Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: லினக்ஸில் தமிழை தட்டச்ச...ஐபஸ்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    லினக்ஸில் தமிழை தட்டச்ச...ஐபஸ்

    அன்பு நண்பர்களே,

    நம்மில் சிலர் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்த தயங்குவதில் தமிழ் தட்டச்சு வசதி எப்படி இருக்குமோ என்ற கவலையும் முக்கியமானது. அந்த கவலை நமக்கு தேவையில்லை.

    உபுண்டு லினக்ஸில் தமிழில் தட்டச்ச தேவையான வசதிகள் உள்ளமைந்திருக்கிறது!

    ஐபஸ் (IBUS) - Intelligent Input Bus என்பதுதான் ஐபஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

    இதை இயக்க System - Preferences - Ibus Preferences என்பதை சுட்டவும்.

    பின்னர் Input method என்பதை திறந்து, Select an input method என்பதை சுட்டினால், வரும் அட்டவணையில் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கலாம்.

    அப்போது ஆறு வாய்ப்புகள் நமக்குத் தென்படும். தமிழ்99, ஃபோனடிக், இன்ஸ்கிரிப்ட்,ஐட்ரான்ஸ், டைப்ரைட்டர், ரங்கநாதன் (Tamil 99, phonetic, Inscript, Itrans, typewriter, lk renganathan) ஆகிய ஆறு வாய்ப்புகளில் நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்து Add என்பதை சுட்டினால், நாம் தெரிவு செய்தது அட்டவணையில் சேர்ந்திருப்பது தெரியும். தேவைக்கு தகுந்தபடி நாம் வரிசையை மாற்றவும் வசதி இருக்கிறது.

    ஜெனரல் என்ற தேர்வில் தேவையான விதத்தில் விசைப்பலகையின் விசைகளை அமைத்துக்கொள்ளலாம். இதில் நமக்கு தேவையான தமிழ் எழுத்துருவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ளலாம். பின்னர் நாம் கொடுத்திருக்கும் விசைகளின் அடிப்படையில் தமிழில் எளிதாக தட்டச்சலாம். நான் லினக்ஸின் உள்ளிருந்து தமிழில் ஃபோனடிக் முறையில் தட்டச்சி பதிவுகள் இட்டேன். மிகவும் எளிதாகவே இருக்கிறது.

    விண்டோஸில் தெரியும் தமிழ் எழுத்துகளை காட்டிலும் லினக்ஸில் தமிழ் எழுத்துகள் வெகு அழகாக தெரிகின்றன என்பது மேலும் ஒரு சிறப்பு!

    உபுண்டு 9.10 வெளிவருவதற்கு முன்னர் ஸ்கிம் (Smart Common Input Method) என்ற முறையில் தமிழில் தட்டச்ச வசதி இருந்தது என சில வலைத்தளங்களில் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் நம் மன்றத்தைப் பொறுத்த மட்டில் இனிமேல் லினக்ஸை நிறுவி பயன்படுத்துபவர்களுக்கு ஐபஸ் போதுமானது.

    ஐபஸ் முறையில் தட்டச்சுவதில் சிரமம் இருப்பவர்கள் தங்கள் ஐயங்களை கூறினால் விடை காண முற்படுவோம்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நன்றி பாரதி தட்டச்சு பலகையில் ஒரு குறைபாடு தமிழுக்கு இந்தியாவைதான் குறிப்பிடமுடியகிறது. வேறுநாடுகளின் தட்டச்சு விசைப்பலகையை வைத்துக்கொண்டு தமிழில் எழுத முடியாதா?

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு வியாசன்,
    நீங்கள் பாமினி முறை தட்டச்சு இல்லை என்பதை குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

    நீங்கள் தட்டச்சுப்பலகை என்று குறிப்பிடுவது எதை என கூறுங்கள். தமிழ்99, தமிழ் டைப்ரைட்டர், ஃபோனடிக் ஆகியவை உலகளாவியவையே. என்னைப்பொறுத்த மட்டில் தமிழில் திஸ்கி காலம் தொட்டு ஃபோனடிக் முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    தம்பி பாரதி
    ஆமாம் நீங்கள் குறிப்பிடுவதுபோல் பாமுனிமுறையில்தான் நாங்கள் தட்டச்சு செய்கின்றோம். அத்துடன் இந்திய தட்டச்சு அமைப்பிற்கும் ஐரோப்பிய தட்டச்சு (கீபோர்ட்) முறைக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றது. சில எழுத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.



  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு வியாசன்,

    லினக்ஸை நிறுவும் போதே எந்த விதமான விசைப்பலகையை நாம் பயன்படுத்துகிறோம் என்ற தேர்வு வருகிறதே..! அதில் யு.எஸ்.ஏ விசைப்பலகை டீஃபால்ட்..ஆக அமைந்திருக்கும். அதை நமக்கு தேவையான விசைப்பலகையை தேர்வு செய்ய வசதி இருக்குமே..? பார்த்தீர்களா..?

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு வியாசன், இந்த படம் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள்.


  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உபுண்டுவை தொடங்கி, கடவுச்சொல்லை தரும் நேரத்தில் திரையின் கீழே தேவையான விசைப்பலகையை தேர்வு செய்யும் வசதி இருக்கிறது வியாசன். நான் குறிப்பிடுவது வேறுபட்ட விசைப்பலகைகளை தேர்வு செய்வது குறித்து மட்டுமே.

  8. #8
    புதியவர்
    Join Date
    08 Jul 2010
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0
    ஒயின் வைத்து போட்டாசாப் பணன்படுத்துகையில் பல ஷாட்கட் கீகள் வேலை செய்யவில்லை - உதவி தேவை....
    அதே போல் உபுண்டு-வில் பாமினி பாண்டுபோல் யூனி கோடில் தட்டச்சு செய்ய உதவி தேவை...
    NHM Writer Install செய்தும் பலனில்லை....
    Ubuntu வில் தமிழ் யூனிகோடு லேஅவுட் மட்டுமே உள்ளது... இது பாமிணியிலிருந்து பல கீ வித்தியாச மாக உள்ளதால்....
    இந்த 2 பிரட்சனைக்கும் உதவிதேவை....

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    பாமினி முறையில் தட்டச்ச

    இத்தகவலை தந்த நண்பர் மயூரனுக்கும் அவரது வலைப்பூவிற்கும் நன்றி.

    இப்பகுதியில் இது இருக்குமெனில் புதியவர்களுக்கு முக்கியமாக பாமினி எழுத்துரு பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் இங்கும் இணைக்கிறேன்.

    ------------------------------------------------------------
    உபுண்டு 11.04 இல் தமிழ் வசதிகளை நிறுவுவதற்கான கையேடு


    [Computer Today மே மாத இதழுக்காக எழுதிய கையேடு]

    பொதுவாக எமக்குத்தேவையான வசதிகள்:

    1. தமிழில் எழுதும் வசதி (பாமினி வடிவத்த்தில் தட்டி யுனிகோடில் எழுதுதல், தமிழ் 99, ஆங்கில ஒலிப்பியல், ரெங்கநாதன் வடிவம்)

    2. எழுத்துருக்களை நிறுவிக்கொள்ளுதல்

    3. தமிழ் இடைமுகப்பு (Tamil Interface)

    == தமிழில் எழுதும் வசதி ==
    இதற்கு முதலில் தமிழ் உள்ளீட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும் m17n பொதியினை நிறுவிக்கொள்ள வேண்டும்.
    பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    1. கணினியை இணையத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.



    2. படத்தில் காட்டியுள்ளவாறு Terminal ஐ திறந்துகொள்ளுங்கள்.

    3. Terminal இனுள் பின்வரும் ஆணையை வழங்கி உங்கள் மென்பொருட் களஞ்சியத்தைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். கடவுச்சொல் கேட்டால் உங்கள் பயனர் கடவுச்சொல்லைக் கொடுங்கள்.

    sudo apt-get update4. m17n பொதிகளை நிறுவுவதற்கான ஆணையை வழங்குங்கள்.
    sudo apt-get update

    sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n


    அடுத்து ibus கட்டகத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு ibus-setup எனும் மென்பொருள் உதவும். . (இதனை Applications பட்டியலிலிருந்தே பெறலாம் என்றாலும் வசதிக்காக terminal வழியாகச் செய்வதற்குச் சொல்லித்தருகிறேன்). பின்வரும் ஆணையை வழங்குங்கள்.

    ibus-setup





    (படத்தில் காண்பிக்கப்பட்டபடி அது கேட்கும் கேள்விகளுக்கு “ஆம் (OK) ” என்று பதிலளித்துவிடுங்கள்).



    படத்தில் காட்டியுள்ளவாறு திறக்கும் சாளரத்தில் “Input Method” என்கிற கீற்றினை (Tab) திறவுங்கள்.



    படத்தில் காட்டியபடி “Select input method” என்பதைச்சொடுக்கி உங்களுக்குத்தேவையான தமிழ் உளீட்டமைப்பை “add” செய்துகொள்ளுங்கள்.




    (தமிழ் உள்ளீட்டமைப்புக்கள் எதுவும் காணப்படவில்லையாயின் ஒருமுறை Logout செய்து பின் Login செய்த பின் முயன்று பார்க்கவும்.

    6. ibus கட்டகம் நீங்கள் கணினியைப்பயன்படுத்தத்தொடங்கும்
    போதே இயங்கத்தொடங்கிவிடுவது வசதியானது. அதற்கு பின்வரும் ஆணையை terminal இல் வழங்குங்கள்.

    im-switch -s ibusஅவ்வளவுதான். நீங்கள் கணினியை மீளத்தொடங்கியபிறகு வலை உலாவி தொடக்கம் Word Processor வரை எல்லா மென்பொருட்களிலும் தமிழை உள்ளிடமுடியும்.
    தமிழ் விசைப்பலகையைப் பெற்றுக்கொள்ள CTRL + SPACE விசைகளை அழுத்துங்கள். மறுபடியும் அதே விசைகளை அழுத்தினால் ஆங்கில விசைப்பலகையைப்பெற்றுக்கொள்ளலாம்.
    நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீட்டமைப்பு / விசைப்பலகை வடிவங்களைத் தெரிவு செய்து வைத்திருந்தால் படத்தில் காட்டியவாறு அவற்றைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

    == பாமினி ==
    பொதுவாகத் தமிழ்ப்பயனர்கள் பயன்படுத்தும் விசைப்பலைகைகள் யாவும் m17n-contrib, m17n-db பொதிகளுக்குள் அடக்கப்பட்டிருக்கும். ஆனால் பாமினி வடிவம் அதில் உள்ளடக்கப்படவில்லை.
    பாமினி வடிவத்தில் யுனிகோடை தட்டெழுத விரும்புபவர்கள் இதற்கென தனியாக உளீட்டமைப்பை நிறுவிக்கொள்ளவேண்டும்.
    இதற்காக “பாலினி” என்ற உள்ளீட்டமைப்பை வடிவமைத்துள்ளேன்.
    அதனைத் தரவிறக்கிக்கொள்ள பின்வரும் ஆணையை terminal இல் வழங்குங்கள்.

    wget http://mmauran.net/downloads/ta-balini.mimதரவிறக்கி முடித்ததும் அக்கோப்பினை m17n அடைவிற்கு அனுப்ப வேண்டும்.

    அதனைச்செய்ய, பின்வரும் ஆணையைச் செயற்படுத்துங்கள்
    sudo cp ta-balini.mim /usr/share/m17n/ஒருமுறை கணினியை logout செய்து மறுபடி login செய்யுங்கள்.

    முன்னரே காண்பித்தபடி ibus-setup மென்பொருளைப்பயன்படுத்தி பாலினி விசைப்பலகையை add செய்துகொள்ளுங்கள்.

    ==எழுத்துருக்கள் ==
    தமிழுக்கென யுனிகோடு, திஸ்கி, TAM, TAB எழுத்துருக்கள் பல உபுண்டுவில் இயல்பிருப்பாகவே நிறுவப்பட்டிருக்கும்.
    அவற்றுக்கு மேலதிகமாக நீங்கள் எழுத்துருக்களை நிறுவிக்கொள்ள வேண்டுமானால் அதற்கு சிரமப்படவே வேண்டியதில்லை. எழுத்துருக்களை நிறுவுதல் லினக்சில் இப்போதெல்லாம் மிகவும் எளிமையானது.

    எழுத்துருவின் மீது இருமுறை சொடுக்கி (Double Click) அதனைத் திறந்துகொள்ளுங்கள்.
    “Install Font” என்பதை அழுத்துங்கள்.
    அவ்வளவுதான்



    ==தமிழ் இடைமுகப்பு ==
    1. Applications Menu வினுள் “Language Support” எனும் மென்பொருளை தெரிவு செய்து திறவுங்கள்.



    2. படத்தில் காட்டியபடி “Install new Language” என்பதைச் சொடுக்கி தமிழை நிறுவிக்கொள்ளுங்கள்.



    3. நிறுவல் முடிந்ததும் languages பட்டியலில் தமிழ் இருக்கக் காண்பீர்கள். “தமிழ்” என்பதை அப்படியே தூக்கிக்கொண்டுவந்து பட்டியலில் முதலாவதாக விட்டுவிடுங்கள் (Drag and drop)

    4. “Apply system wide” என்பதைச்சொடுக்குங்கள்.
    அடுத்ததடவை நீங்கள் Login செய்யும்போது உங்கள் கணினி முழுமையாகத் தமிழில் காட்சியளிக்கும்.
    __________________

    Last edited by பாரதி; 27-12-2012 at 10:20 AM.

  10. #10
    புதியவர்
    Join Date
    14 May 2011
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    9,119
    Downloads
    0
    Uploads
    0
    super notch. I have installed red hat linux yesterday only

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    பாரதி உங்கள் முயற்சியால் பல விடயங்களை உபுண்டுவில் கற்றுக்கொள்ள முடிகிறது. நன்றிகள். அதற்காக நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
    நீங்கள் பாலினி உள்ளீடு செய்வதற்காக வழங்கிய கட்டளையில் முதல் இரண்டில் சிறிய தவறு உள்ளது அதை திருத்திக்கொண்டுவிடுங்கள் அதனால் பலருக்கு உதவியாக இருக்கும்

    sudo apt-get update

    sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n

    இது சரியான கட்டளை
    நன்றி

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by வியாசன் View Post
    நீங்கள் பாலினி உள்ளீடு செய்வதற்காக வழங்கிய கட்டளையில் முதல் இரண்டில் சிறிய தவறு உள்ளது அதை திருத்திக்கொண்டுவிடுங்கள் அதனால் பலருக்கு உதவியாக இருக்கும்

    sudo apt-get update

    sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n

    இது சரியான கட்டளை
    நன்றி
    உங்கள் சரிப்படுத்தலுக்கு நன்றி வியாசன். நீங்கள் கூறியபடி திருத்தி இருக்கிறேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •