Results 1 to 5 of 5

Thread: 2012 : விமர்சனம்

                  
   
   
 1. #1
  Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
  Join Date
  04 Feb 2009
  Posts
  149
  Post Thanks / Like
  iCash Credits
  5,976
  Downloads
  0
  Uploads
  0

  2012 : விமர்சனம்

  இது ஒரு யுனிவர்சல் சப்ஜக்ட்யா...! அதுக்கு என்னென்ன வேணும்?

  கண்டிப்பா.. ஒரு ஸ்பானிஷ் மூஞ்சி வேணும் : செக்!
  சப்ப மூக்கு சைனாக்காரன் இல்லாமயா? : செக்!
  இந்தியாவை காட்டாம வேலைக்காவுமா? : செக்!
  ஒரு கருப்பு ஹீரோ.. ஒரு வெள்ளை ஹீரோ : செக்!
  உயிர வுடுறதுக்குன்னே.., ஒரு பத்து கேரக்டர்கள்: செக்!
  தியாகம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி: செக்! செக்!
  PG13 தான் கிடைக்கும். PG-ஐ கவர் பண்ண ரெண்டு குட்டி பசங்க : செக்!
  ஒட்டு மொத்த உலகத்தையும் அழிக்கனும்: செக்!
  அந்த அழிவு அமெரிக்காவுல இருந்துதான் ஆரம்பிக்கனும்: செக்!
  செண்டிமெண்ட்: செக்!
  செண்டிமெண்ட்: செக்!
  செண்டிமெண்ட்: செக்!
  செண்டிமெண்ட்: செக்!
  செண்டிமெண்ட்: செக்!
  .
  .
  .
  கதை: ஸ்டார்ட் கேமரா! ஆக்*ஷன்!!!  ஒரு இந்திய ஆராய்சியாளர்... உலகம் அழியப் போகுதுன்னு... முதன் முதலா... 2009-ஆம் வருஷம் கண்டுபிடிக்கிறார். அதை.. தன்னோட.. கருப்பு அமெரிக்க நண்பரோடு பகிர்ந்துக்கறார். அவரு போய்.. நேரா.. அமெரிக்க ஜனாதிபதி கிட்ட சொல்லிடுறார். மாயன் காலண்டரும் அதைத்தான் சொல்லுதுன்னு... எல்லா சய்ண்டிஸ்டுகளும் ஒத்துக்கறாங்க.

  உடனே... உலகத்தில் உள்ள பெரிய பெரிய பணக்காரங்க கிட்ட இருந்து 1 பில்லியன் யூரோ வாங்கிகிட்டு, சய்ண்டிஸ்டுங்க எல்லாம் சேர்ந்து... பெரிசா.. மூணு கப்பல் கட்ட ஆரம்பிக்கிறாங்க (ஆர்க்). இந்த கப்பல் மேட்டரை யாராவது வெளிய சொல்லப் பார்த்தா.. அவங்க பொசுக்குன்னு உயிர விட்டுடுறாங்க.

  இன்னொரு ஏரியால.. ஜான் புத்தகம் எழுதறாரு. ஆனா... லிமொஸின் ட்ரைவரா வேலை பார்க்கறாரு. டைவர்ஸ் ஆய்டுச்சி. அவருக்கு ஒரு பையன்.. ஒரு பொண்ணு. பழைய வைஃபுக்கு ஒரு காதலன்.

  ஜானுக்கும்.. ஒரு கட்டதுல... உலகம் அழியற மேட்டரு, மேட்டர் தெரியுது. அப்புறம்தான்... நீங்களே பார்த்தீங்களே! அந்த அஞ்சு நிமிட வீடியோவை!! படத்துல.. இன்னும் ஒரு 3-4 நிமிஷம் அதிகம். இவங்க.. எங்க போனாலும்....... அது காரா இருந்தாலும் சரி...., பஸ்ஸா இருந்தாலும் சரி...., ஃப்ளைட்டா இருந்தாலும் சரி.....!! அவங்க ஏரியா தாண்டுற வரைக்கும்...., பூமி மாதா.. பொறுத்துக்கறாங்க. ஏரியா தாண்டிட்டா.. பொங்கிடுறாங்க.

  அப்புறம்... ஜானும்.. அவர் கோஷ்டியும்.. சைனாவுல கட்டிகிட்டு இருக்கற... அந்த கப்பலுக்கு தஞ்சம் போகப் பார்க்கறாங்க. அமெரிக்க ஜனாதிபதி.. தன்னோட உயிரைப் பத்திக் கவலைப் படாம... மக்களோட மக்களா மண்டைய போட்டுடுறாரு. சைனாவுக்கு போனா... கப்பலுக்குள்ள போறதுக்குள்ள... தாவு தீந்துடுது. ஜானுக்கு இல்ல.. நமக்கு!

  போய்டுறாங்க! கதவை மூடப் பார்த்தா.... அம்மாம் பெரிய கப்பல் கதவை.. தக்குளூண்டு கயிறு தடுத்துடு. சுனாமி வருது... எரிமலை வெடிக்குது. யார் யாரோ.. சாவறாங்க.. யார் யாரோ... தியாகம் பண்ணுறாங்க......, “பரதேசிப் பயலே... பத்து செகண்டுல அணுகுண்டு வெடிக்கப் போவுதுடா... அந்த பச்சை வொயர கட் பண்ணுடா” ன்னு கமாண்டு கொடுத்தா..., கம்மனாட்டி.... ஒம்போது செகண்டுக்கு.... பழைய பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்துகிட்டு இருக்கான்.

  அப்புறம்... Roland Emmerich படங்களுக்கு க்ளைமேக்ஸை பத்தி சொல்லனுமா? அப்பிடியே கம்ப்யூட்டர்ல... “இங்க பாரு.. தண்ணியெல்லாம்.... வேகமா வடிஞ்சிகிட்டு இருக்கு” -ன்னு ஸ்க்ரீனை காட்டி.... உலகம் 0001 -ல ஆரம்பிக்குதுன்னு.... சொல்லிடுறாங்க.

  இந்த Roland -க்கு உலகத்தை அழிக்கறதை விட்டா... வேற வேலையே கிடையாதுங்க. எத்தனை படத்துலதான்... இதையே பண்ணுவாரோ தெரியலீங்க. கலிஃபோர்னியா.. பூரா.... பார்ட்டு பார்ட்டா... கழட்டிட்டாரு.

  இவுரு படத்துல நடிச்சா... ஆஸ்கராவது... பூஸ்கராவதுன்னு... நடிச்சவங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அந்த குட்டீஸ் உட்பட! எல்லாம்.. வீல்.. வீல்னு கத்திகிட்டே.. ப்ளூ ஸ்க்ரீன்ல ஓடுறாங்க. குதிக்கிறாங்க!! எமோஷனலா பேசறாங்க. அதுலயும்.... இங்கிலாந்து ராணிம்மா.. ஒரு செண்டி டயலாகை பேசிட்டு..., சாவகாசமா ரெண்டு செகண்ட் கழிச்சி கன்னத்து சதைய ஒரு ஆட்டு ஆட்டராங்க பாருங்க. புல்லரிச்சிரிச்சி!

  என்ன பண்ணியும்...., எவ்வளவு கண்ட்ரோல் பண்ணியும்... உடம்பை முறுக்கி கிட்டுதான் படம் பார்க்க முடியுது. Ground Breaking -ன்னு சொல்லுவாங்களே! அப்படி இருக்கு.... விஷுவல் எஃபெக்ட் எல்லாம்!! செஞ்சவங்களுக்கு சுத்திப் போடனும். அப்பவும்.. தண்ணிய காட்டும் போதெல்லாம்... தசாவதாரம்தான் நினைவுக்கு வருது. அந்த அளவுக்கு மோசமில்லீன்னாலும்..., செயற்கையா தெரியுது.

  அதுவுமில்லாம பாருங்க..! அது கடினமான நிலமா இருந்தாலும் சரி.... மணலா இருந்தாலும் சரி.., கட்டடமா இருந்தாலும் சரி..... எல்லாமே.. ஒரே பேட்டர்ன்ல தான்... பீஸ் பீஸா இடியுது.. உள்ள போகுது. ஒரு வேளை பூமி மாதாவும்... ஸ்பெஸிஃபிகேஷனை யுனிவர்சல் ஆக்கிக் கிட்டாங்களோ என்னமோ தெரியலீங்க.

  ஸ்க்ரீன் ப்ளே..: ஆங்...! பழைய பேப்பர் கடையில.. இவரோட.. இண்டிபெண்டண்ட்ஸ் டே-வோட ஸ்க்ரிப்ட் கிடைச்சிருக்கும் போல. மனுசன் ஒன்னு விடாம... அதுல இருந்தே எடுத்துக் கிட்டாரு. ஆனா.. பாருங்க.... இதுல..பிழிஞ்ச.. செண்டிமெண்டுக்கு..... அந்த சுனாமியே தேவலாம்னு ஆய்டுச்சி. அப்படி செண்டி சீன் வரும்போதெல்லாம்... தியேட்டர்ல.. குபீர்ன்னு சிரிப்பு. கொன்னுபுட்டாரு போங்க!

  பின்ணணி இசை..... அட போங்க தல!!!

  மாற்றுப் பார்வை பார்க்கலைன்னா.. அதெல்லாம் விமர்சனமே இல்லீயாமே?! பார்த்தீங்கன்னா..., மேட்டரை கண்டு பிடிக்கிறது நம்ம இந்தியர். அமெரிக்கா அவரை டீல்ல உட்டுடுது. அவரும்.. அவரு பொண்டாட்டியும்... பையனுக்கு முத்தம் கொடுத்துகிட்டே... பரலோகம் போய்டுறாங்க.

  கப்பல்.... சைனா தயாரிப்பு. பேச்சுக்கு மூணு சைனாக்காரங்க மட்டும்.. கப்பல்ல காப்பாத்தப் படுறாங்க. மத்தவங்க.. எல்லாம்.... ஐரோப்பா & அமெரிக்கா காரங்க மட்டும்தான். அதாவது.. ரோலண்ட் தன்னோட... இனவெறிய காட்டிட்டாரு. அவரு கணக்குப் படி... 0001-ல ஒரு இந்தியன் கூட உசுரோட இருக்கக் கூடாது. மாற்றுப் பார்வை எப்பிடிங்க?

  இங்க பாருங்க தல...! நான் என்ன சொன்னாலும்.. நீங்க இந்தப் படத்தை பார்க்காம விடப் போறது இல்ல...! அதனால.. தாராளமா போய் பாருங்க. விஷுவலுக்காகத்தான் நீங்க போகப் போறீங்க. அதுக்காகத்தான் நானும் போனேன்.

  அது நல்லா... இருக்கு..! ஆக்*ஷுவலி... ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு! வேற என்ன வேணும் சொல்லுங்க?!

  2012 = Visually Stunning

  நன்றி : ஹாலிவுட் பாலா

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  27,767
  Downloads
  17
  Uploads
  0
  பாக்கணும்.... கொல வெறியோட பாக்கணும்....!!

 3. #3
  இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
  Join Date
  21 Sep 2003
  Location
  Swiss
  Posts
  904
  Post Thanks / Like
  iCash Credits
  9,565
  Downloads
  27
  Uploads
  0
  கிம்.... பாக்கலாம் என்று இருந்தேன் இப்படி மிரட்டினா எப்படி...
  ஆனாலும் போய்த்தான் பாப்பமே
  அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
  இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


  மதன்

 4. #4
  இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
  Join Date
  21 May 2007
  Location
  பூமி
  Posts
  677
  Post Thanks / Like
  iCash Credits
  10,193
  Downloads
  2
  Uploads
  0
  எது எப்படியோப்பா ! க்ராபிக்ஸ்ல கலகலக்கியிருக்காங்க...
  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
  உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  13 Jan 2009
  Location
  நைஜீரியா
  Posts
  1,418
  Post Thanks / Like
  iCash Credits
  5,976
  Downloads
  236
  Uploads
  4
  என்னதான் விமர்சனம் வந்தாலும் பாக்காம விட மாட்டோம்ல

  அன்புடன்,
  ராஜேஷ்


  எல்லாம் நன்மைக்கே !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •