எழுதியவர்:- வேதநாயகம் பிள்ளையவர்கள்

முதுமை பற்றி நகைச்சுவையாக:-

"ஆசைக்கொரு கறுப்பு மயிரேனும் இலையே
ஐயஹோ! கொக்கு போல் நரைத்தது தலையே
காசுக்குதவாக் கிழமென்பது நிலையே
கன்னியர்க்கும் இனிநாம் கசக்கும் வேப்பிலையே"

தாய்மையின் பெருமை

"மாந்தவியாதிகள் எனையணுகாமலே
மருந்துகள் கொடுத்தீரே!
வாந்தியும் மலஜல அசுத்தமும் சகித்தென்னை
மார்புற எடுத்தீரே"

பெற்றோரைச் சுமையாக நினைக்காத பாங்கு:-

"இளமைபருவத்தில் என்னால் வருந்துன்பம்
எல்லாம் பொறுத்தீரே!
தளர்ந்தபருவத்தில் உம்மால் வருந்துன்பம்
சகிப்பது பெருஞ்சீரே!"