Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: எம்.பி.க்கள் குழு அறிக்கை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    எம்.பி.க்கள் குழு அறிக்கை

    இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவலநிலையும் கோரிக்கைகளும் : எம்.பி.க்கள் குழு அறிக்கை

    சென்னை, அக்.15, 2009 : இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுவதாகவும், தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கியக் கோரிக்கையாக இருப்பதாகவும் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் தெரிந்து கொண்டு திரும்பிய டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழு தனது ஆய்வறிக்கையை முதலமைச்சர் கருணாநிதியிடம் புதன்கிழமை அளித்தது.

    அந்த அறிக்கையின் விவரம் :

    'இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

    அப்படி இல்லாமல் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் சில நாட்களில் பெருமழை அந்த பகுதியில் பெய்யக்கூடும் என்ற நிலைமை இருப்பதால், ஏற்கனவே வசதி இல்லாத இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் மழையினால் மேலும் துன்பப்படுவார்கள். மழையினால் ஏற்படும் சேறு, சகதிகளில் குடியிருக்கவும், படுத்து தூங்க வேண்டிய நிலைமை ஏற்படும்பொழுது எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவற்றை எல்லாம் இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

    இலங்கை அதிபர் ராஜபக்சேவை நாங்கள் சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை ஒவ்வொன்றாக அவரிடத்திலே தொகுத்துக் கூறிஇருக்கிறோம். இதை மனிதாபிமான உணர்ச்சியோடு அணுகி ஆவண செய்வதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார். அந்த மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை அல்லலுக்கு மத்தியிலே அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எல்லாம் அங்கிருந்து விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

    அவர்களை வெளியே அனுப்புவதற்கான ஓர் ஆரம்பத்தை தொடங்கி படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எங்களிடம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்ற நம்பிக்கை எங்கள் உள்ளங்களில் துளிர்க்க முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் ஏற்கெனவே இந்த முகாம்களில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு மேலும் சொல்லெண்ணா துயரத்தைத்தான் ஏற்படுத்தும்.

    இலங்கையில் உள்ள தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான உதவிகளை தற்போது செய்துகொண்டிருப்பதை விட மேலும் அதிகமாக இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும், அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கலந்து பேசப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அந்த வேண்டுகோள் விடவும் தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.

    அடிப்படை தேவைகளான உணவு, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், வீடு கட்டுவதற்கான உதவிகள், கல்வி வசதி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசிடமிருந்து உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அதையும் முதல்-அமைச்சர் கருணாநிதி மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தோம்.

    தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையையும் விளக்கிக் கூறினோம். அந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

    இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோக் பிரசாத்துடைய அணியினருடன் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதித்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீகாந்த், பத்மினி சிதம்பரநாதன், சேனாதிராஜா, சிவசக்தி, ஆனந்தன், முகமது இமாம், பிரேமசந்திரன், பொன்னம்பலம், ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம்.

    பின்னர் ஆனந்த் சங்கரி தலைமையிலான டி.டி.என்.ஏ. அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்தோம். முகாம்களில் உள்ளவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். போர் முடிந்த பிறகு சகஜ நிலை திரும்பிட இந்தியாவின் முயற்சிதான் ஒரே நம்பிக்கை என்றும் அவர்கள் கூறினார்கள்.

    வவுனியாவில் 'மணிக் பண்ணை' என்ற இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 8 முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்தோம். அந்த பண்ணை ஏறத்தாழ 2,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியை 8 முகாம்களாக பிரித்து ஒவ்வொரு முகாமையும் முள்கம்பி வேலிகளால் தடுத்து வீதிகளின் இருபுறமும் கழிவுநீர் சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குழாய்கள் மூலமாக குடிநீர் வசதிகள் செய்துகொடுத்துள்ளனர். சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் நாங்கள் சென்றபோது ஏராளமான மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டு தங்கள் குறைகளைச் சொன்னார்கள். உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள். எங்களை எப்படியாவது முகாம்களில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.

    பொதுவாக, அவர்களில் பலபேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருந்தது தெரிய வந்தது. தண்ணீர் இல்லாமல் குளிக்கவும் மலம் கழிக்கவும் அவர்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிராக மிக நீண்ட வரிசையாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்களை வழியெங்கும் நாங்கள் பார்த்தோம்.

    மேலும், ஓரிரு மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மிக மோசமான நிலையை சந்திக்க வேண்டியது இருக்கும். சதுப்பு நிலக்காடுகள் என்பதால் பருவமழை தொடங்கிவிட்டால் அவர்கள் பாடு மிகவும் கொடுமையாக இருக்கும். உட்காருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்றுநோய் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும்.

    குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும். அரசு சில கட்டமைப்பு வசதிகளை செய்து தந்திருந்தாலும் இதுபோன்ற முகாம்கள் மிகக்குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக்கணக்கில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்குவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

    இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து அவரிடம் வன்னித் தமிழ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் படும் கொடுமைகளை விவரித்தோம். பருவமழை தொடங்கும் முன்பாக அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

    அதுபோல, தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிலையை விளக்கிக் கூறினோம். அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அவர் மிக விளக்கமாக பதில் அளித்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் ஆங்காங்கே கண்ணி வெடிகள் புதைத்து இருப்பதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    அதன்பின்னர், இலங்கை அரசின் மறுகுடியமர்த்தும் அமைச்சர் ரிஷாத் பதுர்தீனை சந்தித்துப் பேசினோம். மாலை 3 மணிக்கு இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முகாம்களில் நிவாரணப் பணிகளையும் மறுகுடியமர்த்தும் பணிகளையும் மேற்கொள்ளும் சிறப்புக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

    தற்போது முகாம்களில் உள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் எல்லை மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை நீக்கும் பணியில் இலங்கை ராணுவம் இந்தியா, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் உதவியோடு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மறுகுடியமர்த்தும் பணிகளில் நில ஆவணங்களை பரிசீலித்து சரியான நபர்களைத்தான் குடியமர்த்தப்போவதாகவும் எனவே, சிங்களர்களையோ ஏனைய சமூகத்தினர்களையோ குடியமர்த்தும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆவணங்கள், படங்கள் மூலம் விளக்கிய பசில் ராஜபக்சே, ஓரிரு நாட்களில் மறுகுடியமர்த்தும் பணிகளைத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.

    இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். தொடர்ந்து அவர்கள் முகாம்களிலேயே இருக்க நேர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை எடுத்துரைத்தோம். அவர் எங்களுடைய கோரிக்கைகளை விரிவாக கேட்டு உரிய விளக்கங்களை தந்தார்.

    மொத்தத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவதிகளை சந்தித்து வந்தபோதிலும் இலங்கை அரசு அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இலங்கை அரசு இன்னும் 2 வாரத்தில் ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

    கடைசியாக, இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவை சந்தித்து இதே பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித் போகுலகாமாவை சந்தித்தபோது அவர் இலங்கை - இந்திய கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ர சிங்கேவையும் சந்தித்துப் பேசினோம்,' என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நன்றி - விகடன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நன்றி -விகடன்
    இலங்கையில் தமிழர்கள் படும் அவதியை விவரிக்க வார்த்தையில்லை : திருமாவளவன்


    சென்னை, அக்.15, 2009 : இலங்கை முகாம்களில் குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

    தனது இலங்கைப் பயண அனுபவம் குறித்து திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், "ஈழத்தமிழர்களை நேரில் கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக் கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள்.

    குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. 5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. "அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்க வில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.

    இந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக்காலத்துக்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தினோம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேரை விடுவிப்பதாக ஒத்துக் கொண்டனர். உறவினர்கள் விண்ணப்பம் செய்த வகையில் 8 ஆயிரம் பேரையும், மொத்தம் 58 ஆயிரம் பேரை 2 வாரத்தில் அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி விட்டு மற்றவர்களையும் மீள் குடியமர்த்துவோம் என்று தெரிவித்தனர்.

    இலங்கைக்கு சென்று வந்தது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. "எங்களை பார்க்க முதல் முறையாக இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிடம் சொல்லி எங்களை சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்'' என்று அவர்கள் கதறி அழுதனர். முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை வெளியேற அனுமதித்தது, எங்களுடைய பயணத்தால் கிடைத்த பயன் என்று கருதுகிறேன். மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியை இந்திய அரசு மூலமாக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொள்வார்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்ட 40 இந்தியர்களை இந்தியாவில் உள்ள சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது," என்றார் திருமாவளவன்

    ராஜபக்சேவின் நகைச்சுவை!

    தமிழக நாடாளுமன்றக் குழு கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது, "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர், ஆதரவாளர், நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் மறைந்திருப்பார். திருமாவளவனை நான் இப்போது சந்திக்க முடியாமல் போயிருக்கலாம்," என்று கனிமொழியிடம் ராஜபக்சே நகைச்சுவையாக கூறியதாகவும், அதை சிரித்தப்படியே திருமாவளவன் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

    இதுகுறித்து பேட்டியின் போது கேட்டதற்கு, "என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்,'' என்றார் திருமாவளவன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தமிழர் படும் அவல நிலை மாற இந்திய அரசு விரைவில் உதவி நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம்.

    இது சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற செய்திகள் மன்றத்தில் வெளியிடவேண்டாம்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    அறிஞரே இது சம்மந்தப்பட்ட கலைஞரின் பேட்டிக்கும் திருமாவின் பேட்டிக்கும் முரண்பாடு உள்ளதல்லவா? அப்படியானால் திருமாவின் பேட்டி பொய்யானதா?

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    எம்பிக்கள் கொடுத்த அறிக்கையும், திருமாவின் அறிக்கையும் ஒத்துப்போகிறது.
    -----------
    கலைஞர் பதவியில் இருப்பவர்... சில செய்திகளை உள்ளவண்ணமாக தர இயலாது. பதவியில் இருக்கும்பொழுது ஆளும் அரசை அணுசரித்து செல்லவேண்டும். அதனால் மழுப்பலாக பதில் கூறுவர்.... (கேட்டால்... அரசியல் சாணக்கியம் என்பர்)

    கேள்வி - முகாம்களில் தமிழர்கள் நிலை என்ன?

    பதில் - கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    தல இது ராஜபக்சவுக்கு பிரச்சாரமாக போகப்போகின்றது. உங்கள் மனச்சாட்சிப்படி பதில் சொல்லுங்கள்.

    1 வேறு யாரையும் முகாமிற்குள் அனுமதிக்க மறுத்தவர்கள் ஏன் இவர்களை அனுமதிக்கின்றார்கள்? முகாமினுள் அப்படி எதுவும் இல்லையென்றால் யாரும் பார்க்கலாமல்லவா?

    2 இது ராஜபக்சவுக்கு இந்தியா செய்துகொடுக்கின்ற ஒரு ஏற்பாடு இனிமேல் வேறுநாடுகள் ஏதாவது முகாமைப்பற்றி பேசினால் இந்த அறிக்கையை காண்பித்த தப்பிக்க முடியுமல்லவா?

    3 காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கின்ற இந்திய அரசு ஏன் எங்கள்மீது போரை திணித்தது?

    நன்றி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    திருமாவும் மற்ற உறுப்பினர்களும் அடைப்க்கப்பட்டிருக்கும் மக்களின் அவலத்தை தகுந்தபடி வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். முகாம்களில் மக்கள் சுகுசாக வாழ்வதாக குழுவில் எவரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆரம்பம் நல்லதொரு முடிவைத் தரட்டும். அதை நோக்கியே எங்கள் பார்வை இருக்கட்டும். சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுவதையும் தேவை இல்லாமல் கதைப்பதையும் தவிர்த்து ஆக வேண்டிய நல்லதைப் பாருங்கள்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    திருமாவும் மற்ற உறுப்பினர்களும் அடைப்க்கப்பட்டிருக்கும் மக்களின் அவலத்தை தகுந்தபடி வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். முகாம்களில் மக்கள் சுகுசாக வாழ்வதாக குழுவில் எவரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆரம்பம் நல்லதொரு முடிவைத் தரட்டும். அதை நோக்கியே எங்கள் பார்வை இருக்கட்டும். சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுவதையும் தேவை இல்லாமல் கதைப்பதையும் தவிர்த்து ஆக வேண்டிய நல்லதைப் பாருங்கள்.
    அமரன் முதல்வர் சற்று அசெளகரியம் என்று குறிப்பிட்டது போதாதா? அவர் இப்போது ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளர் ஆகிவிட்டார் போலும். அவருக்கு தன்னலம் சார்ந்த அரசியல்தான் தெரியும்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    அமரன் முதல்வர் சற்று அசெளகரியம் என்று குறிப்பிட்டது போதாதா? அவர் இப்போது ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளர் ஆகிவிட்டார் போலும். அவருக்கு தன்னலம் சார்ந்த அரசியல்தான் தெரியும்.
    *

    உங்களின் இந்த கேள்விக்கு அறிஞர் அண்ணாவின் இந்த பதிவில் பதில் இருக்கிறது வியாசன்..

    கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.


    எந்த விடயமும் குறையின்றி நிகழ்வதில்லை.. நிகழும் சம்பவத்தில் நமக்கு சாதகமாக எதாவது நிகழுமேயானால் அதனை ஏற்போம்..
    அன்புடன் ஆதி



  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    *

    உங்களின் இந்த கேள்விக்கு அறிஞர் அண்ணாவின் இந்த பதிவில் பதில் இருக்கிறது வியாசன்..

    கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.


    எந்த விடயமும் குறையின்றி நிகழ்வதில்லை.. நிகழும் சம்பவத்தில் நமக்கு சாதகமாக எதாவது நிகழுமேயானால் அதனை ஏற்போம்..
    ஆதி மலசலம் கழிப்பதற்கு மணித்தியாலக்கணக்கில் காத்திருப்பது சற்றுவசதி குறைவு மூன்றுநாளைக்கு 20லீற்றர் தண்ணீர் சற்று வசதிகுறைவு

    இதைவிட 15 நாளைக்குள் 58000 ஆயிரம் பேரை விடுதலைசெய்வதாக கருணாநிதி கூறியிருந்தார். இலங்கை அரசாங்கம் அப்படி எதுமே இல்லையென்று குறிப்பிட்டுள்ளது.

    அவர் நாலுமணித்தியால உண்ணாவிரதம் இருந்தவராயிற்றே .தானே போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறி முடித்துவிட்டு சென்றவர் வேறு என்ன செய்வார்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இந்த விஜயத்தின் விளைவாக, எமது சொந்தங்களை எங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்ற யாழ்ப்பாணத்தமிழர்களின் விண்ணப்பங்கள் தூசுதட்டப்பட்டு இன்று ஒரு தொகுதி மக்கள் முகாமிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்ந்து மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்ப்பட அழுத்தங்களைப் பிரயோகித்தால் நலம். நாம் குறைசொல்லிக், குழப்பம் விளைவித்து, நலக்கேடு ஏற்படுத்தாமல் இருப்போம்.

  12. #12
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    கலைஞர் வீட்டில் ஒரு 100 கட்சி ஆட்கள் போய் தங்கி பார்க்கட்டும், அவருக்கு அது வசதி குறைவா என்று தெரியும்.

    நம் வீட்டில் 4 பேர் வந்தாலே நம் வசதிகளை இழக்கிறோம், இலட்சம் மக்களை அடிமை போல் ஒரு கூண்டுக்குள் அடைத்து, வாழ சொன்னால் அது எப்படிங்க வசதியாக இருக்க முடியும், அதிலும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளம் வயதானவர்கள், குழந்தைகள், நினைக்கவே கொடுமையாக இருக்குது.

    இனியாவது அம்மக்களுக்கு நன்மை கிடைக்கட்டும், இனி ஒரு முறை இம்மாதிரியான வாழ்க்கை யாருக்கும் அமைய வேண்டாம் என்பதே இந்த தீபாவளி நாளில் இறைவனுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.
    பரஞ்சோதி


Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •