தமிழக காவ**ல்துறை தலைமை இய*க்குனராக லத்திகா சரண் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

தமிழக காவ*ல்துறை தலைமை இய*க்குனராக டி.ஜி.பி. கே.பி.ஜெயின் விடுமுறையில் செல்கிறார். எனவே, தற்போது காவ*ல்துறை பயிற்சி டி.ஜி.பி.யாக உள்ள லத்திகா சரண் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மாலதி நேற்றிரவு பிறப்பித்தார்.

ஏற்கனவே சென்னை நகர முதல் பெண் கா*வ*ல்துறை ஆணைய*ர் என்று பெருமை பெற்ற லத்திகா சரண், தற்போது தமிழகத்தின் முதல் பெண் காவ*ல்துறை தலைமை இய*க்குன*ர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வரு*ம் 13ஆ*ம் தேதிக்குப் பிறகு இவர் டி.ஜி.பி. பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. இந்திய அளவில் உத்ராஞ்சல் மாநிலத்தில் முதல் பெண் டி.ஜி.பி.யாக கஞ்சன் சவுத்திரி பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ள லத்திகா சரண் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் 1952ஆம் ஆண்டு மார்ச் 31ஆ*ம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் என்.எஸ்.தார், தாயார் பெயர் விஜயலட்சுமி. இவருக்கு ஒரேயொரு தங்கை மட்டும் உள்ளார். லத்திகா சரண் சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்சி (கணிதம்) பட்டம் பெற்றார். அதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி (உளவியல்) படித்து முடித்தார். 1976-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார்.

சென்னை நகரின் 90-வது காவ*ல்துறை ஆணையராகவு*ம், இந்தியாவிலேயே முதல் பெண் காவ*ல்துறை ஆணையராகவு*ம் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்று 15 மாதங்கள் திறம்பட பணியாற்றினார். அவருடைய காலக்கட்டத்தில்தான் பிரபல ரவுடி வெள்ளை ரவி என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தில்தான் சட்டசபை தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்தது.

தமிழக காவ*ல்துறையில் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி., தலைமையக கூடுதல் டி.ஜி.பி., பயிற்சி கூடுதல் டி.ஜி.பி. போன்ற உயர் பதவிகள் வகித்த லத்திகா சரண் தற்போது தமிழகத்தின் புதிய பெண் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். லத்திகா சரணின் கணவர் பெயர் அசோக். இவர்களுக்கு ருத்ரா என்ற ஒரே மகள் உள்ளார். டாக்டரான அவர் ஆ*ஸ்*ட்ரே**லியா*வி*ல் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார்.