Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: உன் கல்லறை(யருகில்)

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0

    Unhappy உன் கல்லறை(யருகில்)


    அறியாத வயது ..புரியாத பருவம்
    காதலின் அர்த்தம் புரியா சிறு சிசு
    உன் கண்கள் பேசிய..
    உன் உதடுகள் சொன்ன...
    காதல் மொழி தெரிய வில்லை ...!!

    அன்னையே என் உலகம் ஆனதால்
    அவர் சொல்லை மீறவில்லை
    பெரியோரின் தவறுக்கு சிறு பிள்ளை
    எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய் ..
    விளையாட்டு பிள்ளை போல அன்று ..
    இன்று விதி விளையாட்டின் கை பொம்மை நான்

    நீங்காத உன் நினைவுகள் ...
    சுட்டெரிக்கும் பல இரவுகள்
    இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
    உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
    கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
    உன்னை மறக்கும் கணமே
    மரணம் என் கை சேரட்டும் ..!!!

    நீ என்னோடு வாழ நினைத்த போது
    வாழ்க்கை என் கையில் இல்லை ..
    நான் உன்னோடு வாழ நினைத்த போது
    நீ என்னோடு இல்லை ..
    என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
    உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்

    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே ..
    இல்லையே மண்ணோடு என்றாய் ..
    சொன்னதை செய்து முடித்த புனிதன் நீஆனாய்
    உன்னருகில் வாழத்தான் எனக்கு வாய்ப்பில்லை
    உன் கல்லறை அருகில் உறங்கயேனும்
    இடம் கொடுத்து விடு..!!
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    சோபி அக்கா..
    இதன் முழு அர்த்தம் நான் அறிவேன்..
    நல்லா இருக்கு என்று சொல்ல மனம் வரவில்லை...
    நடந்ததை நினைத்துக்கொண்டு வருந்தாதே..
    வரிகளில் ஆழமான வலியை உணர்கிறேன்...
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    **************
    நீ என்னோடு வாழ நினைத்த போது
    வாழ்க்கை என் கையில் இல்லை ..
    நான் உன்னோடு வாழ நினைத்த போது
    நீ என்னோடு இல்லை ..
    என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
    உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்
    ********************
    உருக்கம்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வலி மிகுந்த வரிகள். காதலனையோ, காதலியையோ இழந்தவர்கள் அனைவரும் கல்லறை நாடினால்...உலகம் முழுவதும் கல்லறைகளே மிஞ்சும். காலத்தின் விளையாட்டில் கலந்து கொண்டு எதையும் எதிர்நோக்கும் உறுதியோடு வாழ வேண்டும்.

    வாழ்த்துகள் சோஃபி அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    மறக்க இயலாது.காதலின் பிரிவை.ஆனால் நினைக்க மறந்து வாழ்க்கயை எதிர்கொள்ள வேண்டும்.ஏனென்றால் கல்லறை முடிவு இல்லை. உருக்கமான கவிதை

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கவிதா சொன்னதுபோல,
    இந்தக் கவிதையில் உண்மையான ஏதேனும் உள்ளர்த்தம் இருப்பின்,
    இதற்காக வருந்தியே வாழத் தேவையில்லை.
    குற்றவுணர்வு தேவையேயில்லை.

    வாழ வைத்துப் பார்ப்பதுதான்
    காதல்...
    வருந்தி வாழ வைப்பது
    காதலாகா....

    மரணத்திற் காதலை
    வெளிப்படுத்துவோரிடம்,
    பரிதாபம் இருக்கட்டும்..,
    அனுதாபம் தேவையில்லை...

    மரணித்துச் சொல்வது காதலல்ல;
    மனதினைச் சொல்வதுதான் காதல்...
    சாவினில் தொடங்குவது காதலல்ல;
    வாழ்வினிற் தொடங்குவதுதான் காதல்...

    காதலுக்காக உயிரைக் கொடுக்கலாம்;
    காதலுக்காக உயிரைக் கொன்று,
    காதலித்த உயிரை வருத்தலாமோ...

    தன் காதலைச்
    சொல்லவும் வெல்லவும் வாழவும்
    தெரியாமல்,
    மரணத்தைத் தேடுபவர்களுக்கு
    மண்ணில் இடம் கொடுத்ததே அதிகம்...
    மனதில் இடம் கொடுக்கத் தேவையில்லை...

    மனதை உடைத்துப் பார்க்கும் காதலுக்காக,
    மனம் உடைந்து வாழத் தேவையில்லை...

    இத்தோடு உங்கள் வலிகளுக்கு முடிவுகட்டுங்கள் சோபி...
    இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை சோபிக்காமற் போய்விடலாம்...

    இதுபோன்ற கல்லறைகளுக்காக,
    இதயவறைகளைக் கல்லறையாக்காதீர்கள்...

    கவிதைக்குக் கொடுத்துவிட்ட உங்கள் மனதின் வலியை,
    கவிதையிடமிருந்து மீளப் பெறாதீர்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    கவிதா சொன்னதுபோல,
    இந்தக் கவிதையில் உண்மையான ஏதேனும் உள்ளர்த்தம் இருப்பின்,
    இதற்காக வருந்தியே வாழத் தேவையில்லை.
    குற்றவுணர்வு தேவையேயில்லை.

    வாழ வைத்துப் பார்ப்பதுதான்
    காதல்...
    வருந்தி வாழ வைப்பது
    காதலாகா....

    மரணத்திற் காதலை
    வெளிப்படுத்துவோரிடம்,
    பரிதாபம் இருக்கட்டும்..,
    அனுதாபம் தேவையில்லை...

    மரணித்துச் சொல்வது காதலல்ல;
    மனதினைச் சொல்வதுதான் காதல்...
    சாவினில் தொடங்குவது காதலல்ல;
    வாழ்வினிற் தொடங்குவதுதான் காதல்...

    காதலுக்காக உயிரைக் கொடுக்கலாம்;
    காதலுக்காக உயிரைக் கொன்று,
    காதலித்த உயிரை வருத்தலாமோ...

    தன் காதலைச்
    சொல்லவும் வெல்லவும் வாழவும்
    தெரியாமல்,
    மரணத்தைத் தேடுபவர்களுக்கு
    மண்ணில் இடம் கொடுத்ததே அதிகம்...
    மனதில் இடம் கொடுக்கத் தேவையில்லை...

    மனதை உடைத்துப் பார்க்கும் காதலுக்காக,
    மனம் உடைந்து வாழத் தேவையில்லை...

    இத்தோடு உங்கள் வலிகளுக்கு முடிவுகட்டுங்கள் சோபி...
    இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை சோபிக்காமற் போய்விடலாம்...

    இதுபோன்ற கல்லறைகளுக்காக,
    இதயவறைகளைக் கல்லறையாக்காதீர்கள்...

    கவிதைக்குக் கொடுத்துவிட்ட உங்கள் மனதின் வலியை,
    கவிதையிடமிருந்து மீளப் பெறாதீர்கள்...
    சொல்ல வார்த்தைகள் இல்லை...
    அருமை...
    அதை அறிந்து நடந்தால்
    கல்லறையை கூட பூந்தோட்டமாக மாற்றி விடலாம்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இன்பக்கவி View Post
    சோபி அக்கா..
    இதன் முழு அர்த்தம் நான் அறிவேன்..
    நல்லா இருக்கு என்று சொல்ல மனம் வரவில்லை...
    நடந்ததை நினைத்துக்கொண்டு வருந்தாதே..
    வரிகளில் ஆழமான வலியை உணர்கிறேன்...
    கவி நன்றி உன்னோட கருத்துக்கு ...!!
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    **************
    நீ என்னோடு வாழ நினைத்த போது
    வாழ்க்கை என் கையில் இல்லை ..
    நான் உன்னோடு வாழ நினைத்த போது
    நீ என்னோடு இல்லை ..
    என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
    உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்
    ********************
    உருக்கம்.

    நன்றி ..!
    உருகும் மெழுகாய் உடலை உருக்கும் நினைவுகள்
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வலி மிகுந்த வரிகள். காதலனையோ, காதலியையோ இழந்தவர்கள் அனைவரும் கல்லறை நாடினால்...உலகம் முழுவதும் கல்லறைகளே மிஞ்சும். காலத்தின் விளையாட்டில் கலந்து கொண்டு எதையும் எதிர்நோக்கும் உறுதியோடு வாழ வேண்டும்.

    வாழ்த்துகள் சோஃபி அவர்களே.
    நன்றி சிவா ஜி ..!!
    உங்கள் கருத்து எங்கள் கண்களில் அது செரியாக தென்படுவதில்லை ..காரணம் காலத்தின் விளிம்பில் இருப்பதினால்
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by நேசம் View Post
    மறக்க இயலாது.காதலின் பிரிவை.ஆனால் நினைக்க மறந்து வாழ்க்கயை எதிர்கொள்ள வேண்டும்.ஏனென்றால் கல்லறை முடிவு இல்லை. உருக்கமான கவிதை

    நன்றி நேசம் ..!
    முதல் காதலை என்றும் மறக்க முடியாது ..
    நினைவுகளே இன்று வாழ்க்கை ஆனதினால் மறக்க தெரியவில்லை ..
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    கவிதா சொன்னதுபோல,
    இந்தக் கவிதையில் உண்மையான ஏதேனும் உள்ளர்த்தம் இருப்பின்,
    இதற்காக வருந்தியே வாழத் தேவையில்லை.
    குற்றவுணர்வு தேவையேயில்லை.

    வாழ வைத்துப் பார்ப்பதுதான்
    காதல்...
    வருந்தி வாழ வைப்பது
    காதலாகா....

    மரணத்திற் காதலை
    வெளிப்படுத்துவோரிடம்,
    பரிதாபம் இருக்கட்டும்..,
    அனுதாபம் தேவையில்லை...

    மரணித்துச் சொல்வது காதலல்ல;
    மனதினைச் சொல்வதுதான் காதல்...
    சாவினில் தொடங்குவது காதலல்ல;
    வாழ்வினிற் தொடங்குவதுதான் காதல்...

    காதலுக்காக உயிரைக் கொடுக்கலாம்;
    காதலுக்காக உயிரைக் கொன்று,
    காதலித்த உயிரை வருத்தலாமோ...

    தன் காதலைச்
    சொல்லவும் வெல்லவும் வாழவும்
    தெரியாமல்,
    மரணத்தைத் தேடுபவர்களுக்கு
    மண்ணில் இடம் கொடுத்ததே அதிகம்...
    மனதில் இடம் கொடுக்கத் தேவையில்லை...

    மனதை உடைத்துப் பார்க்கும் காதலுக்காக,
    மனம் உடைந்து வாழத் தேவையில்லை...

    இத்தோடு உங்கள் வலிகளுக்கு முடிவுகட்டுங்கள் சோபி...
    இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை சோபிக்காமற் போய்விடலாம்...

    இதுபோன்ற கல்லறைகளுக்காக,
    இதயவறைகளைக் கல்லறையாக்காதீர்கள்...

    கவிதைக்குக் கொடுத்துவிட்ட உங்கள் மனதின் வலியை,
    கவிதையிடமிருந்து மீளப் பெறாதீர்கள்...
    நன்றி அக்னி ..!
    மனதினுள் வலிகள்
    வலிகள் வார்த்தைகளாய்
    வார்த்தைகள் கவிதையாய் பிறக்கிறது ..

    அவன் கல்லறையே என் இதய கோவில் ஆனதினால்
    என் இதயம் கல்லறை ஆவதில்லை ..
    364 நாளில் இறைவன் சந்நிதியில் கிடைக்காத வரம்.. சந்தோசம்
    அவன் கல்லறையில் 1 நாளில் கிடைத்து விடுகிறது..
    அந்த ஒரு நாளில் 364 நாட்கள் வாழ்ந்த சந்தோசம்..!!



    ரொம்ப பேசி விட்டேன் தவறு இருப்பின் வருந்து கிறேன்
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •