Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: தூய தமிழில் ஒரு கவிதை...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    தூய தமிழில் ஒரு கவிதை...!



    மன்னித்தருள்வாயா தேவி...?


    செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
    சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
    விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
    ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

    செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
    நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
    வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
    வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

    மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
    காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
    நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
    போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

    திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
    விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
    முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
    சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

    வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
    கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
    மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
    கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

    இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
    கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
    பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
    உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

    கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
    பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
    முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
    மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

    விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
    இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
    வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
    மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

    தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
    நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
    சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
    ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

    தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
    முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
    அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
    உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அருமை....மிக அருமை...

    உங்கள் கவிதையில் சதிராடும் தமிழைப் படித்து பரவசமாகிறது. ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்துவிழுகிறது சொல்ல வந்த கருத்து.

    அன்னை சரஸ்வதியை, அள்ளி அனைத்து அரவணைப்பாயா என மன்றாடும் வரிகளில் தெரியும் சுத்திகரிக்கப்பட்ட உள்ளம் மனதில் பாரமேற்றுகிறது.

    அற்புதமான கவிதை கலை. உங்கள் தமிழுக்கு நான் பரம ரசிகன். வாழ்த்துகள் நண்பா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    இப்படி எல்லாம் எழுத எல்லோராலும் முடியாது..
    என்னால் முடியவே முடியாது...
    தூய தமிழும் அருமை..
    நான் ஓவ்வொரு வரியையும் இரண்டு, மூன்று முறை படித்தே புரிந்து கொண்டேன்.
    நன்றிகள்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  4. #4
    புதியவர்
    Join Date
    02 Feb 2010
    Location
    கொழும்பு, இலங்கை
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் அருமை ஐயா... சொல்ல வார்த்தைகள் இல்லை.. வரி வரியாக பொங்குகிறது கவிதை
    அன்புடன்
    மன்னார் அமுதன்
    http://amuthan.wordpress.com/
    ================================
    பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
    அடைத்துக் கொண்டவை தான்
    எனக்கு விரல்களின் வழியே வீழ்கின்றன
    ================================

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உணர்வுப்பெருக்கும் தமிழ்ச்செருக்கும் ஒருங்கே அமைந்த மனம் மட்டுமே
    இத்தகைய கவிதை வடிக்க வல்லது..

    தேவியின் அருள் முழுதாய்க் கிட்டும் கலை..

    வாழ்த்துகள்..


    ( மார்பணைத்து என வந்திருக்க வேண்டுமா????)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    சிவாஜி, இன்பக்கவி, மன்னார் அமுதன், இளசு... அனைவருக்கும் நன்றி நண்பர்களே..!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    தமிழுக்கு அமுதென்று பேர்...
    அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
    உயிருக்கு நேர்...!

    தூய தமிழில் கவி படி(டை)த்த ஆசிரியருக்கு..
    என் மனமார்ந்த வணக்கத்தையும்.. நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவி விருந்து படைத்திட்ட
    கலை வேந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி...
    பாராட்டுக்கள்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தூய தமிழ் கவிதை மிக அருமை .இந்த கவியில் "கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்" இதில் "உனகழல்" எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை.இந்த கவிதையில் "சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்" இவரிகள் மிகவும் அருமை நானும் பலமுறை கண்டிருக்கிறேன் .ஆக இறுதியாக மனிதனின் செய்யும் தவறுகள் அனைத்தையும் கவிதை வடிவில் மிக அருமையாக தந்துளிளீர்.
    உள்ளன்புடன்
    த.க.ஜெய்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb

    கவி காளிதாசன் அன்னை சரஸ்வதியிடம் இப்படித்தான் வேண்டி இருப்பானோ ?






    உன்னை அண்டி பணிவது என் வேலை
    பணிந்த எனக்கு அருள்வது உன் வேலை
    என் எண்ணத்தில் அள்ளித்தா ஆயிரம் ஆயிரம்
    நான் தொடுத்து தருவேன் பா நூறாயிரம்

    என்னையும் சிறிய முயற்சி செய்ய வைத்தது உங்கள் எழுத்தாற்றல் .
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Ravee View Post
    கவி காளிதாசன் அன்னை சரஸ்வதியிடம் இப்படித்தான் வேண்டி இருப்பானோ ?






    உன்னை அண்டி பணிவது என் வேலை
    பணிந்த எனக்கு அருள்வது உன் வேலை
    என் எண்ணத்தில் அள்ளித்தா ஆயிரம் ஆயிரம்
    நான் தொடுத்து தருவேன் பா நூறாயிரம்

    என்னையும் சிறிய முயற்சி செய்ய வைத்தது உங்கள் எழுத்தாற்றல் .
    படம் பிரமாதம் ரவி. இவள் எந்த நாட்டு கலைவாணியோ?

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by வசீகரன் View Post
    தமிழுக்கு அமுதென்று பேர்...
    அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
    உயிருக்கு நேர்...!

    தூய தமிழில் கவி படி(டை)த்த ஆசிரியருக்கு..
    என் மனமார்ந்த வணக்கத்தையும்.. நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..!
    மிக்க நன்றி வசீகரன்..!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •