இரண்டாம் பாகத்தில் அடோப் போட்டோஷாப் சி.எஸ் 3 தரவிரக்கம் ப்ற்றி குறிப்பிட்டிருக்கிறார் நூர். அதை முயற்சி செய்து பாருங்கள்.
அடோப் அனிமேஷன் பாகம் 2
இரண்டாம் பாகத்தில் அடோப் போட்டோஷாப் சி.எஸ் 3 தரவிரக்கம் ப்ற்றி குறிப்பிட்டிருக்கிறார் நூர். அதை முயற்சி செய்து பாருங்கள்.
அடோப் அனிமேஷன் பாகம் 2
வணக்கம் நூர்,
பதிவு-22ன் பாடமும் அருமை,
நன்றி.....நன்றி......நன்றி.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 23
---------------
File->New கொடுத்து ஒரு புதியபைலை
திறந்து கொள்ளுங்கள். (400/250)
கருப்பு கலரால் நிரப்புங்கள்.
----------------------------------------------------
-----------------------------------------------------
1-. Shape டூல் கிளிக் செய்து. அந்த மரத்தின் படத்தை வரைந்து கொள்ளுங்கள்.
2-. Ctrl, Alt அழுத்திக்கொண்டு, மவுசில் கிளிக் செய்தவாறு அந்த படத்தை நகர்த்துங்கள். இன்னொரு படம் வரும். இப்படி சரியான இடைவெளியிட்டு நான்கு படம் செய்யுங்கள்.
3-. அந்த லேயர்ரில் வலது கிளிக் செய்து Rasterize Layer கிளிக் செய்யுங்கள்.(இப்பொழுது அந்த லேயர் வழக்கமான லேயராக மாறி விடும்)
==================================
1முதல் 3முடிய இதை போல், அடுத்து மனித படத்தை செய்யுங்கள்.
இப்பொழுது, இந்த 2 லேயரையும்(மரம்,மனிதன்) நீள்வாக்கில் ஒட்ட வேண்டும்.
ஒன்றை வலது பக்கம் நகர்த்துங்கள். இன்னொன்றை இடது பக்கம் நகர்த்துங்கள்.
இரண்டு லேயரையும் சரியான இடைவெளியிட்டு, நேராக வைத்துக் கொள்ளுங்கள்..
ஒரு லேயரை செலக்ட் செய்து,அதன் அருகில் இருக்கும் இன்னொரு லேயரில் அந்த இடத்தல் கிளிக்
செய்யுங்கள்.செயின் ஐகானை வரும்.
இரண்டு லேயரையும் ஒட்டியாகிவிட்டது.
அல்லது இன்னொருவழி.
----------------------------------
Ctrl+E கிளிக் செய்தால் இரண்டும் ஒட்டுவதோடு மட்டும் அல்லாமல், ஒரே லேயராகவும் மாறிவிடும்.
==================================
நியு லேயர் கிளிக் செய்யுங்கள். அந்த கிரீடம் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த லேயர் ரில் வலது கிளிக் செய்து Rasterize Layer கிளிக் செய்யுங்கள்.
நியு லேயர் கிளிக் செய்யுங்கள். இந்த மின்னல்படத்தைஎடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மின்னல் படத்தின் லேயரை மட்டும்
“Screen” க்கு மாற்றுங்கள்.
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
-----------------------------------------------
பிரேம்-1
---------
அந்த மின்னல் படத்தின் கண் ஐகானை மறைத்து விடுங்கள்.
கீரிடம் லேயரை செலக்ட் செய்து,நடுவில் மேல் பக்கமாக நிறுத்துங்கள்.
அதற்கு நேர் கிழாக மனித படத்தை நிறுத்துங்கள்.
=======================================
பிரேம்-2(டூப்லிகேட் பிரேம்)
--------------------------
டூப்பிலிகேட் பிரேம் செலக்ட் செய்து அந்த மரத்தை அந்த கீரிட படத்திற்கு நேர் கிழாக வரும்மாறு நகர்த்துங்கள்.
இனி tween கிளிக் செய்து 12 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.
13 வது பிரேம் செலக்ட் செய்து அந்த கிரீடபடத்தின் லேயரை செலக்ட் செய்து கொஞ்சம் கீழே நகர்த்துங்கள்.
14 வது பிரேம் செலக்ட் செய்து அந்த
மின்னல் படத்தின் கண் ஐ திறங்கள்.அதை சரியான இடத்திற்கு நகர்த்துங்கள்.
கிரீடபடத்தின் லேயரை செலக்ட் செய்து இன்னும்கொஞ்சம் கீழே நகர்த்துங்கள்.
தேவையான நேரத்தை தேர்ந்தெடுத்து,சேவ் செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு. நான் மாதிரிக்காக இந்த படங்களை எடுத்து இருக்கின்றேன். உங்கள் விருப்பம்,கற்பனக்கு தகுந்தார் போல் எந்த படத்தையும் எடுத்துக்கொள்ளலாம். கமலை ,ரஜினி ஆக்கலாம். அசினை,நயன் ஆக்கலாம்.
நன்றி,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
==================================
![]()
அனைவருக்கும் வணக்கம், அழகான அனிமேஷனுடன் கருத்திட்ட,நண்பர் நம்பிக்கு நன்றி.
பதிவு- 24
-----------
File->New கொடுத்து ஒரு புதியபைலை
திறந்து கொள்ளுங்கள். (300/200)
நியுலேயர் கிளிக் செய்யுங்கள்.
அந்த வண்ணத்து பூச்சி படத்தை கொண்டு வாருங்கள்.
அதில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
Rectangular Marqee டூல் கிளிக் செய்து
பாதி இறகை செலக்ட் செய்யுங்கள்.
மூவ் டூலை கிளிக் செய்து கொஞ்சம் சிறியது செய்யுங்கள்.
மூவ் டூலை கிளிக் செய்து அப்ளை கொடுங்கள்.
Select --> De select- கொடுங்கள்.
மறுபடியும்,
இன்னொரு பக்கம் இருக்கும்பாதி இறகை செலக்ட் செய்யுங்கள்.
முவ் டூலை கிளிக் செய்து கொஞ்சம் சிறியது செய்யுங்கள்.
முவ் டூலை கிளிக் செய்து அப்ளை கொடுங்கள்.
Select --> De select- கொடுங்கள்.
இந்த லேயரில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
அதை இதைப்போல் இன்னும் கொஞ்சம் இரு பக்கமும் சிறிது செய்யுங்கள்.
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
-----------------------------------------------
பொதுவாக எல்லா பிரேமுக்கும் , பேக்ரவுண்டு லேயர் கண் ஐகான் திறந்து இருக்க வேண்டும்.
1வது பிரேம்- லேயர் 1-ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்கவேண்டும்.
2வது பிரேம்- லேயர் 2-ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்கவேண்டும்.
3வது பிரேம்- லேயர் 3-ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்கவேண்டும்.
4வது பிரேம்- லேயர் 2-ன் கண் ஐகான் மட்டும் திறந்து இருக்கவேண்டும்.
---------------------
2வது பிரேம்செலக்ட் செய்து, 2 வது லேயரைம் செலக்ட் செய்து, அதை
கொஞ்சம் Rotate, செய்து (2 சதவீதம்) அப்பலை கொடுத்து விட்டு, தேவையான நேரத்தை தேர்த்தெடுத்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
நன்றி, மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
==================================
![]()
ஒவ்வொரு வாரமும் மிக அருமையான படைப்புகளை தந்து
வரும் நூர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
வாழ்க்கை வாழ்வதற்கே
வணக்கம் நூர்,
பதிவு- 23,24 இரண்டு பாடங்களும் அருமை.
மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
அனைவருக்கும் வணக்கம்,கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவு- 25
---------------
File->open கொடுத்து நீங்கள் விரும்பும் ஒரு பிரிண்டர் படத்தை திறந்து கொள்ளுங்கள்.
நியுலேயர் கிளிக் செய்து
உங்களுக்கு பிடித்த ஒரு படத்தை கொண்டுவாருங்கள்.
மூவ் டூலை கிளிக் செய்து, இந்த பிரிண்டரின் out சைசுக்கு ஏற்ப அந்த படத்தை சரி செய்து கொள்ளுங்கள்.
இந்த படத்திற்கு ஒரு பார்டர் கொடுக்க வேண்டும்,
பிலன்டிங் ஆப்சன் கிளிக் செய்யுங்கள்.
படத்தில் உள்ள படி மதிப்பு கொடுத்து ஒகே கொடுங்கள்.
================================
இந்த படத்தில் இருந்து ஒரு டூப்லிகேட் லேயர் கிளிக் செய்யுங்கள்.
படத்தில் காட்டியபடி ஒன்றுக்கு மேலாக இந்த படத்தை நகர்த்துங்கள்.
============================
பேக்ரவுண்டு (பிரிண்டர்) லேயரை செலக்ட் செய்து,
செலக்ட் டூல் மூலம்
படத்தில் காட்டிய படி செலக்ட் செய்யுங்கள்.
அதை காப்பி செய்து, நியுலேயர் கிளிக் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
இந்த லேயர் எல்லா லேயரையும் விட மேல் இருக்க வேண்டும்.
மவுசால் இழுத்து மேலே விடுங்கள்.
இப்பொழுது படம் இப்படி தோன்றும்.
இனி இமேஜ் ரெடிக்கு செல்லலாம்.
-----------------------------------------------
பிரேம்-1-ல் மாற்றம் ஏதுவும் செய்ய வேண்டாம், அப்படியே விடுங்கள்.
பிரேம்2 (டூப்லிகேட் பிரேம்)
லேயர் 3 செலக்ட் செய்து,
கீ போர்டில் டவுன் ஆரோ கீ யை அழுத்துங்கள். படம் முழுவது தெரிந்த பின் விட்டு விடுங்கள்.
இனி. tween கிளிக் செய்து 20 பிரேம் கொடுத்து ஒகே கொடுங்கள்.
தேவையான நேரத்தை தேர்ந்தெடுத்து,சேவ் செய்து கொள்ளுங்கள்.
=================================
==================================
நன்றி
-------
நிறைய படங்களும், அனிமேஷன் படமும், இருப்பதால் இந்த திரி ஓப்பன் ஆக காலதாமதம் ஆகலாம். என்ற காரணத்திற்காகவும்.
மேலும்.
10 ஸ்டெப் வரை உள்ள ஒரு சில, பெரிய பதிவுகளும் இட இருப்பதாலும், பாகம் 2 ஆரம்பிக்கின்றேன்.
வேறு பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
உங்கள் கருத்துக்களை இட்டு, என்னை உற்சாக படுத்திய , உங்கள் அனைவருக்கும், மிக்க நன்றி.
மீண்டும் சிறிய இடைவேளைக்கு பின் பாகம் 2 ல் சந்திப்போம்.
மிகவும் அரிய பெரிய பணி நண்பரே!
மனம் திறந்து பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி.
செய்து பார்த்தேன்.....
மிக அருமை........
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks