Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: டீக்கடை பெஞ்சில் கிறிஸ்மஸ்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0

    டீக்கடை பெஞ்சில் கிறிஸ்மஸ்

    இந்த கிறிஸ்மஸ்க்கு ‘நேரடியாய் போய்தான் பார்த்து வருவோமே’ என்று நினைத்து நிஜமாகவே இயேசு நம்மிடையே வந்தமர்ந்தால்......? எப்படி இருக்கும்.

    இயேசு ஒரு பாமரனாக டீக்கடை பெஞ்சில் தினத்தந்தி படித்துக் கொண்டு ‘‘ஒரு டீ போடுப்பா’’ என்றார்.
    டீக்கடைக்காரன் இவரைப் பார்த்து “என்னா இதுக்கு முந்தி பார்த்ததில்லியே.ஊருக்குப் புதுசா” என்றான்.
    “இல்ல பழசுதான்.இதுக்கு முந்தி ஒருதடவை வந்திருக்கேன்.”
    “அப்படியா? அய்யாவுக்கு எந்த ஊரு? என்ன பேரு?”
    “ஊரு ரொம்ப தூரம்.பேரு..பேரு..இயேசு.”
    “அட! என்னப்பா கடவுளுக்க பேர வச்சிருக்க.உண்மையிலேயே உன் பேரு அதானா?” நம்ப முடியாமல் பார்த்தான்.
    “சரி சரி. எதுவானா இருந்திட்டு போ. டீ’க்கு காசு வச்சிருக்கியா?”
    “இருக்கு”

    இந்த உரையாடல் முடிவதற்குள்ளே காதில் செல்போனை வைத்துக் கொண்டு ஒருத்தன் கத்திக்கிட்டே வந்தான். “டேய் மாப்ள.ஹேப்பி கிறிஸ்மஸ்டா”
    எதிர்முனைகாரன் சொன்னான் “அப்படி சொல்லி நீ எஸ்கேப் ஆக முடியாதுடோய். பார்ட்டி எப்ப.அதச் சொல்லு முதல்ல,”
    “ஆமா நீ எங்கடா இருக்க”
    “அண்ணாச்சி டீ கடை முன்னால வந்திரு. அங்கதான் இருக்கேன்.”
    “அடப்பாவி நானும் அங்கதாண்டா இருக்கேன்”
    “இங்கயா.எங்கடா.டீக்கடை பெஞ்சில ஒரு கிறுக்கன்தான் இருக்கான்”
    “திரும்பிப்பாரு.மடையா உன் முதுகுக்கு பின்னாலதாண்டா இருக்கேன்”
    “அடப்பாவி.இங்கதான் இருக்கியா. சரி வந்துதொலை. கொண்டாடி தீர்ப்போம்”
    பார்ட்டி ரெண்டும் பார்ட்டிக்குப் போக...

    குக்கரை தூக்கிட்டு ஒருத்தன் கத்திக்கிட்டே வந்தான்.
    “டேய் நான் என்ன கேணப்பயல்னு நினைச்சியா. வாரேண்டா இப்ப வாரேன்.”
    டீக்கடை காரன் கேட்டான் “ஏண்டே.இப்படி கோபமா கத்திகிட்டு வார”
    “எப்படியெல்லாம் நம்மளை ஏமாத்துறான் பாருண்ணே.”
    “அப்படி என்னடே ஏமாந்த?”
    “ஒண்ணுமில்லண்ணே.ஒரு குக்கர் வாங்க போனேனா.கிறிஸ்மஸ் சலுகை விலைன்னு சொன்னான். அஞ்சு விசில் அடிச்சா அரிசி வேகும்னு சொன்னான். ஆறு விசில் அடிச்சா பருப்பு வேகுமாம். பத்து விசிலுக்கு கறி வேகுமாம். நானும் ஆசைப்பட்டு மூவாயிரம் ரூபா கொடுத்து வாங்கினேனா. வீட்டுக்கு வந்து விசில் அடிச்சி அடிச்சி பாக்கிறேன்.ஒண்ணும் நடக்கலை.சரி நாம அடிச்சிதான் வராது போலிருக்குன்னு வீட்டில ஒவ்வொருத்தரா அடிச்சி அடிச்சி பாக்கிறோம்.ஒண்ணும் ஆகல.எப்படி ஏமாத்திட்டான் பாரு.அதான் அவனை இந்த குக்கராலே மண்டைய உடைச்சிட்டு வாரேன்.” ‘மப்ல அவன் உளறிகிட்டே போக..

    அந்த நேரம் பதறிக் கிட்டே இன்னொருத்தன் ஓடி வந்தான்.
    “ஏண்டே இப்படி கண்ணு மண்ணு தெரியாம ஓடி வர..”
    “மினி பஸ் போயிட்டாண்ணே”
    “அது எப்ப வரும்னு யாருக்குத்தெரியும்”
    “சே!அவசரமா போணுமே.என்ன செய்யிறது..”
    “ஏண்டா. யாருக்காவது உடம்பு கிடம்பு சரியில்லயா. ஆஸ்பத்திரிக்கு போகனுமா.”
    “அட போங்கண்ணே. சும்மா விளையாடிகிட்டு...”
    “என்னடா இது நான் கேட்டது விளையாடும்படியாவா இருக்கு. அப்படி என்னதாண்டா உனக்கு அவசரம்”
    “கிறிஸ்மஸ்க்கு தலைவர் படம் வருதில்ல. முத ஷோவில முத ஆளா பாக்கணுமில்ல.லேட்டாப் போனா டிக்கெட் கிடைக்குமா.இதெல்லாம் உனக்கு எங்க புரியும்.இந்த பஸ்காரன் எங்க போய் தொலஞ்சான்..ஏய்..ஏ ஆட்டோ...”
    ஆட்டோவை விரட்டிக்கொண்டே அவனும் போய்விட..

    இயேசுவைப் பார்த்து டீக்கடைகாரன் சொன்னான். “இதப்பாரு. நாலுபேரு வந்து போற இடம். டீயை குடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பு”

    பாவம் அவரை அடையாளம் கண்டு கொள்வார் யாருமில்லை.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நேசம், அன்பு, பகிர்தல், மன்னித்தல், வாழ்ந்து வாழவிடுதல்..பிறர்க்காக தியாகித்தல்..


    இயேசுபிரான் தந்த நற்கொடைகளை நினையாமல்
    மது, தள்ளுபடி, திரைப்படம் எனத் திசைமாறி மேயும் மந்தைகள்
    நடமாடிய தேநீர்க்கடை...

    நன்றாய்ப் படம் பிடித்த ஜார்ஜுக்குப் பாராட்டுகள்.

    எல்லா மதவிழாக்களும் இப்படித்தாம் இன்று மாறி நிற்கின்றன..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    ஜார்ஜ் உங்கள் கற்பனை கதை சுப்பர். "கிறிஸ்மஸ்"வருகின்றது. காலத்திற்கேற்ப கற்பனை.கதை வாசித்தேன் திந்திக்க வைக்கின்றது
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இதாவது பராவாயில்லை.. நல்லநாள் பெருநாளுக்கு தொலைக்காட்சியை பாருங்கள். வரும் நிகழ்ச்சிகளை... கடவுள் பார்த்தால் தூக்குப்போட்டாலும் ஆச்சரியப்பட இல்லை...

    கற்பனை என்று சொல்ல மனமில்லை. காரணம் உண்மையில் தற்போது நிஜக்கடவுள் மேல் நம்பிக்கை இல்லை. கடவுள் என்று சொல்வோரை தான் நம்பும் உலகமிது...

    வாழ்த்துக்கள் ஜார்ஜ்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    கொஞ்சநாள் கழித்து திரும்ப வந்து நல்லதொரு படைபோடு வந்திருக்கும் ஜார்ஜ் கு வாழ்த்துக்கள்...

    நகைச்சுவை கலந்த நல்லதொரு படைப்பு.. உண்மையிலே இறைவன் வந்தால் கூட கண்டுகொள்ளாமல் இதைப் போன்ற பல செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது...

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம் பாடல் நினைவுக்கு வந்தது.

    நல்லவேளை! இயேசுவை எவரும் அடையாளங்கண்டுகொள்ளவில்லை. அடையாளம் கண்டிருந்தால் அவர்கதி.....?
    மதம் பிடித்த மனிதர்களுக்கு மத்தியில் கடவுள் கண்மறைவாகவே இருக்கட்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்த கதை. கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் ஜார்ஜ் அவர்களே.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மறுபடியும் சில எதார்த்த நிகழ்வுகளின் நிழற்படமாக நண்பரின் கதை.

    கடவுள் பெயரால் செய்யப்படும் எதுவுமே கடவுளின் விருப்பபடியா நடக்கிறது? மனிதர்கள் அவர்களின் ஆசைக்கேற்ப பண்டிகைகளைக் கொண்டாடிக்கொண்டு, கடவுளை ஓரத்தில் வைத்துவிடுகிறார்கள்.

    அழகான கதை. வாழ்த்துகள் ஜார்ஜ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு நண்பர் இளசு...
    கச்சிதமாக இயேசு காட்டிய பண்புகளை பட்டியலிட்டுருக்கிறீர்கள்.
    ஆனால் அதை நான் ' நன்றாக படம் பிடித்திருக்கவில்லை' என்று எனக்கே தெரிகிறது.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழா.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    ஜனகன்... நன்றி
    கிறிஸ்மஸ் வாழ்த்து. [பார்ட்டி கேட்டிராதப்பா]
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    அன்புக்குரிய அன்பு ரசிகன்
    நீங்கள் சொல்வது சரிதான்.இப்பொதெல்லாம் பண்டிகைகளின் போது தெருக்கள் வெறிச்சென்றிருக்கின்றன. திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக தொலைக்காட்சிகளின் இரைச்சல்களே கசிந்து கொண்டிருக்கின்றன.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  11. #11
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    நட்புக்குரிய ரமேஷ்
    என்னை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி நண்பா.
    எந்தவொரு படைப்பையும் படித்தவுடன் இரண்டொரு வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கிற உங்கள் பண்புக்கு ஒரு சலாம்.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    கிறுஸ்துமஸ் ஆ ஒரு நாள் லீவ் உண்டு என்ன பண்ணலாம்? அது தான் தற்போதைய யோசனைகள் எல்லாம்!!

    கிறிஸ்துமஸ் மட்டுமல்ல அனைத்து பண்டிகைகளும் அப்படி ஆகி விட்டது

    உண்மையை விளங்க வைத்த பதிவு ஜார்ஜ் பாராட்டுக்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •