Results 1 to 12 of 12

Thread: மதியூகி முல்லா

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jun 2009
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0

    Wink மதியூகி முல்லா

    ஒரு நல்ல மழை நாள் முல்லா திண்ணையில் உட்கர்ந்திருந்தாராம்,அப்போது அவ்வழியே அயல்வீட்டுக்காரர் மழையில் நனையாமலிருக்க ஓடிச் சென்றுகொண்டிருந்தார்.அதைப்பார்த்த முல்லா குறும்பாக "என்ன நீங்கள் இப்படிச் செய்கிறீர்களே, கடவுள் நமக்காக மழையை பெய்ய வைக்கிறார் அதில் நனையாது இப்படி ஒழித்து ஒதுங்குவது கடவுளை அவமதித்ததாகாதா "என்றார்.அயல்வீட்டுக்கரனும் முல்லா சொல்வது நியாயம் என்றுணர்ந்து மீதித் தூரத்தை நனைந்தே சென்றாராம்.
    இவ்வாறிருக்க, இன்னொரு மழை நாள் அயல்வீட்டுக்காரன் திண்ணையில் இருக்க முல்லா நனையாது ஓடிச் சென்றுகொண்டிருந்தார்.அப்பொழுது முல்லாவைப் பார்த்து அயல்வீட்டுக்காரர் "என்ன நீங்கள் இப்பொழுது மழையை அவமதிக்கிறீர்களே" என்றார்.அதற்கு முல்லா "மழை கடவுளின் கிருபையால் கிடைப்பது ஆகவே அதுவும் புனிதமானது எனவேதான் அதை மிதிக்காமலிருக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் "என்றாராம்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    முல்லாவின் கதைகள் படிப்பதற்க்கு எப்போதுமே வித்தியாசமகத்தான் இருக்கும்...

    பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே..

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உபதேசம் ஊருக்குத்தான் தனக்கில்லை என்பது போல. கைதேர்ந்த பேச்சாளர்கள் எப்படிவேண்டுமானலும் மாற்றி பேசுவார்கள் என்பதை நியாபகப்படுத்துகிறது.

    முல்லா கதைகள் அனைத்தும் படிக்க சுவையாக இருக்கும்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    அறிவாளி எப்போதும் மிளிர்கிறான்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு உகந்த கதை.. நன்றி

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மற்றவர்களுக்கு ஒரு நியாயம் தமக்கு ஒரு நியாயம் என்பார்கள். அது இதுதான் போலிருக்கு.

  7. #7
    புதியவர்
    Join Date
    30 Oct 2009
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    அட அட அட...
    எனது சிறு வயதில் இது போல நிறைய முல்லா கதைகளைப் படித்திருக்கிறேன். இதுவும் ஒரு அருமையான கதைதான்.
    தமிழ்புறா.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    முல்லா கதைகள் தென்னாலி கதைகளைப் போல படிப்பதற்கு சுவையாகவும் அவரின் சிந்தைகள் வியக்கும் படியும் இருக்கும்...

    பகிர்ந்ததற்கு நன்றி அரவிந்தன்...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    சின்னவயதில் இப்படியான கதை களை அம்மா, ஆசிரியர் சொல்லும்போது அதன் அர்த்தம் எனக்கு முழுமையாக புரிந்ததில்லை. இப்போது புரிகிறது. நல்ல கதை தொடருங்கள்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நன்றி அரவிந்த. முல்லாகதைகள் புத்திக்கூர்மையின் வெளிப்பாடான கதைகள்.. தொடர்ந்து இணையுங்கள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தான் அறிவாளி என்பதை விளம்பும் வகையில் முல்லாவின் கதை..
    நன்றி அன்பரே...

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    27 Aug 2009
    Posts
    207
    Post Thanks / Like
    iCash Credits
    8,977
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல கதை.முல்லா சாமார்த்தியசாலி அப்படியே நம்மைப்போல

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •