்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.. இந்த திரி மூலமாக நீங்கள் அளித்துவரும் சேவை மிகப்பெரியது.. எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது... வாழ்த்துக்கள், நன்றிகளுடன் சிறு அன்பளிப்பும்... மேலும் நிறைய தொடர்வீர்கள் என ஆவலாக இருக்கிறேன்...
அன்பு நூர்,
வீட்டு பாடம் செய்து பார்த்தேன் மிக நன்றாக வந்தது. தங்கள் சேவைக்கு என் உளமார்ந்த நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் ஆட் லேயர் மாஸ்க் எதற்காக யூஸ் பண்ண வேண்டும். (பொதுவாக நிறைய போட்டோஷாப் படங்களில் பயன்படுத்துவதை கண்டிருக்கிறேன்.) முடிந்தால் எனக்கு கூறுங்கள்.
மிக்க நன்றி நூர்.
அன்புடன்
ஜமிலா பானு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks