அவுஸ்திரேலியா செய்தி
அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்தியர் கொலை : பாதி எரிந்த நிலையில் பிணம் மீட்பு
அவுஸ்திரேலியாவில் கடந்த 2 ஆண்டாக இந்திய மாணவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தடவையாக நிதின் கார்க் என்ற மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் மெல் போர்னில் அக்கவுண்டிங் படித்து வந்தார். பகுதிநேர வேலையாக “பாஸ்ட்புட்” ஒன்றில் வேலைபார்த்தார். அவர் வீட்டுக்கு திரும்பி வந்த போது மர்ம மனிதர்கள் அவரை ஓட ஓட விரட்டி தாக்கி குத்தி கொலை செய்தனர். இது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான பின்னணி குறித்து அவுஸ்திரேலிய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேலும் ஒரு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த வாரம் கிரிப்பித் என்ற இடத்தில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவருக்கு 25 வயது இருக்கும்.

அவர் யார்? எந்த நாட்டுக்காரர்? என தெரியாமல் இருந்தது. இப்போது அவர் இந்திய மாணவர் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அடையாளம் காண முயற்சித்து வருகிறார்கள்.

பிணம் கிடந்த இடத்துக்கு சென்று மீண்டும் ஆஸ்திரேலிய போலீசார் விசாரிக்கிறார்கள். இதில் மாநில குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து துப்புதுலக்க உதவி வருகிறார்கள்.

நன்றி ; செய்தி இணையத்தளம்