Results 1 to 5 of 5

Thread: அவகாசம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0

    அவகாசம்

    அவகாசம்

    சற்று இடமும், நேரமும் கொடு
    எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
    இளைப்பாறிக் கொள்கிறேன்

    ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
    மீண்டு வந்திருக்கிறேன்
    சூழ்ந்தேயிருந்தன
    நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
    சீறும் பாம்புகள் பல

    கொடும்வெப்பம் உமிழும்
    விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
    மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
    வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
    அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
    ஒரு பூப்போல இருந்தேனாம்
    சிறகுகள் கருகி அவையும்
    செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

    அரசகுமாரனாகிய அவனையேதான்
    தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
    சனியனென்றும் சாத்தானென்றும்
    பிடாரனென்றும்
    பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
    உண்மைகளை உரக்கச் சொல்வேன்
    மீளவும் கண்களைக் கட்டிக்
    கடத்திப் போகும் வரையில்

    அதுவரையில்
    உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
    பார்வையில் குரூரம் தவிர்த்து
    சற்று இடமும் நேரமும் கொடு
    எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
    இளைப்பாறிக் கொள்கிறேன்

    - எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை


    நன்றி
    # உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
    # உயிர்மை
    # திண்ணை

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆணின் ஆக்கிரமிப்பில் இருந்த பெண்ணோ
    ஆட்சியாளன் பிடியில் இருந்த பிரஜையோ...

    இடைவேளைதான் இது..
    இடர்கள் மீண்டும் தொடரும்..

    இடைத்தங்கலிலும் கொடுமை நிகழலாம்..
    ஆனால், வேண்டித் தணிக்க இயலலாம்..?

    கோரிக்கை பலிக்கட்டும் - இடைவேளை இடர் குறைய!

    மீண்டும் அரசகுமார-சாத்தானிடம் சிக்குவதைவிட மாற்றே இல்லையா?


    மருக வைக்கிறது...


    பாராட்டுகள் ரிஷான்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அவகாச கோரிக்கையில் அசுவாசமாய் வெளிப்படுகின்றன வலிகள்...!! அதை கொஞ்சமும் வீரியம் குறையாமல் இறுக்கத்துடன் வெளிப்படுத்தும் கவிதை வரிகள்..!!

    உணர்வுகளை கட்டுக்கோப்பாக வெளிப்படுத்தும் உங்கள் கவிதைகளுக்கு என் பாராட்டுக்கள் ரிஷான்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் இளசு,

    //ஆணின் ஆக்கிரமிப்பில் இருந்த பெண்ணோ
    ஆட்சியாளன் பிடியில் இருந்த பிரஜையோ...

    இடைவேளைதான் இது..
    இடர்கள் மீண்டும் தொடரும்..

    இடைத்தங்கலிலும் கொடுமை நிகழலாம்..
    ஆனால், வேண்டித் தணிக்க இயலலாம்..?

    கோரிக்கை பலிக்கட்டும் - இடைவேளை இடர் குறைய!

    மீண்டும் அரசகுமார-சாத்தானிடம் சிக்குவதைவிட மாற்றே இல்லையா?


    மருக வைக்கிறது...


    பாராட்டுகள் ரிஷான்! //

    உங்கள் கருத்து மிகவும் சரியானது நண்பரே. அழகான மொழிநடையில் கருத்தினைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் சுகந்தப்ரீதன்,

    //அவகாச கோரிக்கையில் அசுவாசமாய் வெளிப்படுகின்றன வலிகள்...!! அதை கொஞ்சமும் வீரியம் குறையாமல் இறுக்கத்துடன் வெளிப்படுத்தும் கவிதை வரிகள்..!!

    உணர்வுகளை கட்டுக்கோப்பாக வெளிப்படுத்தும் உங்கள் கவிதைகளுக்கு என் பாராட்டுக்கள் ரிஷான்..!! //

    உங்கள் கருத்துக்களும் பாராட்டுக்களும் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றன.
    நன்றி நண்பரே !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •